Home ஆரோக்கியம் உண்மையாகவே பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

உண்மையாகவே பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

30

பெரும்பாலான மக்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. குங்குமப்பூ பாலில் சேர்த்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்தால் பிறக்கிற குழந்தை சிவப்பாகப் பிறக்குமென்று.

பொதுவாக எல்லா பெண்களுக்குமே தன் வயிற்றில் வளரும் குழந்தை கருப்பாகப் பிறந்துவிடக்கூடாது என்று நினைப்பதுண்டு. அதனாலேயே கர்ப்ப காலத்தில் பாலுடன் குங்குமப்பூ சேர்த்து சாப்பிடுவதுண்டு.

உண்மையிலேயே குங்குமப்பூ சேர்த்து குடிப்பதால் குழந்தையின் நிறம் கூடுமா?… சருமம் பொலிவடையுமா?…

குங்குமப் பூவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது.

குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

இயல்பாகவே குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் பொலிவுடன் காணப்படும். அதனால் குங்குமப்பூ கலராக்கும் என்று பொருளில்லை.

உலகில் கிடைக்கும் 90 சதவீத குங்குமப்பூவை ஈரான் தான் உற்பத்தி செய்கிறது. ஸ்பெயின், மொராக்கோ போன்ற நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரிலும் இது விளைகிறது.

2.5 லட்சம் முதல் 5 லட்சம் பூக்களில் இருந்து 1 கிலோ அளவுக்கு குங்குமப்பூ கிடைக்கிறது. இது safforn மலரின் மகரந்தம் தான் நாம் வாங்கும் குங்குமப்பூ.