Home ஆண்கள் உங்கள் ஆண்குறி சிறிதாக இருக்கிறதா? நிங்கள் அதிஷ்டசாலிகள்

உங்கள் ஆண்குறி சிறிதாக இருக்கிறதா? நிங்கள் அதிஷ்டசாலிகள்

637

ஆண்களின் தகவல்:ஆண்குறி என்பது ஆண்களின் கௌரவமாக தான் காணப்படுகிறது. ஓர் ஆணிடம் எது பெரிதாக இருக்கிறதோ இல்லையோ, ஆண்குறி பெரிதாக இருக்க வேண்டும். இல்லையேல் அவன் ஆண்மகனே இல்லை, அவன் ஆண்மை அற்றவன் என்பது போன்ற பிம்பத்தை, கருத்தை நாம் பல காலமாக கண்டு வருகிறோம்.

பல அறிவியல் ஆய்வுகளில் ஆண்குறி அளவு சிறிதாக இருக்கும் ஆண்கள் மத்தியில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆறு அங்குலத்திற்கு சிறிதாக இருந்தாலே கவலை கொள்ளும் அணைகள் இங்கே இருக்கிறார்கள். ஆறு அங்குலத்திற்கு மேலே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

உண்மையில், குறைந்தபட்சம் நான்கரையில் அங்குலம் ஆண்குறி அளவு இருந்தாலே உடலுறவில் ஈடுபட போதுமானது. நான்கு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் தக்க மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை அல்லது சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கலாம். மூன்றரை அங்குலம் அதற்கும் குறைவான ஆண்குறி அளவை தான் மைக்ரோ பெனிஸ் என்று கூறுகிறார்கள். நான்கு – ஐந்து அங்குல ஆண்குறியே சிறியது என்று கருதி கவலைப்படும் ஆண்கள்… அதன் மூலம் கலவி உறவில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்…

வலி! கலவியில் ஈடுபட ஆண்களுக்கு சராசரியாக நான்கரையிலிருந்து ஐந்து அங்குலம் வரையிலான ஆண்குறி தேவைப்படுகிறது. ஆனால், ஆண்கள் எதிர்பார்ப்பதோ ஆறு மற்றும் அதற்கு மேலான அளவிலான ஆண்குறி. உண்மையில் பெரிய ஆண்குறியானது பெண்களை கலவி உறவில் ஈடுபடும் போது வலி உணர செய்யலாம். ஆனால், சராசரி / சிறிய ஆண்குறி அளவு கொண்டிருக்கும் ஆண்களால் பெண்கள் ஒருபோதும் கலவியில் ஈடுபடும் போது வலி உணர்வதில்லை.

பெண் உணர்ச்சி! CAT அல்லது Colital Alignment Technique எனப்படும் கலவியல் நிலையில் பெண்கள் அதிகம் உச்சகட்ட இன்பம் உணர்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் எளிதாக ஈடுபட முடியும். மேலும், இந்நிலையில் ஈடுபடும் போது சிறிய ஆண்குறி கொண்ட ஆண்கள் ஈடுபடும் போது கிளிடோரிஸ் வகையிலான உணர்ச்சி பெண்களுக்கு அதிகம் கிடைக்கிறது என்று பெண்ணியல் மற்றும் கலவியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிறவழி! கருத்தரிக்க விரும்பாதவர்களும், பிறவழி கலவுதலில் ஈடுபாடு கொண்டிருப்பவர்களும் குதவழி கலவியில் ஈடுபடுவதுண்டு. பெரிய ஆண்குறி கொண்டிருக்கும் ஆண்கள் இப்படியான பிறவழி கலவியில் ஈடுபடும் போது, அது பெண்களுக்கு வலி மிகுந்ததாக அமையும். ஆனால், சிறிய ஆண்குறி கொண்டிருக்கும் ஆண்கள் இப்படியான உறவில் ஈடுபடும் போது அது வலி மிகுந்த உணர்வை பெண்களுக்கு அளிக்காது.

ஃபோர் ப்ளே! உளவியல் அல்லது மனநல மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்னவெனில்… பெரிய ஆண்குறி இருக்கும் ஆண்களிடம் ஆதிக்கம் செலுத்துதல்… தான் ஆண்மை மிகுந்தவன் என்ற கர்வம் இருக்கும். இதை அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படுத்துவது உண்டு. இவர்கள் பெரும்பாலும் ஆண்குறி சார்ந்து தான் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், சிறிய ஆண்குறி கொண்ட ஆண்கள் பிறப்புறுப்பு ஊடுருவல் வகையிலான கலவுதலை மட்டுமின்றி, ஃபோர் ப்ளே எனப்படும் கலவி விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவார்கள். மேலும், இவர்கள் ஒப்புடுகையில் பெரிய ஆண்குறி இருக்கும் ஆண்களை காட்டிலும் கலவியில் தங்கள் துணையுடன் இணக்கமாக செயல்படுகிறார்கள் என்று அறியப்படுகிறது.

பெண்கள் விருப்பம்! நாம் மேலே கூறியது போலவே பிறப்புறுப்பு ஊடுருவல் சார்ந்த கலவியில் பெண்களுக்கு வலி உணர்வு ஏற்படுவது இயல்பு. அதிலும் இணக்கமாக இன்றி, ஆதிக்கம் செலுத்தும் ஆண்களால் வலியின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், அறிவியல் ரீதியாக காண்கையில், பிறப்புறுப்பு ரீதியான ஊடுருவலை காட்டிலும், ஃபோர் ப்ளே வகையிலான கலவி விளையாட்டுகள் மூலமாக தான் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அதிகம் அடைகிறார்கள்.

இணக்கம் அவசியம்! கலவி என்பதும் ஒரு கலை தான். அதில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை காட்டிலும், இணக்கமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்றும் பல பெண்கள் கலவியில் வலியை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களாக தான் கருதுகிறார்கள். மேலும், பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாக கேட்க வெட்கப்படுவதுண்டு. ஆகையால், கலவி உறவில் அவர்கள் எதிர்பார்ப்பவை பெரும்பாலும் கிடைக்காமல் போய்விடுகிறது. இதை ஆண்கள் தான் அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

Previous articleபெண்கள் யாருக்கும் சொல்லாமல் செய்யும் ரகசியங்கள்
Next articleபுகை பிடிப்பதை விட உடலுறவு கொள்ளவது நன்மையே