Home இரகசியகேள்வி-பதில் வாசகர் அந்தரங்க கேள்வி பதில்

வாசகர் அந்தரங்க கேள்வி பதில்

52

நான் 52 வயது பெண்மணி. 27 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. `பாலிஸ்டிக்
ஓவரியன் டிசீஸ்’ என்ற பாதிப்பு இருந்ததால் 38 வயதில்தான் என்னால்
தாய்மையடைய முடிந்தது. ஒரு குழந்தைக்கு தாயாகவே நான் மிகுந்த சிரமங்களை
அனுபவிக்க வேண்டியதாயிற்று. என் மகளுக்கு இப்போது 14 வயது. அவளும்
என்னைப் போல் குண்டாக இருக்கிறாள். வயதுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.
எனக்கு வந்த அதே `பாலிஸ் டிக் ஓவரியன் டிசீஸ்’ பாதிப்பு எதிர்காலத்தில்
என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது. அந்த நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கான
சிகிச்சைகள் இப்போது என் னென்ன இருக்கிறது? அந்த நோய் வராமல் தடுக்க என்ன
வழி இருக்கிறது?

(ஜான்சி…. ஈரோடு)

மிக முக்கியமான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். இந்த கேள்விக்குரிய பதில்
உங்க ளுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களும், சிறுமிகளும் தெரிந்துகொள்ளத்
தக்க தாகும்.

தென்னிந்தியாவில் குழந்தையின்மையால் அவதிப்படும் பெண்களில் 35 சதவீதம்
பேர் பாலிஸ்டிக் ஓவரியன் டிசீசால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

குண்டாக இருக்கும் பெண்களில் 50 சதவீதம் பேரை இந்த நோய் பாதிக்கிறது. மாத
விலக்கு கோளாறுகள், மாதவிலக்கு வெகு தாமதமாக வருதல், அதிகமாக தேவையற்ற
ரோமங்கள் வளருதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இவர்களுக்கு ஆன்ட் ரோஜன்,
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் சினைப் பையில்
இருந்து கருமுட்டை வெளிவராது. அல்லது வெளிவந்தாலும் கருத்தரிப்பு நிகழா
மலோ ஆகிவிடும். இதனால் தாய்மையடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த
பாதிப்பு கொண்டவர்களின் சினைப்பையை ஸ்கேன் மூலம் பார்த்தால், உள்ளே
முத்து மாலை கோர்த்தது போல் நீர்க்கட்டிகள் காணப்படும்.

உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு உங்கள் மகளுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற
கோணத்தில் நீங்கள் ïகிப்பது சரிதான். குடும்ப பாரம்பரிய மரபு வழியாக 30
சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் முரண்பாடான உணவுப்
பழக்கம், வாழ்க்கை முறை போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.
மாமிசமும், கொழுப்பும் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த
தொந்தரவு அதிகமாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் இந்த பாதிப்புகளை
கண்டறிந்து, சிகிச்சை செய்ய முடியும். `லேப்ராஸ்கோப்’ சிகிச்சை செய்து
நீர்க்கட்டிகளுக்கு தீர்வு காணப்பட்ட சில வாரங்களிலே கூட பெண்கள்
தாய்மையடைந்துவிடுவதுண்டு.

உங்கள் மகளின் உடல் அமைப்பும் குண்டாக இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்.
நிïட் ரிசியன் பரிந்துரைப்படி உணவும், நல்ல பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன்
உடற்பயிற்சியும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். கலோரி குறைந்த உணவுகளை
வழக்கமான சாப்பாட்டில் சேருங்கள். ஒரு நாள் அதிகபட்சம் 1000 கலோரி
அளவுக்கு உணவு உண்டால் போதும். கொழுப்பும், புரோட்டீனும் கலந்த உணவை
குறைத்துவிட்டு, காய்கறிகளை அதிகம் கொடுங்கள்.

பாரம்பரியத்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால் நீங்கள்
இப்போதே உஷாராகிவிடுவது நல்லது. முதலில் உங்கள் மகளுக்கு இந்த நோயைப்
பற்றி விளக்கி, அவளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் மகளை
பராமரிக்கும் நீங்களும், அவளும் கவனமாக இருந்தால் உங்கள் மகளுக்கு இந்த
பாதிப்பு ஏற்படுவதை பெரு மளவு தடுத்துவிடலாம். அவளுக்கு மாதவிலக்கு
கோளாறு இருந்தால் அதற்கான சிகிச் சையைப் பெறுங்கள். உடல் எடையைக்
குறையுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்ற
அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உட்கார்ந்திருப்பது,
டெலிவிஷன் பார்ப்பது, படிப்பது என்று காலத்தைக் கழிக்காமல் பள்ளியில்
நடக்கும் குழுவிளையாட்டுகள், கலைப் போட்டிகளில் அவளை பங்குபெறச்
செய்யுங்கள்.

-டாக்டர்

***

கணவன்- மனைவியிடையே மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடல்ரீதியாகவும்,
மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். மன அழுத்தத்தை
குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில்
பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக
இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு
வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.

மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:

* அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உரு
வாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதி
களிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது
உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே
செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம்
போல் மாறி விடும்.

* கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு
சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம்
வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மன
பாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை
தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்.
இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.

* மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப்
பிரீத்திங் எக்சசைஸ்’ போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால்.
மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது
மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம்
எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி
இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு
அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.

* மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ்
செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய
வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது
உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.

* தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக
அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல்
உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில்
சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.

* மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது.
ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க
வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை
நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.

-டாக்டர்

***

என் வயது 34. சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு குழந்தைகளின் தாய். என்
கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும்
நிறு வனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது
குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை
வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம்
அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த
மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும், கணவருக்கும் உறவு
நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள்
சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்’ என்று கூறிவிட்டார். நான் முதலில்
தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி,
அவரை சகோ தரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக `காதலித்துக்
கொண்டி ருந்த’ கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி
புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக
வாழ வழி சொல்லுங்கள்?

(கொச்சியிலிருந்து ஒரு வாசகி)

உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச்
சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர்
பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான
எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக
வாழ்ந்து காட்டுவேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின்
அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு
இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில்
நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை
ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்’ என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம்
வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும்,
எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு
பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக
நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உரு வாக்குங்கள். உங்களிடம்
இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும் ஒருசேரக்
கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள்
நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங் களோடு
இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில்
விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க
முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ
உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும்
தீர்வு இருக்கிறது.