Home சூடான செய்திகள் உங்கள் துணை உங்களை அதிகம் விரும்ப நீங்கள் செய்ய வேண்டியவை

உங்கள் துணை உங்களை அதிகம் விரும்ப நீங்கள் செய்ய வேண்டியவை

33

கணவனும் மனைவியும் நண்பர்களைப் போன்றவர்கள். அதேசமயம் நண்பர்களைவிடவும் மேலானவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இருவருக்குமான புரிதலும் நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும்.

கணவனும் மனைவியும் இணைந்து இனிமையாக வாழ வேண்டுமென்றால் அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும். கீழ்வரும் சில செயல்பாடுகளைச் செய்வதின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கும்.

குறிப்பாக, ஆணுக்குப் பெண்கள் மீதான் அன்பும் காதலும் பெருகும்.

கணவன் எவ்வளவு சோகமாகவோ வருத்தமாகவோ இருந்தாலும் அவர்களைின் முகத்தில் புன்னகை வரும்படியான காரியத்தைச் செய்யுங்கள்.

உங்களுடைய தோளில் சாய்த்து தூங்க வையுங்கள்.

தூங்கி எழுந்திருக்கும்போது உங்கள் கணவருக்கு முன்பாகவே நீங்கள் எழுந்திருக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களுக்குப் பின்னால் எழுந்திருக்கும் அவருக்கு அவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பது புரியும்.

முழு நாளும் இவருடனேயே இருங்கள். ஒரு முழு 24 மணி நேரத்தையும் முழுக்க முழுக்க கட்டிலில் இன்பமாக இருக்க செலவிடுங்கள்.

கட்டிலில் உறவின்போது அவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இன்பத்தைக் கொடுங்கள். இதுதான் உறவின் உச்சம் என்று உணரும்படியான இன்பத்தைக் கொடுங்கள்.

உங்கள் அருகாமை எப்போதெல்லாம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறாரோ அப்போது அவருடன் இருங்கள்.

அவ்வப்போது செல்லமாக சிறுசிறு சண்டை போட்டுக்கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் செய்து வந்தால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் காதலும் அதிகரித்துக் கொண்டே போகும்.