Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாமா?

19

மீன் ப்ரோடீன் சத்து அதிகமாக உள்ள உணவு. மீன்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு சத்து இருப்பதால் இது உடலுக்கு தேவை இல்லாத கொலஸ்ட்ரோல்ஐ கரைக்க உதவுகிறது. மேலும் மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு எண்ணெய் உள்ளது. இது இருதயத்தை பலபடுத்தும். உலகில் அதிக நாட்கள் நலமுடன் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் மீனைதான் முக்கியமான உணவாக கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஆனால் எல்லா மீன்களிலும் சிறிதளவு மெர்குரி உள்ளது. நிறையபேருக்கு மீனில் உள்ள இந்த சிறிதளவு மெர்குரி எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்த மெர்குரியின் அளவு கூடும்போதுதான் பிரச்சினை உருவாக்குகிறது. குறிப்பாக கருவிலிருக்கும் குழந்தை மற்றும் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மெர்குரி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் எந்த வகை மற்றும் எந்த அளவு மீனை சாப்பிடுவது என்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் 6 வயதுக்கு குறைவான குழந்தைகள் மெர்குரி அளவு குறைவாக உள்ள மீன்களை வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிடலாம்.
பொதுவாக பெரிய உருவத்தில் இருக்கும் எல்லா மீன்களிலும் மெர்குரியின் அளவு அதிகமாக இருக்கும். இவைகளை தவிர்ப்பது நல்லது.
சிறிய உருவத்தில் இருக்கும் மீன்களான நெத்திலி, சாலை, மத்தி, அயிலை, கெளுத்தி, கிலேபி போன்ற மீன்களில் மெர்குரியின் அளவு மிக குறைவு.