Home இரகசியகேள்வி-பதில் புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள்

புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள்

48


கேள்வி:

ஹலோ டாக்டர்,

ஒரு நாலு வாரமாக, என் காதலனுக்கு அவன் உறுப்பில் ஒரு புண் இருக்குது. அவன் தினமும் ஒரு பாக்கெட்டு க்கு மேல் சிகிரட் பிடிக்கிறான், சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறான். இந்தப் புண்ணுக்கும் சிகரெட்டுக்கும் சம்மந்தம் இருக்குதா? பயப்படும்படியாக எது இருக்குமோ?
-சசிரேகா, பெங்களூரு

பதில்:ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு
3-4.5 அதிகமாக வர வாய்ப்புள்ளது.அதிகமாக சிகரெட் பிடிக்கப் பிடிக்க, இந்தப் புற்று நோய் வரும் விகிதமும் அதிகமாகும். இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகி, செக்கப் செய்ய வேண்டும். ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் ரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க அருவருப்பாகவும், நாளாக நாளாக காளி பிளவரைப் (Cauli Flower) போலத் தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.

கேள்வி:டாக்டர், நான் கனடாவில் செட்டிலாகி விட்டேன். எனக்கு சென்னையில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணத்திற்கு பார்த்திருக்கிறார்கள். நான் அவளைப் போய் சென்னையில் பார்த்தபோது, வெளியே ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிப் போனேன். அவள் சாப்பிட்டு முடித்து விட்டு, கைப்பையை திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாளே பார்க்கணும்! நான் அதிர்ந்து போய் உள்ளேன். தமிழ்ப் பெண்கள் இப்படி ஆகிவிட்டார்களா? சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு என்னென்னே பிரச்சனைகள் ஏற்படும்?

பதில்:சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause ) சீக்கிரமே துவங்கி விடும்.

5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேள்வி:சிகரெட்டில் என்ன இருக்கிறது? அதனால் என்ன பிரச்சனை வரும்?

பதில்:புகையிலையில் அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.

புகைப்பிடித்த உடனே நடக்கும் மாற்றங்கள்:
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் விடயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.

புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள்:

ஆண், பெண் காம ஹார்மோன்களான டேச்டாச்டிரோன் (Testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து காம உணர்விலும், விறைப்பும் குறைந்து விடும்.

ரத்தக் குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாய்களில் மாசுப் பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால் இதய நோய் வரும்.

புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் கட்டிகளையும், புற்று நோயையும் உருவாக்கும்.

கேள்வி: என் கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால் நானும் இதனை சுவாசிக்கிறேன். இதனால் எனக்கு ஏதும் பிரச்சனை வருமா?

பதில்: மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Second Hand Smoking என்று சொல்கிறார்கள். இதனால் இதய நோய், நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நீங்கள் புகையை தொடர்ந்து சுவாசித்தால், உங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு, விந்து அளவு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேள்வி: டாக்டர், நான் ஆறு வருடங்களாக தினமும் ஒன்றரை பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னுடைய (சிகரெட் பிடிக்காத) நண்பர்கள் புகைப்பிடித்தால் விந்து குறைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?

பதில்: ஆண்களின் விந்துக்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு இல்லை என்று வெகு காலமாக நம்பப் பட்டு வந்தது. 1994 வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இதனைப் பொய்யாக்கின. உலகத்தில் இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி இது. ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?
புகைப் பிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்து அளவு (Sperm count) சிகரெட் பிடிக்காதவர்களை விட குறைவாக உள்ளது என்பதுதான்.

கேள்வி: வணக்கம் டாக்டர், எனக்கு முப்பத்தி நாலு வயதாகிறது. நான் பதினாலு வயசிலிருந்து சிகரெட் பிடிக்கிறேன். என் மனைவியும் நானும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் கரு உருவாக மாட்டேன்கிறது. என் மனைவியின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்து அளவும் சரியாகவே உள்ளது. என் மனைவி நான் புகைப்பிடிப்பதால் தான் கருப்பிடிக்க மாட்டேன்கிறது என்கிறாள். இது உண்மையா?

பதில்: உங்கள் மனைவி சொல்வதில் ஒரு மறைந்த உண்மை இருக்கிறது, அதாவது உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து நகரும் வேகம் (motility of Sperms) என்பது கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம் வலுவிழக்கும், இதனாலும் உங்கள் மனைவி கருப்பிடிக்காமல் போகலாம்.