Home சூடான செய்திகள் Tamil x care ஆண்கள் இந்த விஷயங்களைச் செய்தால் பெண்கள் எரிச்சலாவார்கள்…

Tamil x care ஆண்கள் இந்த விஷயங்களைச் செய்தால் பெண்கள் எரிச்சலாவார்கள்…

44

பொதுவாக பெண்கள் செய்யும் விஷயங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஆண்கள் ரசிக்கிறார்களோ அதே அளவு பல விஷயங்களில் எரிச்சலும் அடைகிறார்கள். ஆனால் ஆண்கள் என்னென்ன விஷயங்கள் செய்தால் பெண்கள் எரிச்சலாவார்கள் என்று தெரியுமா?

அடிக்கடி செல்ஃபி எடுப்பது மற்றும் கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

சில ஆண்கள் தங்களை மனதில் மன்மதன் என்று நினைத்துக் கொண்டு நிறைய பெண்களுடன் மிக நெருக்கமாக பழகுவார்கள். அப்படி சீன் போடும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்காது.

ஆண்களில் சிலர் கூச்சப்படாமல் பொது இடங்கள், பெண்கள் செல்லும் சாலைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களில் அளவுக்கு மீறி செல்லும் ஆண்களைப் பெண்கள் விரும்புவதில்லை.

வீட்டில் சோபா, கட்டில் போன்ற கண்ட கண்ட இடங்களில் உள்ளாடைகளை போடுவது அல்லது அனைவரது கண்களிலும் படுமாறு உள்ளாடைகளை காயப்போடுவது போன்ற விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்காது.

கார், பணம் என்னிடம் உள்ளது என்று வெட்டி பந்தா செய்யும் ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது.

வண்டி ஓட்டும் போது சத்தமாக முறுக்குவது, பைக்கில் சில சாகசங்கள் செய்து மற்றவர்களின் மன அமைதியை கெடுப்பது போல வண்டி ஒட்டுவது பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

முக்கியமான தேவை என்று வலியுறுத்தி சில விஷயங்களை பெண்கள் ஆண்களிடம் கூறும் போது, அதை அலட்சியம் செய்யும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.

தன் லவ்வருடன் செல்லும் போது, மற்றொரு பெண்ணைப் பார்த்து விமர்சனம் செய்வது, பெண்களுக்கு பொறாமையையும் எரிச்சலையும் சந்தேகத்தையும் உண்டாக்கும்.

ஆண்கள் எப்போதும் தனது நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்காது. தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சில ஆண்கள் பொழுதுபோக்காக பெண்களை மட்டம் தட்டி, கேவளமாக கலாய்ப்பது பெண்களுக்கு பிடிக்காது.

ஆண்கள் பல நாட்கள் முடி வெட்டாமல் பரட்டைத்தலை போன்று சுத்தமில்லாமல் இருப்பது, எந்த பெண்களுக்கும் பிடிக்காது.