Home இரகசியகேள்வி-பதில் ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?

166

நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?

உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்ணுறுப் சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொள்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

எந்த முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க ஏதுவானது என்று பல முறை கேள்விகள் வந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உடலுறவு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உடல் உறவு கொண்டாலே போதுமானது.

பின்குறிப்பு:

கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம். கருத்தடை சாதனங்களை நீங்கள் உபயோகப் படுத்தினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி எவ்வளவு நாள் கழித்து கருப்பிடிக்கலாம் என்று கலந்து ஆலோசியுங்கள். அதே போல மேலே சொன்ன சாதனங்களை நிறுத்திய பிறகு, உங்களுக்கு சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, பின் கருத்தரிக்க முயலுங்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?

இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல.
இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும். ஆண்கள் பற்றிய புள்ளி விவரம் இதோ:

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

உங்களுக்கு குழந்தை உண்டாகவில்லையா ?
ஆண் சார்ந்த விஷயங்கள்

ஆண் தன் விந்தணு அளவிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் . விந்தணு ஓடும் தன்மை நன்றாக இருக்க வேண்டும் .நிறம் முத்து போல் பளபளப்பாக இருக்க வேண்டும்.துர்நாற்றம் இருக்க கூடாது .இதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .

ஆண் தன் உறுப்பின் மேல் தோல் எனப்படும் foreskin -உறுப்பின் முன் மொட்டுப்பகுதியின் மூடி — திறந்து முடும் படி இருகிறதா என்று பார்க்க வேண்டும் .

50 வயது கடந்த சில ஆண்கள் கூட இந்த முன் தோல் திறக்காத நிலையில் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் ஏதோ வேறு காரணமாக டெஸ்ட்க்கு வருவதை பார்த்திருக்கிறோம் .

இந்த மேல் தோல் ஆண் உறுப்பு எளிதாக முழுதும் பெண் உறுப்புக்குள் போவதை தடுக்கும் .இதனால் விந்து கர்ப்பப் பைக்கு அருகில் செல்லாது .இதனால் இன்பம் இருவருக்கும் குறைவதோடு பெண்ணுக்கு வலியை உண்டாக்கும்.

இந்த முன் தோல் பற்றி அறிய ஆண் டாக்டரை அணுகுங்கள் .

உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்???

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கத்தினாலும் இன்றைய இளைஞர்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக கொலரோடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த குறைபாட்டை நீக்குவதற்கு செக்ஸ் ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்து மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்ரீதியான செயல்பாடுகள் மூலம் இந்த ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எப்.எஸ்.எச் எனப்படும் (follicle-stimulating hormone) எல்.ஹெச்(luteinising hormone) டெஸ்ட்டோடிரோன், கார்டிசால் போன்ற ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் உடலில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.

31 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதோடு எப்.எஸ்.எச், எல்.எச், டி ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்கிறது. இதன் காரணமாக விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கிறது.என்று ஆய்வாளர்கள் கூறினர். இந்த ஆய்வு முடிவு ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது..