Home ஜல்சா அந்தச் சிறுமி தேவதை போல் இருந்தாள்- மயக்க மருந்து செலுத்தி கற்பழித்தேன்!! வைத்தியரின் வாக்குமூலம்

அந்தச் சிறுமி தேவதை போல் இருந்தாள்- மயக்க மருந்து செலுத்தி கற்பழித்தேன்!! வைத்தியரின் வாக்குமூலம்

19

குஜராத் மாநிலத்தில் வைத்திரர் என்ற போர்வையில் இருந்த காமுகனால் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகி உள்ள 14-வயது சிறுமி, மருத்துவர்கள் அனுமதியுடன் கருவை கலைத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து இன்று காலை அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் குழு மூலம் கரு கலைக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துள்ளது. அப்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கவந்த மருத்துவர் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஊசியை செலுத்தி, பின்னர் அவரை பாலியல் பாத்காரம் செய்துவிட்டார். மாணவிக்கு வயிறுவலி வந்த பின்னரே, அவர் கர்ப்பமாக உள்ள சம்பவமும், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் வெளியே தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் சிறுமிக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர் மீது சந்தேகப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போது சிறுமியை தான் கற்பழித்தது பற்றித் தெரிவித்துள்ளான். அவன் தெரிவிக்கும் போது குறித்த சிறுமி தேவதை போல் அழகாக இருந்ததால் எனக்கு சபலம் ஏற்பட்டு மயக்க ஊசியை அவளுக்கு செலுத்தி கற்பழித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளான்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருத்துவரை கைது செய்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14-வயது சிறுமியின், வயிற்றில் உள்ள கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

குழந்தையை பார்த்துக் கொள்ளும் நிலையில் எனது மகள் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். சிறுமியின் கர்ப்பகாலமானது 20 வாரங்களை கடந்துவிட்டது என்று கூறி நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தை நாடினர். சிறுமி 24-வார கர்ப்பிணியாக உள்ளதாக கூறி மனுவை உயர்நீதிமன்றமும் தள்ளுபடிசெய்தது. 20 வாரங்களுக்கு மேல், கர்ப்பிணியாக உள்ளநிலையில் சட்டம் கலைப்பதற்கு அனுமதி அளிக்காது என்பதை காரணம் காட்டி உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவி வழங்க சாபர்காந்த் மாவட்ட அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 14-வயது சிறுமிக்கு, மருத்துவர்கள் அனுமதிகொடுத்தால், கருவினால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியின் உயிரை காப்பாற்ற அவருடைய வயிற்றில் உள்ள கருவை கலைக்கவேண்டும் என்ற அவசியம் இருந்தால், இனி நீதிமன்றத்தின் அனுமதியை கேட்காமல் குழுவானது தேவையான சிகிச்சையை மேற்கொள்ளலாம், என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அகமதாபாத் அரசு மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர், நான்கு மூத்த மகப்பேறு மருத்துவர் உள்ளடக்கிய குழுவினர் பரிசோதனை செய்து, அதில் ஒரு மருத்துவர், கடந்த வாரமே சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைத்துவிட வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார். இதையடுத்து இதற்கென நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு இன்று கருக்கலைப்பு செய்கின்றனர். இந்த மிகவும் அரிதாகவே பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.