Home ஆண்கள் உங்கள் ஆண்மை குறைபாட்டுக்கு இது காரணமாக இருக்கலாம்.

உங்கள் ஆண்மை குறைபாட்டுக்கு இது காரணமாக இருக்கலாம்.

52

செரோடோனின் என்பது ஒரு கெமிக்கல்களை உற்பத்தி செய்திடும் நரம்பு செல். செல்களுக்கு இடையில் ஓர் சிக்னல் கொடுக்கும் வேலையை இது செய்கிறது. மேலும் இது ரத்த அணுக்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் துணை நிற்கிறது.

அமினோ ஆசிட் ட்ரைப்ரோபான் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செரோடோனின் நம் உடலுக்கு மிகவும் அவசியமாகும். இதனை நீங்கள் உணவின் வழியாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த செரோடோனின் குறைந்தால் மன அழுத்தம்,அதீத தூக்க, உடற்சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும்.

எப்படி பயன்படுகிறது :
செரோடோனின் குறைபாடு நம் உடலையும் பாதிக்கிறது. இதிலிருந்து பெறப்படுகிற கெமிக்கலினால் தான் அன்றாட வாழ்க்கை ஓட்டம் சீராக ஓடிக் கொண்டிருக்கிறது, தூக்கம், பசி,செரிமானம் ஆகிய அத்தியாவசிய உடல் இயக்கங்கள் நடக்க செரோடோனின் அவசியமாகும்.

நன்மைகள் : செரோடோனின் குறிப்பாக வயிறு மற்றும் குடல் பகுதிகளில் காணப்படும். நாம் சாப்பிடுகிற உணவு செரிமானத்திற்கும் கழிவை வெளியேற்றவும் உதவிடும். பிறகு, நம் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவும் செரோடோனின் அவசியம். ஒரு பக்கம் செரோடனின் குறைந்தால் தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும். இதே செரோடோனின் அதிகரித்தால் உணவு ஒவ்வாமை, ஒமட்டல் ஆகியவை ஏற்படும். சிலருக்கு வயிற்றுப் போக்கினை கூட ஏற்படுத்திடும்.

பாலியல் உறவுமுறை : உங்களுடைய உடலில் இருக்கிற செரோடோனின் அளவிற்கும் உங்களுடைய ஆண்மைதன்மைக்கும் தொடர்பிருக்கிறது. அதே போல உடலில் ஏற்படுகிற காயங்களை சீக்கிரமாக ஆற்றவும், ரத்தத்தை உறையவைக்கவும் உதவிடும். உங்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு செரோடோனின் மிகவும் அவசியம்.

என்ன செய்யலாம் : உடலில் செரோடோனின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதனை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டுபிடிக்க முடியும். குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சூரிய ஒளியில் படும்படி உங்களின் நேரத்தை செலவழிக்க வேண்டும்.தினமும் சீரான உடற்பயிற்சி அவசியம், செரோடனின் அதிகமிருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டிய பயிற்சிகளை செய்யுங்கள். எப்போதும் கவலையுடன் இருப்பது, பதட்டமடைவது ஆகியவற்றை தவிர்த்திடுங்கள்.

மாத்திரை : உடலில் செரோடோனின் குறைவதற்கு நீங்கள் சாப்பிடக்கூடிய மருந்துகள் கூட காரணமாக இருக்கலாம். அளவுக்க அதிகமாக செரோடோனின் குறைந்து அதற்காக சப்ளிமெண்ட் கொடுக்கப்பட்டால் அதனுடன் பிற மாத்திரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஒரு வேலை அப்படி மாத்திரை சேர்த்து சாப்பிடும்படியான சூழல் இருந்தால் செரோடோனின் மாத்திரையுடன் அவற்றை சேர்த்து சாப்பிடலாமா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிடுங்கள்.

அறிகுறிகள் : அடிக்கடி உடல் நடுக்கம் ஏற்படும்,வயிற்றுப் போக்கு ஏற்படும், தலைவலி, குழப்பமான மனநிலை, கருவளையம் ஏற்படுவது, காரணமேயில்லாமல் புல்லரிப்பது, கோபம், செரிமானக் கோளாறு,தூக்கமின்மை, கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுவது, இது ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கும். இதே நிலைமை சற்று தீவிரமாக இருந்தால் தசை வலி, காய்ச்சல்,இதயத் துடிப்பு தாறுமாறாக துடிப்பது, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும்.

காரணங்கள் : இந்த செரோடோனின் நம் உடலில் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக உடலில் சர்க்கரை அளவு சீராக இல்லாமல் இருப்பது, சத்துக்குறைபாடு,ஹார்மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி பயன்படுத்துவது ஆகியவை முக்கிய காரணங்கள். இவை தவிர சுகாதாரமற்ற உணவுப்பழக்கம், தொடர்ந்து ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, தீவிர மன அழுத்தம், மதுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, சூரிய ஒளி சுத்தமாக படாமல் இருப்பது, தினமும் கேஃபைன் அதிகமாக சேர்ப்பது ஆகியவை ஓர் காரணியாக சொல்லப்படுகிறது.

உணவுகள் : கடல் உணவுகளான மீன், இறால் போன்றவை,கறி வகைகள் ஆட்டுக்கறி,பீஃப்,கோழிக்கறி,பன்றிக்கறி ஆகியவை, முட்டையின் வெள்ளைக்கரு,மஞ்சள் கருவை தவிர்த்திடுங்கள். அதில் அதிகபட்சமாக கொழுப்பு மட்டுமே இருக்கிறது. பால்,சீஸ்,தயிர் போன்றவை, கேரட், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், ஆகியவற்றில் நிறைய செரோடோனின் இருக்கிறது. இவை தவிர பாதாம்,முந்திரி, பிஸ்தா,வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், தானியங்கள், ப்ளாக் டீ ஆகியவற்றை நீங்கள் அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

கவனம் : செரோடோனின் அவசியம் தான் அதற்காக அவற்றை நீங்கள் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளக்கூடாது, அதுவும் உங்களுக்கு தீங்கையே ஏற்படுத்தும். அப்படி அதிகபட்சமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு எலும்புகள் தளர்வடையும், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் குறையத் துவங்கும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது மட்டுமே இதிலிருந்து மீள்வதற்கான சரியான வழியாக இருக்கும்.