Home சூடான செய்திகள் பெண்கள் யாருக்கும் சொல்லாமல் செய்யும் ரகசியங்கள்

பெண்கள் யாருக்கும் சொல்லாமல் செய்யும் ரகசியங்கள்

228

பெண்கள் பல்சுவை தகவல்:இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் ரகசியங்கள் இருக்கிறது. சில ரகசியங்கள் பெரும் தாக்கங்கள் கொண்டவையாக இருக்கலாம், சில ரகசியங்கள் நகைச்சுவையாக இருக்கலாம். நமக்கு நகைச்சுவையாக படும் சில ரகசியங்கள் சிலருக்கு மனதை புண்படுத்தலாம். ஆனால், ரகசியங்கள் என்பது நிச்சயம் இருக்கும். ரகசியம் இல்லாத இடமும் இல்லை, நபரும் இல்லை.

சிலரை பார்க்கும் போது… சில விஷயங்களை… இதெல்லாமா அவங்க பண்ணுவாங்க… ச்சே.. ச்சே… வாய்ப்பே இல்ல ராஜா… என்று கருத வைக்கும். ஆனால், கடைசியில் பார்த்தால் அவர்கள் தான் அந்த விஷயங்களை செய்திருப்பார்கள். அப்படியாக, ‘பெண்கள் இதெல்லாமா செய்வார்கள்..’ என்று யோசிக்க வைக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. சிலவன நாம் யோசித்திருக்க கூட மாட்டோம். ஆனால், அதை எல்லாம் தாங்கள் சகஜமாக செய்வோம். ஆனால், வெளிகாட்டிக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள் பெண்கள். அப்படி என்ன அவை… இதோ….

#1 சிரிப்பது போல, அழுவது போல, பேசும் போது ஏதேனும் வினோதமான ரியாக்ஷன் தருவதை போல எல்லாம் முன் கூட்டியே அறையில் தனியாக இருக்கும் போது கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்க்கும் பழக்கும் பெண்களிடம் இருக்கும்.

#2 மார்பகங்களை பிடித்து பார்த்துக் கொள்வதை யாரும் இல்லாத போது செய்வோம். ஓடும் போது, படிகளில் இறங்கும் போது, சில சமயம் வெறுமென வேடிக்கைக்காக, ரெஸ்ட்ரூம் சென்று திரும்பும் போது, கண்ணாடியில் எடுப்பாக தான் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள. சில சமயம் வலி ஏற்படுவதால் கூட இப்படியாக செய்யும் பழக்கம் உண்டு.

#3 அம்மா எப்போதெல்லாம், அடக்க ஒடக்கமாக உட்கார சொல்கிறாரோ அப்போது தான் கால்கள் எங்கள் பேச்சை கேட்காமல் அகல செல்லும், கால் மேல் கால்போட்டு அமர்வோம், நாற்காலி மீது தரையில் உட்கார்வது போல அமர்வது போன்ற காரியங்கள் எல்லாம் அப்போது தான் வெளிப்படும்.

#4 முடியை ஷார்ட் கட் செய்துக் கொள்ள பிடிக்கும். முதல் இரண்டு நாட்கள், அந்த ஷார்ட் கட் முடியை பார்த்து, பார்த்து பெருமிதம் அடைவோம், அடடே என்ன அழகு என்று பாடல் எல்லாம் பேக்கிரவுண்டில் ஒலிக்கும். ஆனால், மூன்றாவது நாளில் இருந்து எப்படா திரும்ப அந்த நீளமான முடி வளரும் என்ற எண்ணம், ஏக்கம் அதிகரிக்க துவங்கிவிடும்.

#5 சிறுநீர் கழிக்கும் போது வெளிப்படும் சத்தம் சில சமயம் தர்மசங்கடமாக உணர செய்யும். அதனால், ரெஸ்ட்ரூம் பயன்படுத்தும் போது, நீரை தரையில் ஓட செய்வதும் உண்டு. இந்த சப்தத்தால், நாங்கள் சிறுநீர் கழிக்கும் சத்தம் யாருக்கும் தெரியாது. இதெல்லாம் ஒரு டெக்னிக்.

#6 பெஞ்சில் அமரும் போது, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது மூலையில் அமர பெண்களுக்கு பிடிக்காது. நடுவே அமர்ந்து பேசுவதில் தான் எங்களுக்கு அலாதி பிரியம். அப்போது தான் அனைவர் பேசுவதையும் கேட்க முடியும், நாமும் அனைவரிடமும் எளிதாக உரையாட முடியும்.

#7 நாங்கள் எத்தனை அழகாக இருக்கிறோம், எங்கள் உடை, உபகரணங்கள் எத்தனை அழகாக இருக்கிறது, காஸ்ட்லியானது என்பது எல்லாம் பேச்சே இல்லை. எங்களுக்கு எப்போதுமே அட அவ எப்படி அவ்வளோ அழகா இருக்கா.. அவ எவ்வளோ செலவு பண்ணி வாங்கி இருப்பா.. நாம தான் ஏமார்ந்துட்டோமோங்கிறது போல ஒரு பொறாமை குணம் எப்போதுமே இருக்கும். (வெகு சில பெண்களை தவிர)

#8 எங்கள் காதலன் / துணை எப்போதாவது ஏதேனும் நடிகை அல்லது மாடல் அழகியை காண்பித்து அவ அழகா இருக்கால, ஹாட்டா இருக்கால என்று கூற, கூற எங்கள் வயிற்றில் ஹாட் அதிகமாக துவங்கிவிடும். வாய், காது மூக்கில் எல்லாம் புகை வரும். அவர்களை எப்படி அந்த பெண்களை ரசிப்பதில் இருந்து தடுக்கலாம் என்பதை முதலில் சண்டையிட்ட பிறகு தான் யோசிப்போம்.

#9 பெண்கள் பொதுவாகவே எங்கேனும் கிளம்ப வேண்டும் என்றால் நேர தாமதம் செய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் மேக்கப், மற்றும் உடை அணிய எடுத்துக்கொள்ளும் நேரம். ஆம், சரி தான்! கண்ணுக்கு ஐ-லைனர் இட்டுக்கொள்ள மட்டுமே நிறைய நேரம் பிடிக்கும் என்பது தான் உண்மை. ஆனால், அதை ஆண்கள் கவனிக்கவே மாட்டார்கள்.

#10 பெரும்பாலும் பெண்கள் பெரிய, பெரிய கைப்பை பயன்படுத்துவார்கள். இதுதான் இப்போதைய டிரெண்ட் என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிறைய சமயங்களில் அந்த பைகள் 80% காலியாக தான் இருக்கும். சில நேரங்களில் ஒரு சின்ன பர்சை அந்த பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு வருவோம்.

#11 ஆண்களை போலவே நாங்களும் சைட் அடிப்போம். ஆனால், அதை காண்பித்துக் கொள்ள மாட்டோம். நீ யாரு, உன் பேரு என்ன என்பது போல நடிப்போம். ஆனால், அவனது சகோதரன் யாரை திருமணம் செய்தான், அவன் உறவினர்களில் எத்தனை ஹேண்ட்சம் ஆண்கள் இருக்கிறார்கள் என்பது வரை இன்பர்மேஷன் சேகரித்து வைத்திருப்போம்.

Previous articleபெண்களின் உதடு அழகை அதிகரிக்க செய்யவேண்டியது
Next articleஉங்கள் ஆண்குறி சிறிதாக இருக்கிறதா? நிங்கள் அதிஷ்டசாலிகள்