Home சூடான செய்திகள் நடுராத்திரி பக்கத்து வீட்டு படுக்கை அறைகளை எட்டிப்பார்த்து ரசிக்கிற பழக்கம் உண்டு

நடுராத்திரி பக்கத்து வீட்டு படுக்கை அறைகளை எட்டிப்பார்த்து ரசிக்கிற பழக்கம் உண்டு

266

சூடான செய்திகள்:அவனுக்கு 16 வயது. ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே செல்ல மகன். அவனது தந்தை காலையிலே கூலி வேலைக்கு சென்றுவிடுவார். ஒருசில நாட்கள் இரவில் வீடு திரும்பாமல், தான் வேலைபார்க்கும் இடத்திலே தங்கிவிடுவார். தாயார், அருகில் உள்ள வீடுகளுக்கு வேலைக்கு செல்வார். இருவரும் உடலுக்கு சோர்வுதரும் விதத்தில் கடுமையாக உழைப்பதால் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். பள்ளிக்கு செல்லும் மகன் மீது அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை.

அவர்கள் குடிசைகள் நிறைந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதிக்குள் வேற்று ஆட்கள் நுழையமாட்டார்கள். எல்லோரும் ஏழைகள் என்பதால் அங்கு திருட்டு பயமும் கிடையாது. இரவு ஒன்பது மணியாகும்போதே தாய், தந்தை, மகன் மூன்று பேரும் தூங்க தயாராகி விடுவார்கள். தாயும், தந்தையும் இரவில் தூங்கத் தொடங்கிவிட்டால் அதிகாலையில்தான் விழிப்பார்கள். ஆனால் மகனோ ஒன்பது மணிக்கு படுத்து, பனிரெண்டு மணிவாக்கில் சத்தமில்லாமல் எழுந்து, நைசாக நழுவி வெளியே போய்விடுவான். அதிகாலை இரண்டு.. மூன்று மணிவாக்கில் களைத்துபோய் திரும்பி வந்து அம்மா அருகில் படுத்துக்கொள்வான்.

அந்த பழக்கம் ஆரம்பித்த சில மாதங்களாகவே அவன் கையில் பணம் புழங்கத் தொடங்கியது. அதில் அம்மாவுக்கு புடவை வாங்கிக்கொடுத்தான். அப்பாவுக்கு புதிய வாட்ச் வாங்கித்தந்தான். ‘இதெல்லாம் எப்படி கிடைத்தது?’ என்று தாயார் கேட்டபோது, ‘பள்ளியில் என்னோடு படிக்கும் மாணவன் வசதியானவன். நான் அதிக மார்க் வாங்குவதும், நாம் ஏழை என்பதும் அவனது தாயாருக்கு தெரியும். அவர்தான் எனது படிப்பு ஆர்வத்தை தூண்டுவதற்காக இதை எல்லாம் எனக்கு பரிசாக தருகிறார்’ என்றான். தாயாருக்கும் அதில் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் அவன் அடிக்கடி நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி, வெகு நேரம் கழித்து வீடு திரும்புவது அவனது பெற்றோருக்கு தெரிந்திருக்கவில்லை.

அன்றும் நள்ளிரவைத் தாண்டியதும் அவன் படுக்கையில் இருந்து எழுந்து, வெளியேறினான். அடுத்த இரண்டு மணி நேரத்தில், வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த அவனது தாயாருக்கு ஒரு மருத் துவமனையில் இருந்து போன் வந்தது. ‘உங்கள் மகன் காயத்தோடு அனுமதிக்கப்பட்டிருக்கிறான். சீக்கிரம் வாருங்கள்..’ என்று விவரத்தை கூறினார்கள். தாயார் பதற்றமானார். தனது அருகிலே தூங்கியவன் எங்கே போனான்? என்ன ஆனான்? எதுவுமே அவருக்கு புரியவில்லை. வேலை பார்க்கும் இடத்திலே தங்கிவிட்ட கணவருக்கு தகவலை கூறிவிட்டு, மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு கால் முறிந்த நிலையில் மகன் கிடந்தான்.

‘நடுராத்திரி காலை உடைச்சிக்கிட்டு, ரோட்டு ஓரத்தில் கிடந்து கதறி இருக்கிறான். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைமுடிந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பொண்ணுங்க இவனை பார்த்து, பரிதாபப்பட்டு காப்பாற்றி, இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. எப்படி கால் உடைஞ்சுதுன்னு கேட்டால் சொல்ல மாட்டேங்கிறான்’ என்றபடி நர்ஸ் சிகிச்சையை தொடங்கியிருந்தார்.

மகன் திருட்டு வேலையில் ஈடுபட்டிருப்பான் என்று நினைத்து, தாயாருக்கு அவன் மீது ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. மருத்துவமனை என்பதால் கோபத்தை அடக்கிக்கொண்டார். அதற்குள் தந்தையும் வந்துவிட, எப்படியோ பணத்தை புரட்டினார்கள். ஆபரேஷனும் நடந்து, அவன் அறைக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான்.

அவன் ஓரளவு தேறியதும் தாயார் கோபத்தை கொட்டத் தொடங்கினார். ‘நீ நடுராத்திரி திருடத்தானே போனே.. இந்த திருட்டு வேலையை எத்தனை நாளாக பார்க்கிறாய்? எங்களுக்கு கொடுத்த புடவை, வாட்ச் எல்லாமே நீ திருடிய பணத்தில்தானே வாங்கியது?’ என்று கேட்டபடி அடிக்க கையை ஓங்கினார்.

‘நீ என்னை அடிம்மா.. நான் தப்பு பண்ணியிருக்கேன். ஆனால் நான் யார் வீட்டிலேயும், எதையும் திருடவில்லை..’ என்று கண்ணீர்விட்ட அவன், தான் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறியதற்கும், கீழே விழுந்து அடிபட்டதுக்கும் என்ன காரணம் என்று சொன்னது தாயாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

‘அம்மா என்னை தப்பா நினைச்சுக்காதேம்மா. என்னோடு படிக்கிறானே அந்த வசதிபடைத்த வீட்டு பையன், அவனுக்கு நடுராத்திரி பக்கத்து வீட்டு படுக்கை அறைகளை எட்டிப்பார்த்து ரசிக்கிற பழக்கம் உண்டு. அவன் ஏரியாவில் அப்படி சில வீடுகளை எட்டிப்பார்த்ததில் பிரச்சினை ஆயிடுச்சாம். அதனால வேறு ஏரியாவுக்கு போக ஆரம்பிச்சான். பணம் தர்றதா சொல்லி என்னை பாதுகாப்புக்கு மட்டும் கூப்பிட்டான். அந்த பணத்தை வாங்கி, உங்களுக்கு ஏதாவது பொருட்கள் வாங்கித்தரலாம் என்ற ஆசையில் நானும் அவன்கூட போயிட்டேன். நான் படுக்கை அறையை எட்டிப்பார்க்கமாட்டேன். அவனுக்கு பாதுகாப்பாக ஒரு ஓரமாக நிற்பேன். அன்றைக்கு நானும் அவனும் ஒரு மாடி வீட்டிற்கு போனோம். அவன் ரொம்ப நேரம் காத்திருந்து திறந்திருந்த ஜன்னல்வழியாக எதையோ பார்த்துக்கிட்டிருந்தான். சும்மாவே நின்னுக்கிட்டிருந்த நான் தூக்க கலக்கத்தில் திடீர்னு நிலைதடுமாறி கீழே விழுந்திட்டேன். பயந்துபோய், அழக்கூட முடியாமல் அங்கேயே கிடந்தேன். எனக்கு கால் உடைஞ்சது தெரிஞ்ச பிறகும் அவன் என்னை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போயிட்டான். இனிமே நான் அவன்கூட போகவேமாட்டேன்மா..’ என்று அழுதான்.

‘சீ.. அவன் இவ்வளவு மோசமான பையனா? இனிமேல் நீ அவனோடு சேராதே..’ என்று தாயார் அவனை தேற்றினார்.

(அடுத்தவர்களின் அந்தரங்க செயல்களை ரசித்துப்பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்கள் ஒரு சிலரிடமும் இருக்கிறது என்பதை பெற்றோர் கவனத்தில்கொள்ளத்தான் இதை சொல்கிறோம்! இதை கண்டுபிடித்து, இப்போதே அவர்களை திருத்தாவிட்டால், இதுவே எதிர்காலத்தில் மனநோயாக மாறி அவர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும்)