Home சூடான செய்திகள் என்ன பிரச்சினை உங்களுக்குள்?

என்ன பிரச்சினை உங்களுக்குள்?

20

இல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரு வது கருத்து வேறுபாடுகளால் தான். இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதில்லை. முதலில் உங்கள் மனைவியை ஆழமாக நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவளது தேவை களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள். நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒரு மடங்கு அன்பை காட்டினால், அவள் பதிலுக்கு நூறு மடங்கு அன்பை திருப்பித் தருவாள். பெண்மைக்கு மட்டுமே உள்ளது இந்த தாராள குணம். இதைப் புரிந்து கொண்டால் உங்கள் மனைவி உங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விடுவாள். அவளுக்கு நீங்கள் சொல்வதே வேதம் என்றாகி விடும்.

சுதந்திரம்
அன்பை வெறும் வார்த்தைகளில் மட்டும் காட்டாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும். புதுப்பெண்ணுக்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறது. தாலி கட்டினாலே அவள் நமக்கு அடிமை தான் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அதே போல், தாய் அல்லது சகோதரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடக்குமுறையைக் கையாளாதீர்கள். உங்கள் இருவருக்குள்ளும் உள்ள சுதந்திரத்தில் வேறு எவரும் தலையிட முடியாத அளவில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து விடுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள்
நிறைய மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவரிடம் மற்றவர் நெருங்கி வரும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணமான புதிதில், பெண்களுக்கு பிறந்த வீட்டின் மீது அதிக நாட்டம் வருவது இயல்பு. அப்போது அவர்களை அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது பிறந்த வீட்டிற்குச் சென்று வர அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், அவளுடைய உள்ளத்தில் நீங்கள் நீங்காஇடம் பிடித்து விடுகிறீர்கள். நாளடைவில் அந்த பழக்கமும் அவளுக்கு படிப்படியாக குறைந்து விடும். அங்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தால் கூட, அதிக நேரம் இருக்க மனமில்லாமல் உங்களைப் பார்க்கும் ஆசையில் ஓடோடி வந்து விடுவாள்.

அன்பின் பாலம்
இருவரது உறவுக்கும் இடையில் உள்ள அன்பிற்கு பாலமாக இருப்பது உடலுறவு தான். அதனால் அதற்கு நீங்கள் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உச்சகட்ட நிலையை எட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள். மனைவியை திருப்திபடுத்த `அது’ மட்டும் போதாது என்பது கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவளாக மாற்றிக் கொள்ள முடியும். பூவை என்றாலே மெதுவாக மலரும் பெண்மை தான். அதைப் புரிந்து கொண்டால் போதும். கணவன் மார்களின் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவளாகி விடுகிறாள், பெண்.