Home இரகசியகேள்வி-பதில் என் மனைவி உறவுகொள்ள தயக்கம் காட்டுகிறாள். எரிவு இருப்பதாகவும் கூறுகிறாள்

என் மனைவி உறவுகொள்ள தயக்கம் காட்டுகிறாள். எரிவு இருப்பதாகவும் கூறுகிறாள்

68

கேள்வி:-

எனது கணவர் பெயர் ****** அவருக்கு வயது 28 கடந்த சில மாதங்களாக நெஞ்சு மற்றும் வயிற்றுக்கும் ஆண்உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ரோமங்கள் காணப்படும் அந்தப்புகுதியிலும் மிகவும் கடுமையான வலி. எப்பொழுதும் அது ஏற்படவதல்ல சில நேரங்களில் ஒரே இடத்தில் தோன்றாது மாறி மாறி தோன்றும்.

நெஞ்சு நோகும் போது மூச்சு விடுவதற்கு பலத்த சிரமப்படுகின்றார். அதுவே ஆணுறுப்புக்குமேல் வலி ஏற்படும் பொழுது அடிக்கடி சலம் கழிக்கின்றார். அதைவிட அதில் வேறு பிரச்சினையில்லை. வைத்தியசாலையில் காட்டியும் பலனில்லை வேறு தனியார் வைத்தியசாலையில் காட்டும் போது எல்லா பரிசோதனையும் செய்தார்கள் ஒன்று இல்லை என்று சில மாத்திரைகள் கொடுத்தார்கள் போடுவதற்கு அப்பொழுதும் பயனில்லை மறுபடியும் காட்டும் போது அந்த வைத்தியர் இது தசைகளில் ஏற்படும் ஒருநோய் பைரேமயில்யியா (fibromyalgia) என்று குறிப்பிட்டார்.

அதற்கு என்று எந்த தனி மாத்திரைகளும் இல்லை இதனால் பயப்படத்தேவையில்லை என்று இந்த நோ கால ஓட்டத்தில் தானகவே சரியாகி விடும் என்று. ஆனால் என்க்கு பயமாக உள்ளது. இப்படி ஒரு பெயரில் நான் நோய் கேள்விப்பட்டதும் இல்லை. எனது கணவர் இரவில் சரியாக சிரமப்படுகின்றார். இப்படி வைத்தியர்களே சொல்லும் போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வைத்தியர் அந்த நோயின் விளக்கத்தை தரவில்லை.

தயவுசெய்து பைரேமயில்யியா பாரதுரமான நோயா? இதனை குணப்படுத்த முடியாதா? இது எவ்வளவு காலம் இப்படியே இருக்கும்? ஆணுறுப்புக்கு மேல் வலி ஏற்படும் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர் உறவுக்கும் சம்மதிப்பதில் வலி அதிகமாகி விடும் என்று. எனத தோழியின் மூலமே பத்திரிகையில் கேள்விக்கு பதில் தருவார்கள் என்றார்கள். தயவுசெய்து எனது கேள்வியை தட்டிக்கழிக்காமல் பதில் தருவீர்களா? எனத கணவர் இதனை யோசித்த படியே இருக்கின்றார். தயவு செய்து பதில் தரவும்.

பதில்:- நீங்கள் குறிப்படும் பைரோமையல்ஜியா நோய் பற்றி சில வாரங்களுக்கு முன்னர் தினக்குரல் கேள்வி பதில் பகுதியில் எழுதியிருந்தேன். மாறி மாறி வேறு இடங்களில் ஏற்படும் வலி, களைப்பு, உற்சாகக் குறைவு, அமைதியின்மை, மனநிலை மாற்றங்கள், நித்திரைக் குறைவு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு இருக்கும். வலிகள் இருந்தபோதும் சாதாரண வலிநிவாரணி மாத்திரைகள் பயன் தருவதில்லை.

சாதாரண வலிகள் கூட கடுமையாகத் தோன்றும். இவ்வாறு வலி கடுமையாகத் தெரிவதற்குக் காரணம் மூளையானது சாதாரண வலிகளை அசாதாரணமாக உணர வைப்பதே ஆகும்.

சாதாரண வலிநிவாரணி மாத்திரைகள் உதவாதபோதும் வேறு சில மருந்துகள் உதவக் கூடும். உதாரணமாக வலிப்பு நோய்களுக்கு மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிக்குப் பயன்படுத்தும் மருந்துகள் உதவலாம். அவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது காரணமாக பைரோமையல்ஜியா நோயின் வேதனைகளைத் தணிக்க உதவுகின்றன.

உளவளத்துணையும் நிறையவே உதவக் கூடும். இது ஆபத்தான நோயல்ல. கால ஓட்டத்தில் மாறிவிடும் என்பது உண்மைதான்.

இருந்தபோதும் இது சாதாரண பைரோமையல்ஜியா தானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இரவு நேரத்தில் சிரமப்படுவது, அடிக்கடி சலம் கழிப்பது, யோசித்தபடி இருப்பது, உடல் உறவிற்கு மறுப்பது போன்ற அறிகுறிகள் இருப்பதை உங்கள் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே ஆணுறுப்பு அல்லது உடலுறவு பற்றிய ஏதோ ஒரு மன உளைச்சல் அல்லது பயமே அவரது வேதனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருகக்கலாம் என எண்ண வைக்கிறது.

அவ்வாறெனில் ஒரு உளவியல் மருத்துவரை அணுகி வெளிப்படையாகப் பேசுவது முழமையான தீர்வைத் தரும் என எண்ணுகிறேன்.

சிறுநீர்ப் பரிசோதனை (UFR) மற்றும் வயிற்றுப் பகுதி ஸ்கான் (Ultra sound scan of the abdomen) போன்ற பரிசோதனைகள் அவருக்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் என நம்புகிறேன். சிறுநீர்த் தொகுதியில் கிருமித் தொற்று அல்லது கல் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவை உதவும்.

னது கணவர் பெயர் அரவிந்தன் அவருக்கு வயது 28 கடந்த சில மாதங்களாக நெஞ்சு மற்றும் வயிற்றுக்கும் ஆண்உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ரோமங்கள் காணப்படும் அந்தப்புகுதியிலும் மிகவும் கடுமையான வலி. எப்பொழுதும் அது ஏற்படவதல்ல சில நேரங்களில் ஒரே இடத்தில் தோன்றாது மாறி மாறி தோன்றும்.

நெஞ்சு நோகும் போது மூச்சு விடுவதற்கு பலத்த சிரமப்படுகின்றார். அதுவே ஆணுறுப்புக்குமேல் வலி ஏற்படும் பொழுது அடிக்கடி சலம் கழிக்கின்றார். அதைவிட அதில் வேறு பிரச்சினையில்லை. வைத்தியசாலையில் காட்டியும் பலனில்லை வேறு தனியார் வைத்தியசாலையில் காட்டும் போது எல்லா பரிசோதனையும் செய்தார்கள் ஒன்று இல்லை என்று சில மாத்திரைகள் கொடுத்தார்கள் போடுவதற்கு அப்பொழுதும் பயனில்லை மறுபடியும் காட்டும் போது அந்த வைத்தியர் இது தசைகளில் ஏற்படும் ஒருநோய் பைரேமயில்யியா (கiடிசழஅலயடபயை) என்று குறிப்பிட்டார்.

அதற்கு என்று எந்த தனி மாத்திரைகளும் இல்லை இதனால் பயப்படத்தேவையில்லை என்று இந்த நோ கால ஓட்டத்தில் தானகவே சரியாகி விடும் என்று. ஆனால் என்க்கு பயமாக உள்ளது. இப்படி ஒரு பெயரில் நான் நோய் கேள்விப்பட்டதும் இல்லை. எனது கணவர் இரவில் சரியாக சிரமப்படுகின்றார். இப்படி வைத்தியர்களே சொல்லும் போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வைத்தியர் அந்த நோயின் விளக்கத்தை தரவில்லை.

தயவுசெய்து பைரேமயில்யியா பாரதுரமான நோயா? இதனை குணப்படுத்த முடியாதா? இது எவ்வளவு காலம் இப்படியே இருக்கும்? ஆணுறுப்புக்கு மேல் வலி ஏற்படும் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர் உறவுக்கும் சம்மதிப்பதில் வலி அதிகமாகி விடும் என்று. எனத தோழியின் மூலமே பத்திரிகையில் கேள்விக்கு பதில் தருவார்கள் என்றார்கள். தயவுசெய்து எனது கேள்வியை தட்டிக்கழிக்காமல் பதில் தருவீர்களா? எனத கணவர் இதனை யோசித்த படியே இருக்கின்றார். தயவு செய்து பதில் தரவும்.

நன்றி

பதில்:- நீங்கள் குறிப்படும் பைரோமையல்ஜியா நோய் பற்றி சில வாரங்களுக்கு முன்னர் தினக்குரல் கேள்வி பதில் பகுதியில் எழுதியிருந்தேன். மாறி மாறி வேறு இடங்களில் ஏற்படும் வலி, களைப்பு, உற்சாகக் குறைவு, அமைதியின்மை, மனநிலை மாற்றங்கள், நித்திரைக் குறைவு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு இருக்கும். வலிகள் இருந்தபோதும் சாதாரண வலிநிவாரணி மாத்திரைகள் பயன் தருவதில்லை.

சாதாரண வலிகள் கூட கடுமையாகத் தோன்றும். இவ்வாறு வலி கடுமையாகத் தெரிவதற்குக் காரணம் மூளையானது சாதாரண வலிகளை அசாதாரணமாக உணர வைப்பதே ஆகும்.

சாதாரண வலிநிவாரணி மாத்திரைகள் உதவாதபோதும் வேறு சில மருந்துகள் உதவக் கூடும். உதாரணமாக வலிப்பு நோய்களுக்கு மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிக்குப் பயன்படுத்தும் மருந்துகள் உதவலாம். அவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது காரணமாக பைரோமையல்ஜியா நோயின் வேதனைகளைத் தணிக்க உதவுகின்றன.

உளவளத்துணையும் நிறையவே உதவக் கூடும். இது ஆபத்தான நோயல்ல. கால ஓட்டத்தில் மாறிவிடும் என்பது உண்மைதான்.

இருந்தபோதும் இது சாதாரண பைரோமையல்ஜியா தானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இரவு நேரத்தில் சிரமப்படுவது, அடிக்கடி சலம் கழிப்பது, யோசித்தபடி இருப்பது, உடல் உறவிற்கு மறுப்பது போன்ற அறிகுறிகள் இருப்பதை உங்கள் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே ஆணுறுப்பு அல்லது உடலுறவு பற்றிய ஏதோ ஒரு மன உளைச்சல் அல்லது பயமே அவரது வேதனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருகக்கலாம் என எண்ண வைக்கிறது.

அவ்வாறெனில் ஒரு உளவியல் மருத்துவரை அணுகி வெளிப்படையாகப் பேசுவது முழமையான தீர்வைத் தரும் என எண்ணுகிறேன்.

சிறுநீர்ப் பரிசோதனை (UFR), மற்றும் வயிற்றுப் பகுதி ஸ்கான் (Ultra sound scan of the abdomen) போன்ற பரிசோதனைகள் அவருக்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் என நம்புகிறேன். சிறுநீர்த் தொகுதியில் கிருமித் தொற்று அல்லது கல் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவை உதவும்.

எனது வயது 56. எனது மனைவியின் வயது 53. இருவருமே ஆரோக்கியமாக இருக்கிறோம். 51 வயதிலேயே மெனோபோஸ் பருவம் ஏற்பட்டுவிட்டது. தற்போது உடலுறவில் நாட்டம் குறைந்துவிட்டதாகவும் கூறுகிறாள். அப்படியே உறவு கொண்டாலும் எரிவு ஏற்படுவதாக கூறி உறவுகொள்ள தயக்கம் காட்டுகிறாள். எரிவு மறுநாள் வரையும் இருப்பதாகவும் கூறுகிறாள்.
பாலுறுப்பு வரட்சியால் தான் இப்படி ஏற்படுகிறதா? உறவுகொள்ளும்போது எரிவு ஏற்படாமல் இருக்க ஏதாவது மருந்து வகைகள் உண்டாயின் அதன் பெயரையும், பாவிக்கும் முறையையும், பாவிக்கும் வேளையையும் கூறவும். தொடர்ந்து உறவு கொள்ள நல்ல பரிகாரம் ஒன்றை கூறவும்.

பதில்:- உங்கள் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். வயதாகும்போது உடலுறவு நாட்டம் குறைவது ஆண் பெண் இருசாராரிலும் உள்ள போதும் பெண்களில் ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் குறைகிறது. மெனபோஸ் மட்டும் இதற்குக் காரணமல்ல. ஏனெனில் இந்த பாலியல் நாட்டக் குறைவானது பலரில் 40 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகிறது.

இருந்தபோதும் சில பெண்களில் மெனபோசின் பின்னர் பாலியல் நாட்டம் மீண்டும் அதிகரிப்பதும் உண்டு.

பெண்களின் பாலியல் நாட்டக் குறைபாட்டிற்குக் காரணங்கள் பல. வயதாகும்போது பெண் ஹோர்மோனான ஈஜ்ரோஜின் அளவு பெண்களில் குறைகிறது. இதனால் அவர்களது பாலுறுப்பிற்கு செல்லும்; குருதியின் அளவும் குறைகிறது. இதனால் பாலுறுப்பின் ஈரலிப்புத்தன்மை குறைந்து வரட்சி அடைகிறது. பாலுறுப்புகள் ஈரலிப்பாகவும் வழுவழுப்பாகவும் இருந்தால்தான் உடலுறவு சுகம் அளிக்கும், வேதனை ஏற்படாது. அவை இல்லாமையே உங்கள் மனைவி எரிகிறது என்று சொல்லி உடலுறவிற்கு தயங்குவதற்குக் காரணம் எனலாம்.

அந்த வரட்சியைத் தணித்து உறவு சுமுகமாவதற்கு ஈரப்பதத்தை ஊக்குவிக்கும் விசேட கிறீம் மருந்துகள் (moisturising cream) உள்ளன. இலங்கை குடும்ப கட்டுப்பாட்டுச் சங்கம் Easy glide என்ற கிறீமை சந்தைப்படுத்துகிறது. பெரும்பாலான மருந்தகங்களில் இது கிடைக்கும். இதே போன்ற வேறு பல கிறீம் வகைகளும் இதற்கு உண்டு. உறவிற்கு முன்னர் இதைப் பூசுவதால் எரிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

இதற்குப் பதிலாக நல்லெண்ணெய் பூசலாம் என்று சிலர் சொல்கின்ற போதும் அதன் கடுமையான மணமானது பாலுறவு நாட்டத்தை குறைக்கக் கூடும் என்பதால் என்னால் சிபார்சு செய்ய முடியவில்லை.

உங்கள் மனைவிக்கு பாலியல் நாட்டக் குறைபாடு ஏற்படுவதற்கு மெனபோசும் ஹோர்மோன் குறைபாடும் மட்டும்தான் காரணமாக இருக்க வேண்டும் என்றில்லை.

புறச் சூழலும் காரணமாகலாம். வளர்ந்த பிள்ளைகள், அவர்களது கல்வி, தொழில், திருமணம் போன்றவற்றை கவனிக்க வேண்டிய உளநெருக்குவாரம் போன்றவை காரணமாகலாம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். வயதான காலத்தில் கரு தங்கிவிடுமா என்ற பயமும் பலரை உடலுறவிலிருந்து எட்டி நிற்கச் செய்கிறது.

பாலியல் என்பது உடலுறவு மட்டுமல்ல. தொடுகை, அணைப்பு, இதமான பேச்சு போன்றவை பாலியல் திருப்தியை முதுமையில் கொடுக்கும் என்பதை ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். உறவில் நாட்டமில்லாத உங்கள் மனைவிக்கு நீங்கள் இதைக் கொடுக்கலாமே.