தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள்.
அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது.
குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கேட்கும் திறனும், அறிவுத்திறனும் வேகமாக வளர்கிறது.
கருவில் 17 வார வளர்ச்சி உடைய குழந்தை ஒரு செயலை எதிர்நோக்கு விளைவுடன் கவனிக்கத் தொடங்குகிறதாம்.
அதேபோல் இசையானது கருவில் இருக்கும் குழந்தையின் முளைத்திறனை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே தாயும், குழந்தையும் சேர்ந்து இசை கேட்பதன் முலம் அறிவுள்ள குழந்தையை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்காக நவீன கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு- இடுப்பில் எளிதாக பொருத்திக் கொள்ளும் `பெல்ட்’ வடிவில் இந்த கருவி அமைந்துள்ளது. இதில் 2 வரிசைகளில் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் இணைந்திருக்கும். குழந்தையின் தலைப்பகுதி எந்தப்பக்கம் இருந்தாலும் பாட்டு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை தயாரித்துள்ளது.