Home சூடான செய்திகள் நீங்களே அருமையாகக் கவனித்துக் கொள்ள 8 அழகான வழிகள்!!

நீங்களே அருமையாகக் கவனித்துக் கொள்ள 8 அழகான வழிகள்!!

35

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்கிறீர்களா?

அதே நேரத்தில், உங்களைப் பற்றிய அக்கறை உங்களுக்குத் துளிக்கூட இல்லையா? நீங்கள் ஒன்றும் அவ்வளவு ‘பாசக்காரப் பயபுள்ளை’யாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதற்காக யாரும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

அடுத்தவர்களுக்கே நீங்கள் உதவும் போது, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதா?

மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த அளவிற்காவது நீங்கள் ஒரு சுயநலவாதியாக இருந்தால் தான் அடுத்தவர்களை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும். இப்போது உங்களை நீங்களே எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

அடுத்தவர்களுக்கு எப்போதும் உதவிக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் எதுவும் நேரக் கூடாது. அதற்காக உங்களுடைய உடம்பில் நோயெதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு முக்கியத் தேவை மசாஜ் செய்து கொள்வதாகும். உழைத்து உழைத்துக் களைத்துப் போன உங்களுக்கு மசாஜ் ஒரு புதுத் தெம்பையும் கொடுக்கும். உடல் களைப்பும் நீங்கும்.

உங்களுக்கு வேகமாகத் தூக்கம் வருகிறது, ஆனால் தொடர்ந்து தூங்க முடியவில்லையா? கவலையை விடுங்கள், அதற்கும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும்.

மசாஜ் செய்வதால் உங்கள் ஹார்மோன் அளவுகள் மாறி, தசை இறுக்கங்கள் குறைந்து, உடம்பே இலகுவாகி விடும். இதனால், உங்கள் மூளையிலுள்ள டெல்டா அலைகள் தூண்டப்பட்டு, உங்களால் நன்றாகவும் தூங்க முடியும்.

உங்களுக்கு நோயோ, உடம்பில் வலியோ இருக்காது. ஆனால் எப்போதும் களைப்பாக இருப்பது போல் உணர்வீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் ஊண்-உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைப்பது தான். உங்கள் கடின உழைப்புக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பேட்டரிக்கு ரீசார்ஜ் கொடுப்பது போல தான். ஓய்வுக்கு அப்புறம், உங்களால் இன்னும் அதிகமாக உழைக்க முடியும்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். உங்கள் தோற்றம் நன்றாக இருந்தால், உங்கள் உணர்வும் நன்றாகத் தான் இருக்கும். உங்களை நன்றாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

முடி அலங்காரத்திலிருந்து கால் நகங்களைப் பராமரிப்பது வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருங்கள்.

உங்களுக்கே உங்கள் மேல் இன்னும் அதிக நம்பிக்கை வளரும். முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக தினமும் நிறைய மாத்திரைகளை எடுத்து வருகிறீர்களா? முதலில் அந்தப் பழக்கத்தை விடுங்கள்.

இதுப்போன்ற உடல் வலிகளைப் போக்கவும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும். ஸ்வீடிஷ் மசாஜ் மற்றும் விளையாட்டு மசாஜ் செய்வதால் தசைகள் ஒழுங்காக இயங்கி, வலிகள் குறையும்.

இந்த இரு மசாஜ்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், மாத்திரைகளுக்கு ‘குட் பை’ சொல்லிவிடலாம்!