Home சமையல் குறிப்புகள் சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை…

சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை…

27

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம் . இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்னவோ,சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்,கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.