Home பாலியல் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணுக்கு ஆ ண்மை இல்லை என்று தெரிந்தால், பெண்ணின் மனம் எப்படி...

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணுக்கு ஆ ண்மை இல்லை என்று தெரிந்தால், பெண்ணின் மனம் எப்படி து டிக்கும்? மற்றவர்களுக்காக மனம் திறக்கும் சகோதரி!

142

நம்ம மக்கள் “ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு” என்பதை தப்பா புரிஞ்சுகிட்டதாலோ என்னவோ, பொய் பொய்யா சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. இதில் மாட்டிகிட்டு தவிப்பது என் சகோதரியும் தான். அவளுக்கு கிடைக்க வேண்டிய இல்லற சுகம் கொடுக்கப்படவில்லை. மாப்பிள்ளை குடும்பத்தின் பேராசைக்காக பறிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பே, பையனின் ஆ ண்மை தன்மையில் சிக்கல் இருப்பது தெரிந்திருந்தும், பொய் சொல்லி கட்டி வைத்து, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது.

மாப்பிள்ளை பையனிடம் கேட்டால், திருமணத்துக்கு பிறகு தான், இந்த குறைபாடு வந்ததென்று சொல்லி தப்பிக்க பார்க்கிறான். திருமணத்திற்கு பிறகு வந்ததென சொல்வதெல்லாம், கடைந்தெடுத்த கேப்புமாறித்தனம். ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், எதிர்கால ஆசையோடு திருமண வாழ்வில் நுழைந்த சகோதரியின் வாழ்வு காப்பாற்றப்பட்டிருக்கும். இன்னைக்கு எதற்கும் வழியில்லை. இதைப்பற்றி பேச ஆரம்பித்தால், சகோதரியை போட்டு அடிப்பதும், அவளின் நடத்தையை சந்தேகப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

இந்த மாதிரி இன்னொரு சம்பவத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த குடும்பத்தில், மனைவிக்கு குழந்தை பெறுவதில் சிக்கல். இருந்தாலும், அவள் மீது கணவர் வெறுப்பை உமிழாமல், குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். குறை இருந்தாலும், அன்பான கணவன் கிடைத்துவிட்டால், தா ம்பத்திய சுகத்தை தவிர்த்து, மற்றபடி குடும்பத்தை ஓரளவிற்காவது மகிழ்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியும். ஆனால் சகோதரி விஷயத்தில் எல்லாமே ஓட்டை. எந்த வகையிலும் அவனுடன் சேர்த்து குடும்பம் நடத்த சொல்ல முடியாத நிலை தெரிகிறது.

வீட்டில் பெரியவர்களிடமும் இந்த குறையை பற்றி தெளிவாக புரிய வைக்க முடியவில்லை. செய்வதறியாது திகைத்து, இறுதியில் என்னிடம் வந்தார். குடும்பம் ரெண்டு பட்டு போகக்கூடாது என்பதற்காக மட்டுமே அவருடன் வாழ்கிறேன். சத்தியமா ஒரு நாள் கடத்துவது கூட, நரகம் போலத் தெரிகிறது. அவருக்கு இருக்கும் குறையை ஒத்துக்கொள்ளாமல், தாழ்வு மனப்பான்மையில், என் மீது சந்தேகப்படுகிறார். எங்காவது ஹாஸ்டலில் போய் தங்கிவிடலாம்னு தோணுது.

வெளியில் யாரிடமும் இப்படி ஒண்ணு இருக்குன்னு சொல்ல முடியாது. இப்படியே என் வாழ்க்கை ஓடுது. மீதி வாழ்கையும் இப்படியே இருக்க என் மனம் அனுமதிக்கவில்லை எதாவது செய்ய முடியுமா.? இப்போ எல்லாம் வாழ்க்கையில் தடம் மாறி செல்லும் பெண்களை பார்த்தால், என்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்க தோன்றுகிறது என்று வெறுப்புடன் பேசினார். இனியும் பொறுத்திருந்தால், சகோதரியின் நடத்தை வேறு விதமாக மாறிவிடும் என்பது மட்டும் புரிந்தது.

எல்லாம் கைமீறி போன பிறகு, கெட்ட பெயர் எடுத்து இருவரும் பிரிவதற்கு பதிலாக, இப்போதே அதற்கான முயற்சிகளை தொடங்கிவிடலாம் என்றேன். முதலில் சகோதரியின் வீட்டில் பேசி புரிய வைத்து அவர்களின் சம்மதம் வாங்கியாச்சு. இனி முறைப்படி கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து வாங்குவது உறுதியாகிவிட்டது. இனி அமையப்போகும் வாழ்க்கையாது நல்லபடி அமையட்டும். இரண்டாவது திருமணம் செய்யும் பல பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு. தயவு செய்து, இனியாவது அவர்களின் நடத்தையை இரண்டாவது திருமணம் செய்வதை வைத்து மதிப்பிடாதீர்கள்.