Home சூடான செய்திகள் இரட்டை குழந்தை பிறக்கணும்னா இந்த செக்ஸ் பொசிசன்களை ட்ரை பண்ணுங்க…

இரட்டை குழந்தை பிறக்கணும்னா இந்த செக்ஸ் பொசிசன்களை ட்ரை பண்ணுங்க…

251

குழந்தை பிறப்பு என்றாலே அளவுக்கு அதிகமான சந்தோஷம் தான் நமக்கு இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக உங்கள் சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும் அல்லவா. இரட்டை குழந்தையை பெறுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் நிறைய நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே பிரசவ காலத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மகிழலாம். உங்கள் பிரசவ காலமும் எளிதாக அமையும். சில இயற்கை முறைகள் மூலம் இரட்டை கருவுறுதலை மேற்கொள்ளலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இரட்டை கருவுறுதல்
நீங்கள் இரட்டை குழந்தையை பெற்றுக் கொள்ள நினைத்தால் முதலில் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இரட்டை கருவுறுதலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒற்றைக்கரு இரட்டையர் (ஒத்த இரட்டைக்கரு) அல்லது இரட்டைக்கரு இரட்டையர் (ஒத்ததாக இல்லாத இரட்டைக்கரு)

ஒற்றைக்கரு இரட்டையர்கள்
இதில் 1/3 பங்கு இரட்டையர்கள் இந்த முறையில் தான் பிறக்கின்றனர். பெண்ணின் ஒரு கருமுட்டையும் ஆனின் ஒரு உயிரணுவும் இணைந்து இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களை உருவாக்குகிறது. இவை ஒரே மரபணு மற்றும் ஒரே நஞ்சுக்கொடி சார்ந்து இருக்கும். இந்த மாதிரியான கருவுறுதல் கருவளத்தை மேம்படுத்தும் மருத்துவ முறைகளில் பெரும்பாலும் நடக்கிறது.

இரட்டைக்கரு இரட்டையர்கள்
இங்கே இரண்டு கருமுட்டைகளும் இரண்டு உயிரணுக்களும் இணைந்து கருக்கள் உருவாக்கப்படுகிறது. இவர்கள் ஒரே மாதிரி இருந்தாலும் ஓரே மரபணு மட்டும் ஓரே நஞ்சுக்கொடி சார்ந்து இருக்க மாட்டார்கள். பாதியளவு மட்டுமே ஒரே மாதிரியான மரபணு சார்ந்து இருப்பார்கள். மேலும் குழந்தையின் பாலினமும் வேறுபடும்.

புள்ளியியல் விவரங்கள்
21 ஆவது நூற்றாண்டில் 3% மட்டுமே இரட்டை கருவுறுதல் வாய்ப்பு இருந்தது. 100 பேர்களில் 3 பேர்கள் இரட்டை கருவுறுதல் பெற்றனர். ஆனால் 1980 ஆம் ஆண்டுகளில் இதன் அளவு 61% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார மையம் புள்ளி விவரப்படி 1000 பிறப்பில் 33.9 சதவீதம் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் உள்ளது என்கிறது.

பரம்பரை
உங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக இரட்டை குழந்தைகள் பிறப்பு நிகழ்ந்து வந்தால் உங்களுக்கும் அதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் அம்மாவிற்கு இரட்டை கருவுறுதல் என்றால் உங்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதாவது இரண்டு கருமுட்டைகள் கருவுறுதலில் (ஹைபர்ஒவுலேசன்) ஈடுபட வாய்ப்புள்ளது. சகோதரத்துவ இரட்டையர்கள் பிறக்க கீழ்க்கண்ட காரணிகள் காரணமாக அமைகின்றன.
இனம்
இனமும் உங்கள் கருவுறுதலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆசியர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் இதில் குறைந்தே வாய்ப்பே பெற்றுள்ளனர். ஆப்பிரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அதிகமான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

உடம்பு வாகு
குறைந்த உயரம் உடைய பெண்களை காட்டிலும் உயரம் அதிகமான பெண்கள், எடை குறைந்த பெண்களை காட்டிலும் எடை அதிகமான பெண்கள், குறைந்த கொழுப்பு உணவை ஏற்பவரைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவை மேற்கொள்ளும் பெண்கள் போன்றவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்க கல்லூரி மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் அமைப்பு நடத்திய ஆராய்ச்சி படி உடல் நிறை குறியீட்டு எண் 30 க்கு அதிகமாக உள்ள பெண்களுக்கு இரட்டை சகோதரத்துவ குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

தாய் வயது
35 வயதுக்கு மேலான பெண்களுக்கு போலிக்கிள் தூண்டுதல் ஹார்மோன் (FSH) அதிகமாக சுரக்கிறது. இதனால் கருமுட்டை வெளிவரும் சமயத்தில் அதிகமான கருமுட்டைகள் வெளிப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு முன்னாடி உங்களுக்கு இரட்டை கரு உருவாகி இருந்தால் மறுபடியும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்

பால் பொருட்கள்
டாக்டர். கேரி ஸ்டெயின் மேன் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் பெண்கள் ஒரு நாளைக்கு 5 தடவை பால் பொருட்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு இரட்டை கருவுறுதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறார். ஏனெனில் வளர்ச்சிக்கான ஹார்மோன் இதில் இருப்பதே இதற்கு காரணம்.

காட்டு கிழங்கு
காட்டு கிழங்குகள் கருப்பையிலிருந்து அதிகப்படியான கரு முட்டைகள் வெளிவர உதவுகிறது. எனவே இவையும் பல கரு உருவாக வழி வகை செய்கிறது. எனவே தான் ஆப்பிரிக்க பெண்கள் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதால் இரட்டை கருவுறுதலை பெறுகின்றனர். அதே மாதிரி புரோட்டீன் நிறைந்த உணவுகளான டோஃபு, சோயா, முழு கோதுமை உணவுகள், முழு தானியங்கள் போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்
நீங்கள் பிறப்புக்கு கட்டுப்பாடு மாத்திரைகளை நிறுத்தும் சமயத்தில் கருவுறுதல் மேற்கொண்டால் இரட்டை கரு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த மாதிரியான சமயத்தில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு இது சாத்தியமாகும்.

தாய்ப்பாலூட்டுதல்
நீங்கள் இன்னும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருக்கும் போது மறுபடியும் கருவுற்றால் இரட்டை கரு உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இந்த சமயத்தில் உள்ள புரோலாக்டீன் ஹார்மோனே ஆகும்.

ஜிங்க் உணவுகள்
உங்கள் துணை ஜிங்க் நிறைந்த உணவுகளான பச்சை காய்கறிகள், கீரைகள், சிப்பிகள், பிரட் மற்றும் விதைகள் போன்றவை விந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து பல கருவுறுதலை நிகழ்த்துகிறது.

உடலுறவு நிலை
வெறும் மாத்திரைகள், மூலிகைகளை மட்டுமே நம்பி, இரட்டைக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் இதையும் கொஞ்சம் கவனிக்கலாம். சில உடலுறுவு நிலைகளும் இரட்டை குழந்தைக்கான கருவுறுதலைத் தூண்டும் என்பது மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கருவுறுதலுக்கு அடுத்து அதிகமான இடைவெளி விடாமல் உடனே கருவுற்றால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

பக்கவாட்டு முறை
இது டாக்கி ஸ்டைல் என்று கூறப்படுகிறது. இதில் துணை முன்னே குனிந்து முழங்கால் போட்ட நிலையில் பின்புறமாக உடலுறுவை மேற்கொள்ளும் போது அதிகப்படியான விந்தணுக்களை கருமுட்டைகள் ஏற்க வாய்ப்புள்ளது.

நிற்கும் நிலை
இது மற்றொரு டாக்கி ஸ்டைல் முறையாகும். இதுவும் ஒரு ஆழமான ஊடுருவலை கொடுக்கக் கூடியது.

மிஷனரி நிலை
இது துணையின் மேலே உட்கார்ந்து மேற்கொள்ளும் முறையாகும். இதுவும் இரட்டையர்கள் உருவாக பெஸ்ட் நிலை.

பின்புற நுழைவு
இதில் துணை பின்புறத்தில் இருந்து செயல்படுதல். இதிலும் விந்தணுக்கள் எளிதாக கருப்பையை சென்று அடையும்.

செயற்கை கருத்தரித்தல்
இந்த மாதிரியான முறையில் 20-40% வரை ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாக வாய்ப்புள்ளது.இது உங்கள் கருப்பையில் இருக்கும் எம்பிரியோக்களை பொருத்தே உள்ளது.

ஊசி வழி கருவூட்டல்
இந்த முறையில் ஆணின் விந்தணுக்களை ஊசியின் வழியாக பெண்ணின் கருப்பையில் செலுத்துகின்றனர். ஆனால் இது மட்டுமே இரட்டை கருவுறுதலை ஏற்படாது. இந்த சிகச்சை யுடன் கருவுறுதலுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது பல கருவுறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

போலிக் அமில மாத்திரைகள்
கருவுறுதலுக்கு முன்னாடி நிறைய போலிக் அமில மாத்திரைகளை பெண் எடுத்து கொள்ளும் போது இரட்டை கருவுறுதல் ஏற்படுகிறது என்று ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. போலிக் அமில மாத்திரைகள் மட்டுமல்லாமல் அதனுடன் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என்பதும் அதன் தகவலாக உள்ளது.செயற்கை கருவுறுதலுடன் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது இரட்டை கருவுறுதல் நிகழ்கிறது.

கோனாடோட்ரோபின்
இந்த மாத்திரை கரு முட்டையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஓரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு முட்டைகள் வெளிப்படுவதை இது தூண்டுகிறது. உங்கள் மருத்துவரின் ஆலோசனை பேரில் இதை எடுத்து கொள்ளலாம்.

புரோஜெஸ்ட்டிரோன்
இந்த ஹார்மோன் கருப்பையின் உள் சுவரை வலுவாக்குகிறது. இரண்டுக்கு மேற்பட்ட கரு உருவாகும் அது ஆரோக்கியமாக கருப்பையின் சுவரில் இணைய இது உதவுகிறது. இது இரட்டை கரு இரட்டையர்களையே பெரும்பாலும் உருவாக்கும். ஒத்தகரு இரட்டையர்கள் உருவாகுவது அரிது.

க்ளோமிபோன் சிட்ரேட்
இது 7-8 % இரட்டை கருவுறுதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினைகள், ஆண்களுக்கான ஹார்மோன் சமநிலையின்மை, விந்தணுக்களின் உற்பத்தி போன்ற பிரச்சினைகளை சரி செய்ய இது உதவுகிறது.

பார்லோடல்
இது மாதத்திற்கு 5 நாட்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து. இவை புரோலாக்டீன் ஹார்மோனை குறைத்து கருவுறுதலுக்கான ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. இதனாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கரு முட்டைகள் வெளிப்பட்டு இரட்டை குழந்தைகள் உருவாக வாய்ப்புள்ளது.

பெர்கோனல்
இது மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியை தூண்டி கருவுறுதல் ஹார்மோனான லுட்டனிஸிங் ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இதனாலும் பல கரு உருவாகும்.

க்யூமிஹான்
இது மெனோட்ரோபின் பொருளை செயல்படச் செய்து கருவுறுதலை தூண்டுகிறது. இது ஃபோலிக்குலார் மெச்சூரேசன் மற்றும் கோனாடால் ஸ்டீராய்டு சுரப்பை தூண்டி விடுவதால் இரட்டை கருவுறுதல் நடக்கிறது.

ஈவினிங் ப்ரைம் ரோஸ் ஆயில்
கருவுறுதலை தூண்ட ப்ரைம் ரோஸ் ஆயில் பெரும் பங்கு வகிக்கிறது. யோனி பாதையில் ஆரோக்கியமான மியூக்கஸ் திரவம் வெளிப்படுவதை தூண்டுகிறது. இதனால் விந்தணுக்கள் நீண்ட காலம் கருப்பையில் உயிருடன் இருக்க இது உதவுகிறது. உங்கள் மாதவிடாய் காலத்தில் இந்த ப்ரைம் ரோஸ் ஆயிலை எடுத்துக் கொள்வதன் மூலம் இரட்டை குழந்தை சாத்தியக் கூறு கிடைக்கலாம்.

அதிமதுரம்
இந்த இனிப்பான மூலிகை மாதவிடாய் காலத்தில் எளிதாக கருவுறுதலை நிகழ்த்த உதவுகிறது. இது டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஆளி விதை எண்ணெய்
இயற்கையாகவே இரட்டை கருவுறுதல் நடைபெற இது உதவுகிறது. ஹார்மோன் உற்பத்தியை சரி செய்தல், ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சமநிலை போன்றவற்றிற்கு உதவுகிறது.

இனிப்பு மரவள்ளி கிழங்கு
இது ஹைபர் ஒவுலேசன் தன்மையை கொண்டு இருப்பதால் இரட்டை கருவுறுதலை தூண்டுகிறது. இதுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ப்ளாக் கோஹோஷ்
இது முன் மாதவிடாய் சுழற்சி மற்றும் மாதவிடாய் காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவை பெண்ணின் கருப்பை தசைகளை வலுவாக்கி இடுப்பு பகுதியை வலுவடைய செய்கிறது. இவை கருவுறுதல் அளவை அதிகப்படுத்தி இரட்டை கருவுறுதலை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.

நொச்சிலை
இது பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை(பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம்) குணப்படுத்த உதவுகிறது. இதற்கு காரணமான ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவை குறைத்து பெண்ணின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துகிறது. இந்த மூலிகையாலும் இரட்டை கரு உருவாக வாய்ப்புள்ளது.

மேக்கா ரூட்
இதிலுள்ள ஸ்டோர் ஜென் என்ற பொருள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட உதவுகிறது. இவை பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலருக்கும் கருவுறுதலுக்கு உதவுகிறது. இதனாலும் இரட்டை கரு ஏற்பட வழி உள்ளது. மேற்கண்ட முறைகள் இரட்டை கருவுறுதலுக்கான முயற்சியே தவிர உறுதியாக நடக்கும் என்று கூற இயலாது. அது உங்கள் அதிர்ஷ்டத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பொருத்தோ அமையும் என்பதை மறவாதீர்கள்.