Home அழகு குறிப்பு கூந்தல் அழகு தலைமுடி உதிர்வை தடுக்க சில உணவு முறைகள்

தலைமுடி உதிர்வை தடுக்க சில உணவு முறைகள்

47

பொது­வாக தலை­மயிர் உதிர்­வ­தற்கு பல காரணங்கள் உள்­ளன.

எமது உடலில் உள்ள ஹோர்­மோன்­க­ளான antrogen மற்றும் Estrogen என்­ப­வற்­றுக்­கி­டை­யே­யான வேறு­பாடு அதி­க­மாக இருப்­பது ஒரு காரணம்.

இதற்கு தகுந்த சிகிச்சை தேவைப்­படும். அதைத்தவிர தைரொ­யிட்டு (Thyroit) சுரப்பியின் மித­மிஞ்­சிய செயற்­பாடு அல்­லது அதிகுறை­வான செயற்­பா­டுகள் இரண்டும் உடல் நலத்தை மற்­று­மின்றி முடி உதிர்­வ­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

நாம் பாவிக்கும் சில நோய்­க­ளுக்­கான மருந்­துகள் கூட தலை­முடி உதிர்வில் பங்கு கொள்­கின்­றன என்­பது சில­ருக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்கும்.

உதா­ர­ண­மாக குருதி உறை­தலை தடுக்கும் மருந்­துகள், குடும்பக்கட்­டுப்­பாட்­டுக்கு பாவிக்கும் வில்­லைகள், உயர் குருதி அழுத்­தத்­திற்கு பாவிக்கும் மருந்­துகள் மற்றும் steroid என்­ப­வற்றின் பக்க விளை­வுகள் முடி உதிர்­வுக்கு கார­ண­மாக அமையும்.

மித­மிஞ்­சிய அளவில் எடுக்கும் விற்­றமின் ஏ யும் இதற்கு ஒரு காரணம்.

இவ்­வாறு மருந்­து­களால் ஏற்­படும் முடி உதிர்வை, எடுக்கும் மருந்­து­களை முறைப்­படி பயன்­ப­டுத்­து­வதால் தவிர்த்­துக்­கொள்ள முடியும்.

முடி உதிர்வை பின்­வரும் வழி­களை கடை­பி­டிப்­பதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.

v சுகா­தா­ர­மான தலை­முடி பரா­ம­ரிப்பு

v சீரான தலை முடி பரா­ம­ரிப்பு

v ஆரோக்­கி­ய­மான உணவு, உறக்கம்

v சீரான மன­நலம்

தலை­மு­டியை நன்கு பரா­ம­ரிக்­கவும் தலை­மு­டியின் வளர்ச்சி வேகத்தை அதிகபடுத்­தவும் சில குறிப்­புகள்.

உங்கள் தின­சரி உணவில் கட்­டாயம் பழ­வ­கை­க­ளையும் மரக்­கறி வகை­க­ளையும் கீரைவகைகளையும் சேர்த்­துக்­கொள்­வ­துடன், இறைச்சி மற்றும் மீன் வகை­களும் உள்­ள­டங்­கு­வது அவ­சி­ய­மாகும்.

காரணம் தலை­முடி கெரட்டின் எனும் புர­தத்தால் அமை­யப்­பட்­ட­தொன்று என்­பதால் நாம் அதி­க­ளவு புரத உண­வு­களை உட்­கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது.

உதா­ர­ண­மாக கோழி, மீன், முட்டை, சோயா வகைகள் பீன்ஸ் போன்­ற­வற்றை கூறலாம். இவ்­வ­கை­யான உண­வுகள் ஆரோக்­கி­ய­மான முடி வளர்ச்­சிக்கு தேவை­யான கெரட்டின் எனும் புரத மூலக் கூறு­களின் உரு­வாக்­கத்­திற்கு கார­ண­மாக அமை­கி­ன்றன.

உட­லுக்கு தேவை­யான கொழுப்பு உண­வுகள் முக்­கி­ய­மாக Omega_3 அதி­க­முள்ள கொழுப்பு உண­வுகள் ஆரோக்­கி­ய­மான உட­லுக்கும் மற்றும் முடிக்கும் அவ­சி­ய­மாகும்.

மித­மிஞ்­சிய கொழுப்பு உண­வு­களை தவிர்ப்­பது உடல் நலத்­திற்கு நல்­லது.
இரும்பு (Iron) மற்றும் zine அதி­க­முள்ள உண­வுகள் தலை­மு­டியின் வளர்ச்­சிக்கு பெரிதும் அவ­சி­ய­மாகும்.

இரும்­புச்­சத்­தா­னது உடலின் சகல பகு­தி­க­ளுக்கும் தேவை­யான ஒட்­சி­சனை கொண்டு செல்ல அவ­சி­ய­மா­கி­றது.

zine விற்றமின் இறந்த உடற்கலங்­களை புதுப்­பிப் ­ப­தற்கு அவ­சி­ய­மா­கி­றது.

அது மட்டு மன்றி மயிர் கால்­களை சுற்றி உள்ள மயிர்­களின் பள­ப­ளப்­புக்கு கார­ண­மான எண்­ணெயை சுரக்கும் எண்ணெய் சுரப்­பி­களின் செயற்­பாட்டை சீராக செயற்­பட வைக்­கின்­றது.

zine அதி­க­முள்ள உண­வு­க­ளா­னவை, வறுத்த தானியம் மற்றும் பருப்பு வகைகள், நிலக்­க­டலை, கொக்கோ அதிகம் உள்ள சொக்லெட் (Dark Chocolate) பூச­ணிக்காய் போன்ற­வற்றை கூறலாம்.

வறண்ட சருமம் உள்­ள­வர்­க­ளுக்கும், வறண்ட தலை­மயிர் உள்­ள­வர்­களும் zine அதிக பயன்­ப­டுத்­த­வேண்டும்.

இரும்­புச்­சத்தின் செயற்­பாட்­டுக்கு விற்­றமின் C யின் சேர்க்கை அவ­சி­ய­மாகும் எனவே இரும்­புச்­சத்து உள்ள உண­வு­க­ளுடன் விற்­றமின் C அதி­க­முள்ள உணவுகளையும் சேர்த்­து­க்கொள்­ள­வேண்டும்.

எனவே, முடிந்த வரை ஆரோக்­கி­ய­மான உண­வு­வ­கை­களை தகுந்த அளவில் நாம் உட்­கொண்டு வந்தால். உடல் நலம், ஆரோக்­கி­ய­மான, அமை­தி­யான மன நலத்­திற்கு கார­ண­மாக அமையும்.

தலை­முடி பரா­ம­ரிப்பு பற்றி பார்க்கும் போது மித­மிஞ்­சிய அழகு சாத­னங்­களும் அடிக்க­டி ­மாற்­றிக்­கொள்ளும் முடி அலங்­கா­ரங்­களும் தலை­மு­டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொது­வாக அழகு நிலை­யங்­களில் பாவிக்கும் தலை முடி­களை சீராக்கும் பதார்த்­தங்கள், இர­சா­யன கல­வை­யா­கவே அதிகம் இருக்கும். இவற்றை முறை தவறி பயன்­ப­டுத்­து­வ­தாலும், அள­வுக்கு அதி­க­மாக பயன்­ப­டுத்­து­வ­தாலும் முடியின் தடிப்பு குறைந்து மெல்­லிய மயிர்­க­ளாக மாறு­வது மட்­டு­மின்றி முடி உதிர்­வுக்கும் கார­ண­மாக அமையும்.

அடிக்­கடி தலை முடியை உலர்த்­து­வ­தற்கு செயற்கை வெப்­பத்தை பயன்­ப­டுத்­து­வதும் மித­மிஞ்­சிய வெப்­பமும் தலை­முடி உதிர்­வுக்கு கார­ண­மாகும்.

எனவே முடிந்­த­ளவு தலை­மு­டியை உலர்த்­து­வ­தற்கு மின்­சார உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்­து­வதை தவிர்ப்­பது நல்­லது.

அடிக்­கடி தலை­மு­டியை சீப்பால் சீவு­வதால் தலை முடி வளரும் என கூறப்­பட்­டாலும், மித­மிஞ்­சிய அழுத்­தத்தை முடிக்கு கொடுக்கும் போது தலை­மு­டியின் மயிர்க்­கால்கள் வெளியே இழுக்­கப்­ப­டு­கி­ன்றன.

இச்­செ­யற்­பாடு காலப்­போக்கில் முடி உதிர்­வுக்கு கார­ண­மாக அமைந்து விடும்.

மிக­மிக முக்­கி­ய­மான விடயம் தலை முடி நனைந்த நிலையில் சீப்பால் சீவு­வதும் அழுத்தி துடைப்­பதும் முடி உதிர்வை அதி­கப்­ப­டுத்தும்.

தலை முடி ஈர­மாக இருக்கும் நிலையில் அதன் உறுதி தன்மை குறை­வதால் இலகுவில் பாதிப்­ப­டைய வாய்ப்­புண்டு.

தலை முடியில் அதிக அழுத்தம் கொடுக்கும் விட­யங்­களில் கூடிய கவனம் எடுப்­பது நல்­லது.

குறிப்­பாக, இறப்பர் நாடாக்­களை கொண்டு தலை முடியை இழுத்து கட்டும் போதும் மேல­தி­க­மாக கிளிப் வகை­களை அழுத்­த­மாக முடியை இழுத்து செருகும் போதும் தேவை­யற்ற அழுத்­தத்­திற்கு தலை­முடி உட்­ப­டு­கி­றது.

இம் மித­மிஞ்­சிய அழுத்தம் தலை­முடி உதிர்வை ஏற்­ப­டுத்தும்.
தலை­மு­டியை கழுவும் போது கூடுதல் கவனம் செலுத்தல் வேண்டும்.

உங்கள் தலை­மு­டியின் எண்ணெய் தன்­மைக்கு ஏற்ப கிழ­மைக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் shambo அல்­லது Conditioner பயன்­ப­டுத்­தலாம்.

இவற்றை அதி­க­மாகப் பயன்­ப­டுத்தும் போது இவை தலைமுடியில் இயற்­கை­யாக உள்ள எண்ணெய்த் தன்­மையை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

இதனால் வறண்ட தலைமுடியாக மாறுவதுடன் தலை முடி உதிர்வும் அதிகமாகும்.

v இரவு நித்திரைக்கு போகும் முன் தலையை இதமாக மாசாஜ் செய்து கொள்ளுங்கள்.
v தலைமுடி ஈரமாக உள்ள நிலையில் கூடிய கவனம் எடுக்கவும்.

v குறைந்தளவான வெப்பத்தை தலைமுடி உலர்த்த பயன்படுத்தவும்.

v ஆரோக்கியமான உணவில் அதிக நாட்டம் எடுங்கள்.

v Steroid மருந்துகளை வைத்திய ஆலோசனை இன்றி தொடர்ந்து பாவிப்பதை தவிருங்கள்.

v இரசாயனம் சேர்க்கப்பட்ட தலைமுடி சீராக்கிகளை தவிர்த்து இயற்கை மூலிகைகளை பயன்படுத்தவும்.