Home காமசூத்ரா கட்டிலில் பெண்ணை அணைப்பதால் உங்களுக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள்

கட்டிலில் பெண்ணை அணைப்பதால் உங்களுக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள்

34

அந்தரங்கம் அறிவோம்:உடலுறவை வெறும் இன்பம் தரும் விஷயமாக மட்டுமே நாம் கருதுகிறோம். உண்மையில் அது நன்மை தரும் விஷயம். ஆம், நிறைவான உடலுறவால் உடலும் மனமும் பல நன்மைகளைப் பெறுகின்றன. உடலின் ரசாயனங்கள், ஹார்மோன்கள், உள்ளுறுப்புகள், மனம் என, எல்லாம் சம்பந்தப்படும்’செக்ஸ்’ ஒரு சர்வரோக நிவாரணி என்பதை இந்த கட்டுரை உங்களுக்குத் தெளிவுபடுத்தும்.

யாருமே பேசத் தயங்கும், வெட்கப்படும் விஷயமாக செக்ஸ் இருக்கிறது. இனப்பெருக்கத்துக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அது நீடித்த பங்காற்றுகிறது. நல்ல தாம்பத்ய வாழ்வைக் கொண்டவர்கள், வாழ்வின் எல்லா செல்வங்களையும் பெற்றவர்களைப் போல மகிழ்ந்திருப்பார்கள். ஏன் தெரியுமா? உடலுறவு உடலின் தசைகளையும், மனதின் எண்ணங்களையும் அமைதிப்படுத்துகிறது. நிறைவையும், இளைப்பாறுதலையும் உண்டாக்குகிறது. வெறும் கடமைக்காக, சுயநலத்திற்காக அல்லாமல், காதலில் கசிந்துருகி இணையர்கள் முழு ஈடுபாட்டுடன் உடலுறவு கொள்ளும் போதும், ஒரு தியானத்தின் பயனை அது அளிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

மூட் இல்லை, அலுப்புத் தட்டிவிட்டது, சோம்பேறித்தனம், பரபரப்பான வாழ்க்கை, சூழல் இல்லை, குழந்தைகள் வளர்ந்துவிட்டன என, இந்தியத் தம்பதியர் செக்ஸை புறக்கணிக்க பல காரணங்களைப் பட்டியலிடுகின்றனர். செக்ஸ் வேண்டாம் என்பதற்கான காரணங்கள் அதிகரிக்க என்ன காரணமெனில், மணமான சில மாதங்களிலோ, ஆண்டுகளிலோ காதலை தொலைத்து விடுவதுதான். வாழ்நாள் முழுவதும் காதலைக் காப்பாற்றும் முனைப்பு கொண்ட தம்பதியரால் மட்டுமே ஆரோக்கியமான, நிறைவான உடலுறவைத் தக்க வைக்க முடியும். நல்ல தாம்பத்யத்தை அனுபவிக்கும் தம்பதியர், உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமானவர்களாக இருக்கின்றனர். செக்ஸால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொண்டால், அதில் நாம் அலட்சியமாக இருக்க மாட்டோம்.

எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் !

பெனிஸ்லவேனியாவில் உள்ள வில்க்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இம்யூனோகுளோபின் எனப்படும் நோய் எதிர்ப்புப் புரதத்தின் அளவு உடலில் அதிகமாகி வைரஸ், பாக்டீரியா மற்றும் கிருமிகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் நோய் தாக்குதல் குறைகிறது. நோய் தாக்குவதற்கு முன்னரே, அதை எதிர்த்து போராடக்கூடிய வலிமையை பெற்றுவிட்டால், அடிக்கடி உடலை தாக்கும் இருமல், சளி, தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவது குறையும்.

மன அழுத்தத்தை குறைக்கும் !

நாள் முழுக்க மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்பவர்கள், இரவு செக்ஸ் வைத்துக் கொள்வதால், அன்றைய நாளுக்கான மன அழுத்தம் நீங்கி உடலும், மனமும் லேசாகும். குறிப்பாக, உடலுறவின் உச்ச இன்பத்தை தொடும்போது, உடலுக்குள் என்டோர்பின் போன்ற பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் பெருக்கெடுக்கும். பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றிலிருந்து எளிதில் விடுபட, இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன. மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கு உடலுறவை ஒரு சிகிச்சையாக கூட பரிந்துரைக்கலாம்.

இதய ஆரோக்கியம்!

இரு இதயங்களை இணைக்கும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொல்வார்கள். அந்த இரு இதயங்களுக்குள் ‘துடித்துக்கொண்டிருக்கும் இருதயமும்’ வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால், அதற்கு செக்ஸ் மிகவும் அவசியம். கார்டியோ உடற்பயிற்சியினால் இதயம் பெரும் நன்மைகளை, செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் பெறமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு நிமிடத்தில் சுமார் 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. உடலுறவின் போது இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு, 120-ஆக எகிறும். ஒரு மையில் தூர நடைப் பயிற்சியின் பலனை, சில நிமிட இன்பம் தரும். தவிர, இணையர்களின் உணர்வும், மகிழ்வும் இதயத்தை இன்னும் வலுப்படுத்தும்.

ஆழ்ந்த உறக்கம்!

நிறைவான செக்ஸ் ஆழமான உறக்கத்திற்கு வழி வகுக்கும். வண்ணமயமான கனவுலகத்திற்குள்ளும் நம்மை அழைத்துச் செல்லும். முன் விளையாட்டுகளில் (foreplay) ஈடுபடும்போது, உடலிலிருந்து அதிகளவு ஆக்சிடோஸின் மற்றும் குறைந்த அளவிற்கு கார்டிசோல் ஹார்மோனும் வெளியாகின்றன. ஆக்ஸிடோசின் என்பது இணையருடன் நெருக்கத்தை உணர வைக்கும் ஹார்மோன். கார்டிசோல் என்பது மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன். இந்த ஹார்மோன்கள் வெளியாவதால் உடல் மேலும் இலகுவாகி, அமைதியாக உணர வைக்கும். அதனால் ஆழ்ந்த நித்திரை நிச்சயம் கிடைக்கும். எந்த எதிர்மறை எண்ணங்களும் மனதில் இருக்காது. இன்பமான துள்ளலுடன் தொடங்கும் இரவு… நிம்மதியான எட்டு மணிநேர தூக்கத்துடன் பொழுது விடியும்.

மூளை சுறுசுறுப்பாகும் !

ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதில் சீராக (ரெகுலராக) செக்ஸ் வைத்துக் கொள்பவர்களின் மூளை சுறுசுறுப்படைவதாக சொல்கிறார்கள். புதுமையான உணர்வு, வசீகர புன்னகை, மன அழுத்தம் இல்லாத நிலையில் இருப்பதால், அவர்களின் மூளைச் செல்களில் வித்தியாசம் தெரிவதாகவும், நுண்ணறிவுத் திறன் மேம்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தியானம் செய்தல், பிடித்த இசைக்கருவியை வாசித்தல், புத்தகம் வாசித்தல், தடையின்றி, தயக்கமின்றி பேசுதல் என, நமக்கு பிடித்த விஷயங்களில் மேலும் ஆர்வமாக செயல்பட முடியும்.

வலி நிவாரணி

‘கடும் தலைவலி, இன்றிரவு எதுவும் வேண்டாமே’ என உடல் உபாதைகளால் உடலுறவை தள்ளிப்போடுவது வழக்கம். இதையே ஓர் ஆராய்ச்சியாக மேற்கொண்டிருக்கிறது மான்செஸ்டர் பல்கலைக்கழகம். செக்ஸ் வைத்துக்கொள்வதால் மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க தொடங்கிவிடும். அதுவே தலைவலிக்கோ, உடல் வலிக்கோ சிறந்த நிவாரணியாகச் செயல்படும் என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கின்றனர். ஆக, உடலில் ஏதும் வலிகள் இருந்தால், அதற்கு மருந்தாக, உடலுறவே போதுமானது. மாத்திரைகள் தேவையில்லை.

ஆண்மை அதிகரிக்கும்!

மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கையைப் பெறுவதற்கான ரகசியம் என்ன தெரியுமா? பெரும் மகிழ்ச்சியை தரும் அளவுக்கு உடலுறவு கொள்வதே. இணையர்கள் முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து இணைவது, அவர்களுக்கிடையே காதலை மேலும் அதிகரிக்கும். அது, ஆண்மையை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பெண்களின் பிறப்புறுப்பின் லூப்ரிகேஷன், ரத்த ஓட்டம் மற்றும் நெகிழ்வு தன்மை போன்றவற்றை சீராக்குவதால் செக்ஸ், மேலும் இன்பமாகும்.

உடல் பொலிவு!

உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக செக்ஸ் கருதப்படுகிறது. பலவிதமான செக்ஸ் நிலைகளை முயற்சி செய்பவர்களுக்கு, உடற்பயிற்சியினால் உடல் பெறும் கட்டமைப்பை, உடலுறவினால் பெறமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, மேனியும் பொலிவுபெறும். அதாவது, சருமத்துக்கு தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்கும். நச்சுக்கள் வெளியேறி, மேனி பொலிவாக மாறும். உதட்டில் தொடங்கி உடலின் வடிவம், நிறம் என அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

என்றும் இளமை!

செக்ஸை ரெகுலராக மேற்கொள்பவர்கள் மற்றும் செக்ஸ் அதிகமாக வைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் என, 3500 ஆண்கள் மற்றும் பெண்களிடம், பத்து ஆண்டுகளாக ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களை, தோற்றத்தின் அடிப்படையில் வயதைக் கணிப்பது கடினமானதாக இருந்திருக்கிறது. அதாவது அவர்களது உண்மையான வயதிலிருந்து 7-12 வயது வரை குறைவாகவே கணிக்க முடிந்ததாம். அதுபோல, செக்ஸ் வைக்க விரும்பாதவர்கள் வயோதிகம் நிறைந்த தோற்றம் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். ஆரோக்கியமான உடலுறவு ஒருவரை என்றென்றும் இளமையாக வைத்திருக்கும். ஏனென்றால், உடலுறவின் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மேனியை சுருக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.