Home ஆண்கள் ஆண்களே உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் ஆண்மைகுறைபாடு உள்ளது

ஆண்களே உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் ஆண்மைகுறைபாடு உள்ளது

974

ஆண்மை பெருக்க:இன்றைய காலத்தில் பல்வேறு உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கத்தின் காரணமாக பலருக்கு ஆண்மைகுறைபாடு ஏற்படுகின்றது. முக்கியான காரணங்களை அமைவது மது அருந்துதல், புகை பிடித்தல், உடல் உழைப்பு இன்றி இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகின்றது.

இப்பொழுது நாம் ஆண்மைகுறைபாடின் அறிகுறிகளை காண்போம் நண்பர்களே.

1. விறைப்பு குறைபாடு

ஆண்களுக்கு டெஸ்டெரோஸ்டெரோன் என்ற ஹார்மோன் குறைவின் வெளிப்பாடே ஆண்மை குறைவு எனப்படும். இதன் முதல் கட்ட அறிகுறியே விறைப்பு குறைபாடு ஆகும். எனவே உங்களுக்கு விறைப்பு குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளவும் நண்பர்களே.

2. தசைகளின் வளர்ச்சி குறைவு

சில சமையம் டெஸ்டெரோஸ்டெரோன் என்ற ஹார்மோன் குறைபாட்டால் உங்களின் தசை வளர்ச்சி குறைந்து காணப்படும்.

எனவே உங்கள் தசை வளர்ச்சியில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும் நண்பர்களே.

3. தூக்கமிண்மை

ஆண்மை குறைபாடு இருந்தால் இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கத்தை பாதிக்கக்கூடிய வியாதி வரக்கூடும்.

இந்த வியாதி வந்தால் இரவில் சரியாக தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

4. அசதி

ஆண்மை குறைபாடு இருந்தால் எப்பொழுதுமே அசதியாக தோன்றும். சரியாக தூங்க இயலாது. எனவே உங்களுக்கு அசதி மற்றும் செய்யும் வேளைகளில் நாட்டம் இல்லாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

5. உடல் உறவில் நாட்டம் இல்லாமை

ஆண்மை குறைபாடு இருந்தால் ஒரு ஆணுக்கு உடலுறவில் நாட்டமின்மை மற்றும் குறைந்த நாட்டமே இருக்கும்.

எனவே இப்படியேனும் அறிகுறி தென்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகவும் நண்பர்களே.

6. ஆஸ்டியோபோரோசிஸ்

ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லக்கூடிய எலும்புகளில் கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எலும்புகளில் வலி, மற்றும் எளிதில் எலும்பு முறிவு ஆகியவை ஏற்படும்.