Home குழந்தை நலம் குழந்தை அம்மாவுடன் மட்டுமே தூங்க வேண்டிய அவசியமென்ன?

குழந்தை அம்மாவுடன் மட்டுமே தூங்க வேண்டிய அவசியமென்ன?

32

நீங்கள் தூங்கும் நேரங்களில், தங்கள் குழந்தைகளை அருகிலேயே படுக்க வைத்துக் கொள்வது உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல ஆய்வுகளும் இதையே தாய்மார்களுக்கு அறிவுறுத்துகின்றன.

குழந்தைகள் பெற்றோர்களுடன் செர்ந்து தூங்கும்போது, அதிக அளவிலான சுதந்திரத்துடன் இருப்பது போல் உணரும். அப்படி வளரும் குழந்தைகள் குடும்பத்தில் நல்ல ஈடுபாட்டுடன் இணைந்திருக்கும்

குழந்தைகள் பெற்றொாகளுடன் உறங்கும்போது, அது அவர்களுக்கு பெற்றோர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் . அதிக அளவிலான சுதந்திரத்தை உணர்வார்கள் என்கினற்னர் ஆற்வாளர்கள்.

தனியாகத் தூங்கும் குழந்தைகளைவிட, பெற்றோருடன் இணைந்து தூங்கும் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்தே இருப்பார்கள் என்பது நம்முடைய பொதுவான நம்பிக்கை. ஆனால், பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் தான் அதிக சுதந்திரத்துடன் தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பெற்றோர்களுடன் இணைந்திருக்கும் குழந்தைகள் எளிமையாக பெற்றோர்களுடைய பிரச்னைகளைப் புரிந்து கொண்டு செய்லபடுவார்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களுடன் அருகிலேயே தூங்கும்போது நீங்கள், அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க முடியும். அது அவர்களுடைய சுய சிந்தனைகளைத் தூண்டுவதாக அமையும்.

அடுத்தவர்களைப் புரிந்து கொண்டு செயல்படக் கற்றுக் கொள்வார்கள்.