செக்ஸ் வீடியோக்களை பார்த்து பாலியல் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர் !

அதிகளவில் செக்ஸ் வீடியோக்களை பார்க்கும் இளம் வயதினர்தான் அதிகளவும் பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காலகட்ட மக்களை விட தற்போது உள்ள மக்கள் அதிகளவில் செக்ஸில் ஈடுபடுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. அதே சமயம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றால் அவர்களின் செக்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் செக்ஸ் வீடியோக்களை அதிகளவில் பார்க்கும் இளைஞர்கள், பாலியல் வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகளவு பார்க்கப்படும் செக்ஸ் வீடியோக்களால் மனரீதியாக அதன் உந்துதலுக்கு ஆளாகும் இளைஞர்கல் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் சிறுவயதினில் இருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலியல் கல்வி கொடுத்தாலும், செக்ஸ் உணர்வால் உந்தப்பட்ட இளைஞனிடம் இருந்து பெண்களை காப்பாற்றுவது கடினம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் ஐரோப்பாவில் போர்ன் சைட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த வீடியோக்கள் பார்ப்பற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


yoast seo premium free