Home பெண்கள் உடல் கட்டுப்பாடு யோகாவின் மூலம் மனக்கலக்கத்தைப் போக்குவது எப்படி

யோகாவின் மூலம் மனக்கலக்கத்தைப் போக்குவது எப்படி

31

சிலசமயம், நமது தினசரி வாழ்க்கை நிகழ்வுகளாலும் மனக்கலக்கம் ஏற்படலாம். மேடையில் ஏதேனும் பேசும்போது ஏற்படும் பயம், போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் குறித்த பயம் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த சூழ்நிலைகளில் ஒருவருக்கு குழப்பம் ஏற்பட்டு, ஏதேனும் தவறாகிவிடுமோ என்ற பயம் கலந்த பல்வேறு எண்ணங்கள் ஓடும்.

இந்தப் பதற்றம், மனக்கலக்கம் சிறிதளவு இருப்பது நல்லதே, ஆனால் அதுவே அதிகமாக இருந்தால் நீண்ட நாட்களில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கலாம்.

ஆகவே, மனக்கலக்கம் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும்படி விட்டுவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலைகள் உங்கள் மனக்கலக்கத்தை அதிகரிக்கின்றன என்று கண்டுகொண்டு, அதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் முன்பு யோகா செய்ய முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து யோகா செய்வதால் சில நாட்களில், மனக்கலக்கத்தை வெல்லும் மனதிடம் உங்களுக்குக் கிடைக்கும்.

உதாரணமாக, நீங்கள் இன்னும் அரை மணிநேரத்தில் ஒரு பிரசன்டேஷன் வழங்கப் போகிறீர்கள், உங்களுக்கு பதற்றமாக இருக்கிறது, உங்கள் மனக்கலக்கம் அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதற்குத் தீர்வு:

ஒரு ஐந்து நிமிடம் உங்களை யாரும் தொந்தரவு செய்யாதபடி ஓர் இடத்தைக் கண்டறியுங்கள்.

படி 1: உங்கள், உடல், சுவாசம் மற்றும் எண்ணங்களைக் கவனியுங்கள்

பெரும்பாலும், மனக்கலக்கம் ஏற்படும் சமயங்களில் கவனித்துப் பார்த்தால் தெரியும், அப்போது உங்கள் மனதில் எண்ணங்களும் சீரின்றி தற்போக்காக ஓடும். உண்மை என்னவென்றால் இந்த எண்ணங்களை உருவாக்குவதே நீங்கள் தான். மனக்கலக்கத்தின் பாதிப்பை உங்கள் உடலில் காணலாம். அதாவது, மனக்கலக்கமாக இருக்கும்போது, கைகளைத் அடிக்கடி தட்டிக்கொள்வீர்கள், பாதங்களை உதைத்துக்கொள்வீர்கள், பற்களைக் கடிப்பீர்கள், தசைகளை இறுக்கமாக்குவீர்கள், இதயம் வேகமாகத் துடிக்கும், சுவாசம் வேகமாகும், மனம் அங்குமிங்கும் அலைபாயும்.

முதலில், சௌகரியமான நிலையில் உட்கார்ந்துகொள்ளவும், பிறகு உங்கள் உடலில் நடைபெறும் நுண்ணிய விஷயங்கள் ஒவ்வொன்றையும் கவனிக்கவும். உதாரணமாக உடலின் பகுதிகளில் இறுக்கமாக இருப்பது, சுவாசத்தின் போக்கு போன்றவை. அடுத்து, உங்கள் எண்ணங்களைக் கவனிக்க வேண்டும். நீங்கள் எந்த எண்ணங்களையும் ஆராய வேண்டாம், அப்படிச் செய்தால், மேலும் மேலும் புதிய எண்ணங்கள் உருவாகும், இதனால் மனக்கலக்கம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

படி 2: ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்துங்கள்

மனக்கலக்கம் இருக்கும்போது, சுவாசமும் ஒழுங்கின்றி இருக்கும்.
யோகத் தத்துவத்தின்படி, மனதில் தோன்றும் எண்ணங்களின் வேகம் குறையும், எண்ணிக்கை குறையும்.

வயிற்று சுவாசம் செய்ய வேண்டும். முதுகை நேராக வைத்து, தோள்களை தளர்வாக வைத்து உட்காரவும். உங்கள் வலது அலது இடது உள்ளங்கையை வயிற்றில் வைத்து ஆழ்ந்து சுவாசிக்கவும். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறு வெளியே வரவேண்டும், மூச்சை வெளிவிடும்போது வயிறு உள்ளே சுருங்க வேண்டும். இதே பயிற்சியை சில முறை செய்யவும்.

சில முறை பயிற்சி செய்த பிறகு அமைதியாக உட்காரவும். மூக்கின் மூலமே மூச்சை உள்ளிழுக்க, வெளிவிட வேண்டும்.

படி 3: உங்களைக் குழப்பும் எண்ணங்கள் எவை என்று கவனிக்கவும்

நமது கடந்த காலம் அல்லது எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில் நமது ஆற்றல் அதிகமாகவீணாகிறது.
சுவாசப் பயிற்சிகள் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். இந்த மனநிலையில், இந்த விஷயம் குறித்து, இந்த அளவுக்கு யோசிக்க வேண்டியது அவசியமா, இது உடலையும் பாதித்து மன அமைதியையும் குலைக்கிறது, இதற்கு இடம் தர வேண்டுமா என்று நீங்கள் மனோ விசாரணை செய்யலாம். இந்த எண்ணங்களை மீண்டும் மீண்டும் ஓடவிடுவதால், எந்தப் பயனும் இல்லை என்று நீங்கள் உணர்ந்துவிட்டால், அதன் பிறகு அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவருவது உங்களுக்கு எளிதாக இருக்கும். இதனால் உங்கள் ஆற்றலும் சேமிக்கப்படும்.

படி 4: நிகழ்காலத்தில் இருப்பது சிறந்த தீர்வாக அமையும்

கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளோ அல்லது எதிர்கால முடிவுகளைப் பற்றிய பயமோ மனக்கலக்கம் உருவாகக் காரணமாக இருக்கலாம். எதிர்காலமும் கடந்த காலமும் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், நிகழ்காலத்தில் இருக்க முயற்சிப்பதே சிறந்த வழி.

சுவாசப் பயிற்சிகள் மன்க்கலக்கத்தைக் குறைத்து நடப்பு சூழ்நிலைக்கு உங்களைக் கொண்டு வர உதவும், அப்போது நீங்கள் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பீர்கள், அதாவது அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள்.

ஆகவே, இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால், மனக்கலக்கம் வரும்போது அல்லதுவரக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது பயன்படுத்தி மனக்கலக்கத்தை வெல்லலாம்