Home பெண்கள் பெண்குறி உடறவில் பிறப்புறுப்பில் வலி உண்டாவது இயற்கையான ஒன்று தான். அதன் காரணம் ஏன்?

உடறவில் பிறப்புறுப்பில் வலி உண்டாவது இயற்கையான ஒன்று தான். அதன் காரணம் ஏன்?

62

உடலுறவு குறித்து ஏதாவது சந்தேகங்கள் உண்டானால் மருத்துவர்களிடம் கேட்கத் தயக்கம் கொண்டு நண்பர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வது தான் சரி என்று எண்ண செயல்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். அதனாலேயே அதிக அளவில் குழப்பங்கள் உண்டாகின்றன.

உடறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி உண்டாவது இயற்கையான ஒன்று தான். அதன் காரணம் ஏன்? என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பாமல் உடலுறவுக்குத் தடை போடுவது உண்டு. ஆனால் ஏன் வலி உண்டாகிறது என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமேயொழிய உடலுறவையே முற்றிலும் தவிர்த்தல் கூடாது.

பெண்ணுறுப்புகளைப் பற்றிய சில பொய்யான விஷயங்கள் பரவியுள்ளன. அதை முதலில் மருத்துவரிடம் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வது நல்லது.

உடலுறவில் ஈடுபடுவதைக் கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போட்டிருந்தால் பெண்ணுறுப்பு இறுக்கமாகிவிடும். அதனாலேயே வெகுநாட்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபட்டால் வலி உண்டாகிறது என்ற வதந்தி இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. பெண்ணுறுப்பு எலாஸ்டிக் போல விரியும் தன்மை கொண்டது.

உடலுறவு மற்றும் சுய இன்பம் காணுதல் போன்றவற்றில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகும். வலி அதிகமாகும் என்று கூறப்படுவதுண்டு. அது 50 சதவீதம் உண்மை தான். ஆம். உடலுறவு மற்றும் சுய இன்பத்தில் ஈடுபடும்போது வெயிப்படுகிற எடோர்பின் உறவின்போது உண்டாகும் வலிக்கு நிவாரணியாகச் செயல்படும். அது தடைபடுகிற போது தான் மாதவிலக்கு காலத்தில் வலி அதிகமாக உண்டாகிறது.

சிலர் உடலுறவில் ஈடுபடும்போது பெண்ணுறுப்பில் உண்டாகும் வலியாலுயே உடலுறவைத் தவிர்த்துவிடுகிறார்கள். பெண்ணுறுப்பு சிறிதாக இருக்கும் பெண்களுக்கு இதுபோல் வலி உண்டாவதுண்டு. இது போல் உறவின்போது அதிக வலியை உணர்பவர்கள் உறவுகொள்ளும் முன்பு ஃபோர்பிளே என்று சொல்லப்படுகிற முன் விளையாட்டுகளில் ஈடுபட்டு அதன் பின்னர் உறவில் ஈடுபடலாம்.

சில பெண்களுக்கு அவர்களுடைய பெண்ணுறுப்பு அதிக வறட்சியுடன் காணப்படும். அதனாலும்கூட வலி உண்டாவதுண்டு. அதனால் பெண்ணுறுப்பை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. இதற்காகவே பல வகை எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. பெண்ணுறுப்பில் உராய்வினால் அவ்வப்போது எரிச்சலும் வலியும் உண்டாகாமல் இருக்க இதுபோன்ற எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

பெண்ணுறுப்பு மென்மையான தசைகளால் ஆன ஒரு உறுப்பு என்பதை ஆண்களும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். உடலுறவில் ஈடுபடும்போது ஓரளவுக்கு மேல் வேகமாகச் செயல்படும்போது அதிக வலியை உண்டாக்கும். அது அவர்களுக்குள் ஒருவித அச்சத்தை உண்டாக்கும். அதுவே அவர்கள் அடுத்த முறை உறவு கொள்வதற்கு மறுப்பு சொல்வதற்கான காரணமாக அமைந்துவிடும்.

அதனால் ஆண்களே நீங்களும் கொஞ்சம் பெண்ணுறுப்பைப் பற்றித் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்

Previous articleசரும எரிச்சலை போக்கும் ஐஸ்கட்டி மசாஜ்
Next articleஅந்த நேரத்தில் இந்த செயலை செய்ய வெட்கப்படும் ஆண்களை பெண்கள் வெறுக்கின்றனர்