Home சூடான செய்திகள் ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் பெண்களின் சில வித்தியாசமான குணங்கள்!

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் பெண்களின் சில வித்தியாசமான குணங்கள்!

32

பெண்கள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் வெகு காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடியவையாக

உள்ளன. வெளித்தோற்றத்தை வைத்து விளையாடுவதை அவர்களிடம் மிகவும் அரிதாகவே காண முடியும். அழகான பெண்களை காண நமக்கும் வெட்கமாகவே இருந்தாலும், அவள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் வேறு பல விஷயங்களும் அவளிடம் நிறைந்துள்ளன.பெண்களிடம் உள்ள குணாதிசயங்களில் சில ஆண்களை மிகவும் ஈர்த்து, அவர்களை மிகவும் சாந்தமான பெண்ணாகவும் தோற்றமளிக்கச் செய்யும் தன்மையை கொண்டுள்ளன. இந்த கட்டுரையில் அது போன்ற 13 குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

விளையாட்டுகளை பார்த்தல் ஒரு பெண் தான் எவ்வளவு அதிகமாக கிரிக்கெட் விளையாட்டை விரும்புகிறாள் என்று வெளிப்படுத்தும் போது, அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் வேறு நிலைகளுக்கு சென்று விடுகிறது. நீங்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமைதியாக உங்களுக்கு கம்பெனி கொடுக்கும் பெண்களைப் பார்ப்பது அரிது.

விளையாடுதல் விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் பெண்களிடம் ஒரு விதமான கவர்ச்சி இருக்கும். அவள் ஒரு ஆணைப் போல செயல்படுவது மட்டுமல்லாமல், உங்களுக்கு ஒரு நல்ல துணையாகவும் இருப்பதாலேயே இந்த கவர்ச்சி வலுப்பெறுகிறது. டேட்டிங் செல்லும் போது டென்னிஸ் விளையாடுவதைப் போல கற்பனை செய்து பாருங்கள் நாங்கள் சொல்வது புரியும்!

சப்தம் போட்டு சிரித்தல் ஒரு பெண்ணுடைய சிரிப்பு அவளைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லிவிடும். சப்தம் போட்டு மற்றும் உறுதியாக சிரிக்கும் பெண் தன்னம்பிக்கையையும் மற்றும் அதிகளவிலான உற்சாகத்தையும் வெளிப்படுத்துகிறாள் எனலாம். அதே போல, வெளியில் நன்றாக சப்தம் போட்டு சிரிக்கும் பெண் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கத் தெரிந்தவள் என்றும் சொல்லலாம்.

மேக்கப் இல்லாமல் வெளியே வருதல் பெண்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி வெளிப்புற தோற்றத்தை நம்பியே உள்ளது. மேக்கப் செய்யாமல் வெளியே செல்ல எண்ணும் பெண்களைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. இவ்வாறு வெளித்தோற்றத்தை பற்றிக் கவலைப்படாமல், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகிப்புத்தன்மையுடன் உலா வரும் பெண்ணுக்கு பெருமளவு தன்னம்பிக்கையும் மற்றும் உணர்வு ரீதியான பாதுகாப்பும் இருக்கும்.

கேமிங் கேம் விளையாடும் போது உங்களுக்கு ஏற்ற சரி சமமான இணையாக ஒரு பெண் இருந்து விட்டால் எப்படி இருக்கும். நீங்கள் கேம் விளையாடும் ப்ளே ஸ்டேஷனை விரும்பும் பெண்ணைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பெண்களுடைய மென்மைத் தன்மைக்காக நாம் அவர்களை விரும்பி வரும் வேளையில், நம்முடைய அதிகமான ஸ்கோரை சவாலாக ஏற்று முந்தக் கூடிய பெண் துணை இருப்பதும் நல்லது தான்

எதிர்த்து போராடும் குணம் பெண்களை கிண்டல் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். அவள் எப்படி நடந்து கொள்வாள்? மீண்டும் யாரும் கிண்டல் செய்யாதவாறு மறைந்து கொள்வாள் என்று நினைக்கிறீர்களா? இது தவறான எண்ணமாகும். சாலையில் ஒரு கழுதை உதைக்க வந்தால், பாதுகாப்புக்காக திரும்ப ஒரு உதைக்கும் பெண்களும் உண்டு. தங்களுக்காக குரல் கொடுக்க அவர்கள் பக்கத்தில் ஒரு ஆண் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. மாறாக தங்களுடைய வலிமையைப் பயன்படுத்தவே விரும்புவார்கள்.

பைக் ஓட்டுதல் பைக் ஓட்டும் பெண்களை உங்களால் சாதாரணமாக பார்க்க முடியாது. ஆனால், அப்படி ஒரு பெண்ணிடம் பேசத் தொடங்கி விட்டால், அந்த உரையாடல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும். உங்களுக்கு பின்னால் அமர்ந்து வராமல், உங்களுடன் போட்டி போடும் வகையில் ஒரு பெண் நண்பர் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவது உண்மையில் பெரிய விஷயமாகவே இருக்கும்.

பீர் சாப்பிடுதல் வோட்கா என்பது பெண்கள் சாப்பிடக் கூடிய பானம் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், சாதாரணமாக ஒரு ரொட்டியையோ அல்லது வேறு பானத்தையோ வாங்கும் பெண்களை விட, பீர் சாப்பிடும் பெண்களிடம் ஈர்ப்பு அதிகம் இருக்கும்.

தனியாக ஊர் சுற்றுதல் நகர வாழ்க்கையின் சலிப்பூட்டும் பரபரப்பிலிருந்து விலகி இருக்கும் வகையில், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முதுகுக்குப் பின்னால் பயணத்திற்கான பொருட்களைத் தூக்கிக் கொண்டு செல்லும் பெண்களை கற்பனை செய்து பாருங்கள். அவள் சாகசம் செய்பவள் என்றும், விளையாட்டை விரும்புபவள் என்றும் வாழ்க்கையை அதன் பாதையில் சென்று ரசிப்பவள் என்றும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பொது அறிவு புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசும் போது பெண்களுக்கு அதில் தனி இடம் உண்டு. உங்களிடம் பொதுவாக நடைபெற்று வரும் அரசியல் விஷயங்களையும், உலகம் முழுவதும் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளையும் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு பொது அறிவுடைய பெண்களுக்காக ஆண்கள் கொலை செய்யவும் தயாராக இருப்பார்கள்.

ஜிம் செல்வது இந்திய பெண்களைப் பொறுத்த வரையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் உடற்பயிற்சிகள் செய்வது இல்லை என்று சொல்லலாம். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைக்கும் பெண் தான், தன் வீட்டு ஆண் மகனுக்கும் உடல் கட்டாக இருக்க வேண்டியது முக்கியம் என்று நினைப்பாள். தட்டையான வயிறும், நன்கு முறுக்கேறிய உடலும் கொண்ட பெண்களுக்கு போடுங்கள் 90 மார்க்!

ஆக்சன் படங்களை பார்த்தல் இராபர்ட் பேட்டின்சனின் சென்டிமெண்டான படங்களுக்குப் பதிலாக அர்னால்டு ஸ்வார்ஸ்நேகரின் ஆக்சன் படங்களை பார்க்க விரும்பும் பெண் என்றும் அமைதியுடன் இருப்பவளாவாள். எனவே, ஒரு ஆண் நண்பருடன் பழகுவதைப் போலவே இவளிடமும் நீங்கள் ப்ரீயாக பழக முடியும்.

தொழில்நுட்ப வல்லுணி லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பெண்களையும், கூகுள் கண்ணாடியில் உலகை வளைக்கும் பெண்களையும் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். இதுவே, போதும் வாழ்நாள் முழுவதும் பேசுவதற்கான உரையாடலைத் தொடங்குவதற்கு!