Home ஜல்சா பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்திய ஜேர்மனிய மொடல் 33 இலட்சம் ரூபா அபராதம் விதிப்பு

பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்திய ஜேர்மனிய மொடல் 33 இலட்சம் ரூபா அபராதம் விதிப்பு

19

18812_C620C5F71B38F321048171596A52A715ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நட்சத் திரமும் மொடலுமான யுவதி ஒருவர் பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் அவர் 20,000 யூரோ (சுமார் 33 இலட்சம் ரூபா) அபராதம் செலுத்த வேண்டும் என அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீனா லிஸா லோபிங் எனும் இந்த யுவதி, கால்பந்தாட்ட வீரர் ஒருவரும், ஜேர்மனிய கால்பந்தாட்ட கழக மொன்றின் ஊழியர் ஒருவரும் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.2012 ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறினார்.ஆனால், மேற்படி கால்பந்தாட்ட வீரரும், ஊழியரும் ஜீனா லோபிங்கின் சம்மதத் துடனேயே அவருடன் தாம் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறினர்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் லீனா பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து, சந்தேக நபர்களான ஆண்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது. அதேவேளை, பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியமை தொடர்பாக ஜீனாவுக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.மேற்படி பாலியல் உறவின் போது பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியாகியது.அவ் வீடியோ ஒளிப்பதிவு மேற்கொள்ளப்பட்டபோது அதை ஜீனா ஆட் சேபித்தாரா இல்லையா என்பதும் விசாரணையில் முக்கியத்தும் பெற்றது.ஜீனா லோபிங் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்ல எனவும் அவர் விசாரணை அதிகாரிகளை தவறாக வழிநடத்தினார் எனவும் அரச தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இறுதியில் ஜீனா விருப்பத்துடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டார் எனவும் பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதற்காக அவர், 20,000 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி அன்ட்ஜே எப்னெர் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டார்.இத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதா என்பது குறித்து ஜீனாவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜீனாவின் சட்டத்தரணி பக்ஹார்ட் பெனெக்கன் தெரிவித்துள்ளார்.