Home ஆண்கள் ஆண்களே உங்கள் விதையை கவனியுங்கள் இதுவாக இருக்கலாம்

ஆண்களே உங்கள் விதையை கவனியுங்கள் இதுவாக இருக்கலாம்

102

விரை விதை புற்றுநோய் என்பது மிகவும் அரிதான, 15 முதல் 44 வரை வயதுடைய ஆண்களுக்கு வரக்கூடிய மிக சாதாரண வகை புற்றுநோய் ஆகும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் இதற்காக எந்த விதமான கட்டாய பரிசோதனைகளையோ, சுய பரிசோதனைகளையோ பரிந்துரைக்கவில்லை

விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை தொடர்ந்து, இலாப நோக்கமில்லாத நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில், சரி பாதி ஆண்கள் இந்த புற்றுநோய்க்கு எந்த ஒரு சுயபரிசோதனையும் செய்யவில்லை என்று கூறுவதோடு, இந்த நோய் 2017 ல் மட்டும் அமெரிக்காவில் 400 க்கும் மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்தி உள்ளது.

விதைப்பை புற்றுநோய் ஸ்காட் பெட்டிங்கா வயது 45, 2004 ஆம் ஆண்டில் விரை விதை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளனார் “நான் 31 வயதாக இருந்தபோது, திருமணம் செய்து கொண்டேன், தேனிலவுக்கு சென்றபோது ஒரு கட்டி உள்ளதை கண்டுபிடித்தோம்” என்று அவர் கூறினார். நோய் கண்டு பிடித்த ஒரு வாரத்திற்குள், அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், மேலும் அவர் கதிரியக்க சிகிச்சையும் பெற்றார். விரை விதை புற்றுநோய் பாதிப்பை முதல் நிலையிலேயே கண்டுபிடித்ததை அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவர் “நான் ஒருபோதும் இது போன்ற கட்டிகள் குறித்த பரிசோதனைகள் பற்றியோ (அ) எச்சரிக்கையாக இருப்பது குறித்தோ கேள்விப்பட்டதில்லை” என்று MensHealth.com இடம் கூறினார். பெட்டிங்கா மட்டுமல்ல நம்மில் பலருக்கும், இந்த நோய் பற்றிய தடுப்பு முறைகள் மற்றும் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவனம் செலுத்துவது இல்லை. விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை சிறப்பிக்கும் வகையில் பெட்டிங்கா-வின் இலாப நோக்கமற்ற அமைப்பானது (Center for Advocacy for Cancer of the Testes International (CACTI)) சுமார் 1,000 ஆண்களிடம், இது குறித்து ஏதாவது சுய பரிசோதனைகள் செய்து கொண்டதுண்டா என்று கேட்ட போது ஏறக்குறைய பாதி பேர் இல்லை என்று கூறினார்கள்.

காரணங்கள் CACTI கணக்கெடுப்பு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தால் அல்லது மருத்துவக் குழுவால் நடத்தப்படவில்லை என்பதால், அதன் கண்டுபிடிப்பை உன்னிப்புடன் எடுத்துக்கொள்வது நல்லது. ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்கவை ஏனென்றால், பலரும் இந்த புற்றுநோயைச் பற்றி தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். 40 சதவிகிதத்தினர் இந்த நோய் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொள்வதாலலும், சுய இன்ப பழக்கத்தாலும் அல்லது அதிகமாக உடலுறவு வைத்துக் கொள்வதாலும் வரலாம் என்று நம்புவதாகக் கூறினார்கள். ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை. எனவே, வெகு சிலரே சுயபரிசோதனைகள் செய்வது ஏன்? அது முதலில் அவசியமா? விரை விதை புற்றுநோய் என்றல் என்ன? என்ற கேள்விகள் எழுகிறது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின், எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையம், ஹூஸ்டன்-ல், சிறுநீரகப் மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் உதவி பேராசிரியரான மத்தேயு காம்ப்பெல் கூறுகையில் , 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இளம் வயது ஆண்களுக்கு இந்த புற்றுநோய் மிகவும் சாதாரண மற்றும் பொதுவானது என்றாலும், இது அரிதான புற்றுநோயாகும். மேலும் “அமெரிக்காவில் வருஷம் தோறும் சுமார் 8,800 பேருக்கு இந்த நோய் பதிப்பு உள்ளது ,” என்று காம்ப்பெல் MensHealth.com இடம் கூறினார். சுய பரிசோதனை செய்து இந்த நோய் பாதிப்பை மிக எளிதாக கண்டறிவதால் நன்மையை தவிர தீங்கு எதுவும் இல்லை.

அறிகுறிகள் மயோ கிளினிக்கின்படி, இந்த புற்றுநோய்க்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றாலும் அபாயகரமான காரணிகளாக, கட்டியான மற்றும் தொங்காத விதைப்பைகள், விதைப்பைகள் அளவுக்கு மீறிய வளர்ச்சி, பாரம்பரிய காரணிகள் மற்றும் வயது (15 முதல் 35 வயது ஆண்களுக்கு சாத்தியம் அதிகம்) ஆகியவற்றை கூறலாம். எனவே “சுய பரிசோதனை செய்வதால் நன்மையே உண்டு தீங்கு ஏதும் இல்லை.” இந்த வகை புற்று நோய் எந்த வகையாக இருந்தாலும் (அ) எந்த வகையில் பாதித்து இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கும் போது மற்ற வகை புற்று நோய்களை போல் அல்லாமல் 95 சதவிகிதம் முற்றிலும் குணமாக்கலாம் , என்கிறார் கேம்பல். இதன் மூலம் ஏன் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்க வேண்டும் என்பதன் முக்கியதுவத்தை உணரலாம்.

செய்யக்கூடாதது? பெண்களுக்கு செய்யப்படும் மார்பக புற்று நோய் பரிசோதனைகள் போல் அல்லாமல் அமெரிக்க நோய் தடுப்பு பிரிவானது இளம் வயது ஆண்களுக்கு தொடர்ச்சியாக (அ) வருடம் ஒருமுறை நோய்க்கான பரிசோதனைகளை பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் பரிசோதனைக்கான பொது செய்தியினால் மக்கள் குழப்பமடையக்கூடும். இது மிகவும் அரிதான நோயாக இருப்பதினால் இந்த நோய்க்கான பரிசோதனைகளினால் எந்த நன்மையும் இல்லை என்று இந்த நிறுவனத்தின் வலை தளம் கூறுகிறது. மேலும் இது போன்ற தவறான பரிசோதனை முடிவுகள் இளம் வயதினரிடையே மன பதட்டம் மற்றும் குழப்பத்தை உண்டாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, அட்டவணையிட்டு தவறாமல் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை, என்று கூறும் காம்ப்பெல், ஒரு மாதாந்திர சுய பரிசோதனைக்கு பரிந்துரை செய்கிறார். “அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் சொந்த உடல்கள் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும், மற்றும் ஒரு சுய பரிசோதனை செய்வதிலிருந்து வரும் தீங்கு ஏதும் இல்லை, சாத்தியமான நன்மை அதிகமாக உள்ளது” என்று காம்ப்பெல் கூறுகிறார். அவர்கள் சுய பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் இருபதற்கு காரணமாக காம்ப்பெல் கூறுவது என்னவென்றால் அவர்களுக்கு இதை வாழ்கையின் ஆரம்பத்திலேயே சொல்லி கொடுக்காததுதான். மேலும் அவர் “இந்த வயதில் இளம் ஆண்கள் தங்கள் பிறப்புறுப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தயங்குகிறார்கள், மற்றும் சங்கடமாக கருதுகிறார்கள். மேலும் இந்த வயதில் நிறைய ஆண்களுக்கு சுகாதார காப்பீடு இல்லை” என்று கூறுகிறார்.

சுயபரிசோதனைகள் ஒரு சுய பரிசோதனை செய்ய, உங்கள் இடது விதைப்பை கட்டியை உங்கள் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவே வைத்து மெதுவாக அழுத்தி ஏதேனும் கட்டிகள் உள்ளதா என்று தடவி பார்க்கவும் அதே போல வலது பக்கமும் செய்யுங்கள். (இதை நீங்கள் குளிக்கும்போது செய்யலாம், ஏனெனில் குளிக்கும்போது உள்ள ஈரப்பதம் இதை மென்மையாக செய்ய உதவுகிறது) அவ்வாறு செய்யும்போது ஏதேனும் கட்டிகள், விதையின் வடிவம் (அ) அளவில் மாற்றம் இவற்றை உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது உங்களுக்கு மன சமாதானத்தை கொடுக்கவும். ஏப்ரல் மதமான விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், நீங்கள் சுய பரிசோதனைசெய்வதை தொடங்கி, மற்றும் ஒவ்வொரு மாதமும் இந்த சுய பரிசோதனையை செய்வதன் மூலம், நீங்கள் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை அங்கீகாரம் செய்கிறீர்கள். மேலும் விவரங்களுக்கு, ஆசிரியரின் Men’s Health or CACTI-ன் இன் சுய-பரிசோதனை வழிகாட்டியை காணவும்