Home ஜல்சா ‘அந்தரங்கம்’ நிகழ்ச்சி அழகி கிரிஜாஸ்ரீ சினிமாவுக்கு வர்றாங்க!

‘அந்தரங்கம்’ நிகழ்ச்சி அழகி கிரிஜாஸ்ரீ சினிமாவுக்கு வர்றாங்க!

43

GirijaSriகேப்டன் டி.வி’யில் ஒளிப்பரப்பாகிய ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியை விட அதை தொகுத்து வழங்கிய கிரிஜாஸ்ரீ மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் ‘ஐ’ டிவியில் இவர் தொகுத்து வழங்கும் ‘அந்தரங்கம்’ நிகழ்ச்சியும் பாப்புலரானது. தற்போது பல இடங்களில் ரசிகர் மன்றம் தொடங்கி வருகிறார்களாம். (கோயில் கட்டாமல் இருந்தால் சரி)

நேயர்களின் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு மிக சாமர்த்தியாக பதிலளித்து மனம் நோகாமல் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவையில்லாமல் கலர் கலரான மாடர்ன் உடைகளில் வந்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்கிறார். இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தற்போது வருகிறதாம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது…

“பாலியல் நிகழ்ச்சி மூலம் எனக்கு பெரிய பாப்புலாரிட்டி கிடைத்தது உண்மைதான். ஆனால் அதைவிட நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகம் வருகிறது. என் அம்மா என்னை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து வருகிறார். அவர்களின் புரிதல் எனக்கு ஆதரவாகவுள்ளது. இந்த மருத்துவ நிகழ்ச்சிகள் மூலம் தவறான பாதையில் செல்லும் இளைஞர்கள், இளவயது பெண்களை நல்வழிபடுத்தியிருக்கிறோம். தம்பதிகள் குழந்தை பாக்கியம் அடைந்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளித்துள்ளது.

கடந்த ஆண்டே எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. அப்போது தயக்கமிருந்தது. இப்போது தயாராகிவிட்டேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன்” என்கிறார் இந்த ‘அந்தரங்கம்’ நிகழ்ச்சி அழகி.