Home ஜல்சா காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்

காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்

28

ஒரு விளம்பரத்தில் கால்களில் முடியுடன் நடித்ததால் தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஸ்வீடன் மாடல் அர்விதா பிஸ்டிரோம் கூறுகிறார்.
26 வயதான அர்விதா, அடிடாஸின் புதிய ஷூ ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் யு டியூப்பில் வெளியான பிறகு, டஜன் கணக்கிலான தவறான மேசேஜ்கள் அவருக்கு வந்துள்ளன.
சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடியாக தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகச் சென்று பலரது கவனத்தை ஈர்த்தது.
“கடந்த வாரம் அடிடாஸ் விளம்பரத்தில் வந்த எனது புகைப்படத்திற்கு மோசமான எதிர்வினைகள் வந்தன” என அவர் கூறுகிறார்.

நான் எந்த உடல் குறையும் இல்லாத வெள்ளை பெண். காலில் முடி இருப்பது மட்டுமே ஒத்துபோகாத விஷயம்” என்கிறார் அவர்.
மாடலான அர்விதா புகைப்பட கலைஞரும் கூட.
இந்த விளம்பரத்தில் “பெண் அழகியலைப் பயன்படுத்தி, பெண்ணியத்தையும் பாலின சமன்பாட்டையும் கேள்வி எழுப்புகிறார்” என அடிடாஸ் கூறியுள்ளது.
அர்விதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின் தொடர்பாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
“உங்களது உடலில் ஷேவ் செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என பிரையன் என்பவர் கூறியுள்ளார்.


“எனது கால்களில் முடி இல்லை. கால்களில் முடி வைத்திருப்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தால் சிறந்த விஷயம். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்கிறார் இனா.
படைப்பாற்றல், பன்முகத்தன்மை மற்றும் தனிச்சிறப்பான எண்ணங்கள் கொண்ட அர்விதா போன்ற படைப்பாளியுடன் பணியாற்றியதை கெளரவமாகக் கருதுகிறோம்” என ஓர் அறிக்கையில் அடிடாஸ் கூறியுள்ளது.
தனது சக கலைஞரான மோலி சோடாவுடன் இணைந்து பிக்ஸ் எனும் புத்தகத்தை அர்விதா வெளியிட்டுள்ளார்.
அதில், தனது சமூக விதிகளை மீறியதாக இன்ஸ்டாகிராமால் நீக்கப்பட்ட பெண்களின் உடலைக் காட்டும் 270 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.