Home காமசூத்ரா அளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது!

அளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது!

48

நாம் ஒவ்வொருவரும் இந்த பிறவியில் அளவற்ற புண்ணியங்கள் செய்தால்,இறப்புக்குப்பின்னர்,பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சகல சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் செல்வந்தராகவும்,வேறு சில செல்வாக்குடனும் பிறப்போம்;

அளவுக்கதிகமாக பாவங்களைச் செய்தால்,இறப்புக்குப்பின்னர்,இந்த பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று வேதனைகள்,சோகங்கள்,வலிகள்,துக்கங்களை குறிப்பிட்ட காலம் வரை அனுபவிப்போம்;அவ்வாறு அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் மனிதனாகப் பிறப்போம்;
அதனால் தான் நாம் வாழும் இந்த பூமியை கர்ம பூமி என்று அழைக்கிறோம்.இந்த பதினான்கு உலகங்களையும் ஆட்சி புரிவது தெய்வசக்திகளே! நம்மை நமது பாவ புண்ணியத்தை நிர்ணயிப்பது எது தெரியுமா? காம உணர்வுதான்.எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும்,எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காம உணர்வு பொதுவானது.கோடி மனிதர்களில் ஒருவர் மட்டும் இந்த கலியுகத்தில் மஹானாகவோ,சித்தராகவோ,துறவியாகவோ பிறக்கிறார்கள்! அவர்களுக்கு மட்டுமே காம உணர்வு இராது;காம உணர்வு அவர்களின் மன உறுதியை மீறிச் செயல்படாது.ஆனால்,நாம் வாழும் கலியுகத்தில் சராசரி மக்களாகிய நாம் இந்த காம உணர்வால் என்ன பாடுபடுகிறோம்?
14 வயது முதல் 24 வயது வரை காமம் பற்றிய அடிப்படைப் புரிதல்களுக்கான காலகட்டம் ஆகும்.
24 வயது முதல் 34 வயது வரை காமம் பற்றிய நிஜங்களை நாம் ஒவ்வொருவருமே நேரடி அனுபவத்தின் மூலமாக உணர்ந்துகொள்கிறோம்;அப்படி உணர்ந்தப்பின்னர்,நமது வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்கிறோம்;இந்த கால கட்டத்தில் அடுத்தவரின் காம அவமானங்கள் நமக்கு வேடிக்கையாகவும்,கிளுகிளுப்பூட்டுவதாகவும் தெரிகின்றன;மனதில் உடனடியாகப் பதிகின்றன.ஆனால்,அதே அவமானம் நமக்கு வந்தால்?
34 முதல் 44 வயது வரை(சிலருக்கு 74 வயது வரையிலும் கூட) தெய்வ நம்பிக்கை குறைகிறது;அளவற்ற காம இச்சை தோன்றுகிறது.இவர்களெல்லாம் இளவயதான 14 முதல் 24 வயது வரையிலான காலகட்டத்தில் ஒழுக்க சீலர்களாக இருந்திருப்பார்கள்.இப்போது உடல் ஒத்துழைக்காத சூழ்நிலையில் மனமானது வேண்டுமென்றே காம இச்சையை பல மடங்கு தூண்டிவிடும்.
மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் காமத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி பலருடைய ஆன்மீக முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள்;சிலருடைய ஆன்மீக வளர்ச்சியை சிதைத்தும் விடுகிறார்கள்:காமம் சார்ந்த நிழல் அரசியல் இன்று நமது நாட்டின் மாவட்ட,மாநில,தேசிய அரசியலிலும்,அரசு அலுவலகங்களிலும் கொடிகட்டிப்பறக்கிறது.ஜோதிடப்படி விளக்கினால்,தேவையற்ற சிக்கல் வரும் என்பதால் விளக்குவது பாவம்;எனவே, விஷயத்துக்கு வருவோம்:=
இந்த சூழ்நிலையானது செல்போன்களின் பரவலும்,இணையத்தின் பரவலும் வரும் முன்பு இருந்த காமம் பற்றிய பொதுவாழ்வியல் உண்மைகள் ஆகும்.
ஆனால்,தற்போது 16 வயதிலேயே காமம் பற்றிய அனுபவங்களில் ஈடுபட்டு 26 வயதுக்குள் ‘அனைத்தையும்’ முடித்துவிடும் வேகமான வாழ்க்கையானது தமிழ்நாடெங்கும்,இந்தியாவெங்கும்,உலகமெங்கும் “அமெரிக்காவின் உலகமயமாக்கலால்” பரவிக்கொண்டிருக்கிறது.
இருந்தும் கூட,அளவற்ற காம இச்சையை விட்டு ஒரேயடியாக விலக மாட்டோமா? என்று ஏங்குபவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கே இந்தப் பதிவு எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களின் போதனைப்படியும்,வழிகாட்டுதல் படியும் வெளியிடப்படுகிறது.இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுவதால், காம இச்சை முழுமையாக நீங்கும் என்று நினைக்காதீர்கள்.அளவற்ற காம இச்சையானது வராது;தாம்பத்தியத்திற்கு எந்த பங்கமும் வராது.
இல்லறமல்லாத துறவறம் நாம் வாழ்ந்து வரும் கலிகாலத்தில் சாத்தியமில்லை;பல்வேறு காரணங்களால் பல இளைஞர்களும்,இளம் பெண்களும், திருமணம் செய்யாமலேயே துறவறத்துக்கு வந்துவிடுகிறார்கள்.இது மாபெரும் தவறு! காமத்தில் முழு இன்பத்தை அனுபவிக்க திருமணம் செய்து சுமார் 25 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னரே,நிஜமான துறவறம் அல்லது ஆன்மீகத்துக்குள் மனமானது தயாராகும்.ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கே ரமண மகரிஷி போல சிறு வயதிலேயே துறவறம் வரும்;மற்றவர்களெல்லாம் சும்மா உடான்ஸ் பார்ட்டிகள்.நாம் ரமண மகரிஷி போன்ற பிறவியாக இருந்தால் ஏன் ஊருக்குள் இருக்கப் போகிறோம்? காட்டுக்குள்ளே போய் தானே வாழ்வோம்? நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பாராவை எழுதியிருக்கிறோம்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை அழிந்து வந்தாலும்,ஓவராக ஆடியவர்கள் படாத பாடு பட்டுத்தான் ஆக வேண்டும்.

உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்கு ஒரு பவுர்ணமிக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும்போது நெய்தீபம் ஏற்றிடத் தேவையான பொருட்கள்,ஆறு வாழைப்பழங்கள்,பத்தி,வெற்றிப்பாக்கு,(கொட்டைப்பாக்கு பயன்படுத்தவும்),ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழம் குறைந்தது அரைக்கிலோ.
இவைகளுடன் ஒரு பவுர்ணமியன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் ஏதாவது ஒரு 30 நிமிடத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
ஜீவசமாதிக்குச் சென்று முதலில் நெய்தீபம் ஏற்றுங்கள்;பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கிழித்து வையுங்கள்.30 நிமிடம் அந்த மஹானிடம் மனதார அமர்ந்து ஒரு மஞ்சள் துண்டு விரித்து,அதில் அமர்ந்து அவரை நோக்காமல்(சைடாக அமர்ந்து)பிரார்த்தனை செய்யுங்கள்.(எதிலிருந்தெல்லாம் விலக வேண்டும் என்பதை மனதுக்குள் வேண்டுங்கள்)
பிரார்த்தனை நிறைவடைந்ததும்,திராட்சையையும்,டயமண்டுகல்கண்டையும் அங்கேயே விநியோகம் செய்யுங்கள்;சில ஜீவசமாதிகளில் ஆட்கள் அவ்வளவாக வருவதில்லை;அப்படிப்பட்ட இடங்களில் அனைத்துப்பொருட்களையும் விட்டுவிட்டு நேராக உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள்;
இப்படி பவுர்ணமி துவங்கி தொடர்ந்து 27 நாட்கள் இதே போல வழிபாடு செய்யுங்கள்.27 ஆம் நாளன்று அந்த ஜீவசமாதியில் அன்னதானம் செய்ய வேண்டும்;அது இயலாதவர்கள், அன்னதானத்துக்குத் தேவையான அரிசி,காய்கறிகளை (உங்கள் சக்திக்கு தக்கவாறு) வாங்கித் தரவும்.ஜீவசமாதியானது யாருடைய நிர்வாகத்திலும் இல்லாமல் இருந்து,ஊருக்கு வெளியே தொலைதூரத்தில் இருந்தால்,உங்கள் ஊரில் இருக்கும் புராதனமான சிவாலயத்தில் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்துவிடுங்கள்:இப்படிச் செய்து முடிப்பதன் மூலமாக உங்களுடைய அளவற்ற காம இச்சை சராசரியாகிவிடும்.
இந்த நாட்களிலிருந்து எதெல்லாம் உங்கள் மனத்தை அளவற்ற காம இச்சையைத் தூண்டுவதற்குக் காரணமாக இருக்கிறதோ அவைகளிலிருந்து விலகி இருங்கள்;