Home காமசூத்ரா தலையணை மந்திரம் என்பது!

தலையணை மந்திரம் என்பது!

281

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவை கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை.

*இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளை பொறுத்தது. மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னை சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ?

*இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலை பட்சமாக போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது…அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம்னு என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்…!?

முந்தைய தலைமுறையில்

*முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்யோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்…! அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்த பெண்களுக்கு சிலவற்றை அறிவுறுத்தினார்கள்…

*ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விட கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்…! வார்த்தைகள் தான் தலையணை மந்திரங்கள் இல்லை. இவை கால போக்கில் ஆணை வசியபடுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுபெற்று விட்டன…!!

*அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையே சுத்தி வர்ற மாதிரி பக்குவமா நடந்துக்க என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. “ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவு கொள்ளவே விரும்புவார்கள்.

*இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்…அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனை பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க” என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

*ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தை திசை திருப்பகூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலை தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின் பிடியில் சிக்கிகொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிக குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளி தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றைய காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே மிக தாராளமாக கிடைக்ககூடிய காலம் இது. எனவே கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

*அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன் என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்…!!

இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூர தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை…

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தை திருப்திபடுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காக பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !