Home பாலியல் மனைவி சரியா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க என்ற கவலையா?

மனைவி சரியா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க என்ற கவலையா?

17

இல்லறத்தில் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் சில நேரங்களில் தம்பதியல் இடையே புரிதலில் எழும் பிரச்சினைகளினால் உறவுச்சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் ஒரு சில சமயங்களில் ஆண்களை தவறாக புரிந்து கொள்வதே இதற்குக் காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் எந்த விசயத்தில் பெண்களின் புரிதல் தவறாகிறது தெரிந்து கொள்ளுங்களேன்.

தம்பதியர் வேற்றுமை

தம்பதியரிடையே குணாதிசயங்களில் மாற்றம் உண்டு. ஆண் என்பவன் செவ்வாய் கிரகத்தைப் போன்றவன். இது செந்நிறமானது. அதிக வெப்பம் நிறைந்தது. பெண் என்பவர் வீனஸ் கிரகத்தைப் போன்ற குணமுடையவள். இது குளிர்ச்சி பொருந்தியது. இருவருக்குமிடையே புரிந்து கொள்ளும் தன்மையில் தவறுகள் எழ வாய்ப்பு உள்ளது.

உணர்வுகளை வெளிப்படுத்துவது

பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்கள் எப்போதுமே தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்ற எண்ணம் உடையவர்கள். இது ஒரு ஆண் வளர்ந்த விதத்தைக் குறிக்கிறது. தன்னுடைய எண்ணத்தை சரியாக வெளிப்படுத்தவும் தெரிவதில்லை. இதுவே பெரும்பாலான பெண்கள் ஆண்களை தவறாக புரிந்து கொள்ள நேரிடுகிறது.

எதிர்பார்ப்புகள் அதிகம்

எப்பொழுது எதிர்பார்ப்புகள் அதிகமாகிறதோ? அப்பொழுது உணர்வுபூர்மான எண்ணங்கள் ரத்தம் வழியாக மூளையில் நிரம்பியிருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் தவறாகும் பட்சத்தில் உறவுச் சிக்கல் ஏற்படும்.

தெளிவா பேசுங்க

பெண்கள் பொதுவாக அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே ஒரு பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விரும்புவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்துப் பேசுவது பெண்களின் வாடிக்கை. எதையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆவலும் பெண்களுக்கு உண்டு. அதேபோல் தனது கணவரும் தன்னுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நீங்கள் ரிசர்வ்ட் டைப் ஆக இருக்கும் பட்சத்தில் வெட்கப்பட்டுக் கொண்டு எதையும் பேசாமல் இருக்கும் பட்சத்தில் பெண்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அமைதியாக இருக்க வேண்டாம். மனைவியுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துங்கள். அப்புறம் இல்லறத்தில் எந்த சிக்கலும் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பிரச்சினைக்கு தீர்வு

பெண்கள், அதிக விவரங்களை கேட்டுக் கொண்டிருப்பது அனாவசியமானதல்ல, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவே என்பதை கணவர் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

பெண்கள் அதிகமான விஷயங்களை துளைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வது உறவுகளை நிலைநிறுத்த தேவையானது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆண்-பெண் புரிதல் எளிதாகி விட்டால் அங்கே பிரச்சினைகளுக்கான பாதை அடைபட்டு விடும்.