Home பாலியல் அந்தரங்க உறவும்… இன்பமான வாழ்க்கையும்….

அந்தரங்க உறவும்… இன்பமான வாழ்க்கையும்….

143

அந்தரங்க உறவு:மன அழுத்தம் குறையும்: தினமும் செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறையும். உடலுறவின் போது உடலில் சுரக்கும் டோபமைன் என்ற பொருள் மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே தவறான உறவுகளில் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

நல்ல உடற்பயிற்சி: வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்க ள் அளவுக்கு உடலுறவு கொள்வது ஓராண்டில் 75 மைல் தூரம் ஜாக்கிங் செய்வதற்கு சமமாம்.

இரத்த அழுத்தம் குறையும்: செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

சளிபிடிக்காது: செக்ஸ் உறவு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமு ம் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். இம்யுனோகுளோபுளின் எனப்படும் வேதிப்பொருள் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் அதிகளவில் சுரக்குமாம். இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும். இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்

இளமை: அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் இளமையாக இருக்கலாம்

இளமை: அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் இளமையாக இருக்கலாம்

ஆரோக்கியமான இதயம்: அடிக் கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக இருக்குமாம்.

ஆரோக்கியமான உறவு: கணவன், மனைவி இருவரும் அடிக்கடி உறவு கொளவதால் அவர்களுக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். காதலும், நெருக்கமும் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும்.

புதிய விந்தணுவும், குழந்தை பிறப்பும்: தினமும் உடலுறவு கொள்வதால் பழைய விந்தணுக்குள் வெளியேறி, தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும். இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்று நோய்: மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்று நோய் தாக்கும் அபாயம் இல்லையாம்