Home பெண்கள் உடல் கட்டுப்பாடு x Tamilx நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கான 10 யோகாசனங்கள்

x Tamilx நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கான 10 யோகாசனங்கள்

31

கடந்த காலத்தில் மற்றும் தற்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்களை மனதில் வைத்து அவற்றை நினைவூட்டும் திறன், உள்வாங்கிய தகவல்களை ஒன்றிணைத்து ஆய்வு செய்யும் திறன் ஆகியவையே நினைவுத்திறன் எனப்படும்.
தனி நபரின் நினைவுத்திறனை மேம்படுத்த பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. இருப்பினும் யோகாவில் உள்ள பல்வேறு நன்மைகளின் காரணமாக இன்று அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் விருப்பத்தேர்வாக யோகா இருக்கிறது. ஒருவரின் கவனம் செலுத்துதல் மற்றும் நீண்ட காலத்திற்கு நினைவூட்டல் ஆகிய திறன்களை சார்ந்தே நினைவுத்திறன் உள்ளது. ஒருவரின் மனது தொடர்ந்து திசைதிருப்பப்பட்டால், அவரால் இந்த திறன்களை அடையமுடியாது. யோகாவின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் கூறிய ‘யோகா சித்த விருத்தி நிரோதா’ என்ற சூத்திரத்தின்படி முதலில் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அந்த சூத்திரத்தின் பொருள் “யோகா என்பது மனம் அலைப்பாய்வதைக் குறைக்கும் நுட்பம்” (மனதை அமைதிப்படுத்தும் வகையில்) என்பதாகும். இதை ஆசனங்கள் (நிலைகள்), பிராணயாமம் (சுவாசப் பயிற்சிகள்) மற்றும் யோகா நித்திரை (இளைப்பாறல் நுட்பங்கள்) மூலம் அடையலாம்.
மனதை அமைதிப்படுத்தும், நினைவுத்திறன் மற்றும் ஒருமுக சிந்தனையை மேம்படுத்த நரம்பு மண்டலத்தை தூண்டும் 10 யோகா பயிற்சிகளை இப்போது கற்கலாம்.

அ) புத்துணர்வு (Refresh)
புத்துணர்வான மனதால் நன்கு கவனம் செலுத்த முடியும். மனதின் புத்துணர்ச்சியை அதிகரிக்கவும், மூளை மற்றும் தண்டுவடத்திற்கு செல்லும் ஆச்சிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உதவும் பயிற்சிகள் பின்வருமாறு:
முன்னோக்கி வளையும் தோரணைகள் (Forward bending poses)
அஸ்டபாதாசனம் – கை முதல் பாதம் வரையிலான தோற்றம்
பஸ்ச்சிமோட்டனாசனம் – உட்கார்ந்து முன்னோக்கி வளையும் தோற்றம்
தலைகீழான தோரணைகள் (Inverted poses)
சர்வாங்காசனம் – தோள்பட்டையைப் பயன்படுத்தி நிற்கும் தோற்றம், ஹலாசனம் – கலப்பை போன்ற தோற்றம்
கவிழ்ந்த நிலைத் தோற்றம் (புஜங்காசனம் – பாம்பு போன்ற தோற்றம்)

ஆ) கவனம் செலுத்துதல் (Focus)
இது நினைவுத்திறனை நீண்ட நேரத்திற்கு ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துவது மற்றும் ஒருமுனைப் படுத்துவது தொடர்புடையதாகும். அமர்தல் மற்றும் நிற்றல் உட்பட கவனம் செலுத்துவதற்கு உதவும் பயிற்சிகள்:
விரிக்ஷாசனம் – மரத்தைப் போன்ற தோற்றம்
கருடாசனம் – கழுகைப் போன்ற தோற்றம்

இ) ஆசுவாசப்படுத்தல் (Relax)
அதிகப்படியான சிந்தனை காரணமாக மன ஆற்றலானது குறைகிறது. மேலும் மனது குரங்கைப் போன்றது என்பதால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றி மட்டும் சிந்தித்தல் என்பது மிகக் கடினமான ஒன்றாகும். இதனால் மனத் தெளிவின்மை ஏற்படுகிறது. இது மறதிக்கு வழிவகுக்கலாம். பின்வரும் சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இது சிந்தனைகள் மற்றும் நினைவுத்திறன் தெளிவையும் அதிகரிக்கிறது.
நாடி சோதன பிராணயாமம்
இளைப்பாறுதலுக்கான நுட்பம் (யோக நித்திரை)

ஈ) நினைவூட்டல் (Recall)
நினைவூட்டலே நினைவுத்திறனின் முக்கிய செயல்முறையாகும். நிம்மதியான மனதில் ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைகள் இருப்பதால் அவற்றால் நன்கு நினைவூட்ட முடியும்.
‘நினைவூட்டலுக்கான’ மிகச் சிறந்த பயிற்சி சூரிய நமஸ்காரம் – சூரியனை வணங்குதல் ஆகும். சூரிய நமஸ்காரத்தின் நிலைகள், வேறுபாடுகள் மற்றும் மந்திரங்கள் அனைத்தையும் ஒருவர் நினைவில் வைத்துகொள்ள வேண்டுமென்பதால் இது மிகவும் பயனுள்ள பயிற்சியாக இருக்கும். இது நினைவுத்திறன் சார்ந்த விளையாட்டைப் போன்றதாகும்.
நினைவுத்திறனை மேம்படுத்த விரும்புபவர்கள் மேற்கூறிய பயிற்சிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.