Home காமசூத்ரா தாம்பத்தியம் “உச்சகட்டம்”

தாம்பத்தியம் “உச்சகட்டம்”

111

திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு. குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்….!!? இதில் படித்தவர்களின் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றே தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல் , புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது மிக முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக இருந்துவிட்டால்….குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியே பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறி கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள், கள்ள உறவுகள் போன்றவை ஏற்பட சரியான செக்சை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும் இறுதி நிலையாகும். ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம்.

* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும்.

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.

இந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும்.

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் ‘முழு திருப்தியை ஒரு பெண்ணுக்கு தராது’ என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே.

* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்…ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்… உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை. …..??! ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள் இருக்கலாம்….சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவை குறித்த முறையான தெளிவின்மை, உறவை பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும் உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. அங்கே சரியாக நடைபெறவில்லை என்றால் அதன் எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்…அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன் தன் மனைவியை வென்றவன் ஆகிறான்…!!

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம் (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்….அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால் அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் ‘இக்கரைக்கு அக்கறை பச்சை’ என்று புரிய வரும் போது…வருடங்கள் ஓடி போயிருக்கும்….தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

‘ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை’ என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது.