Home பெண்கள் பெண்குறி உடலுறவின்போது ஏன் வலி உண்டாகிறதென்று தெரியுமா?

உடலுறவின்போது ஏன் வலி உண்டாகிறதென்று தெரியுமா?

35

துணையுடன் படுக்கையில் குதூகலமாக உடலுறவில் ஈடுபடும் போது, பலர் கடுமையான வலியை உணர்வார்கள். அது ஆண்களுக்காட்டும் அல்லது பெண்களுக்காகட்டும், இருவரின் பிறப்புக்களிலும் வலி ஏற்படும். இப்படி வலியை ஒருவர் அனுபவித்தால், வேதனையில் உடலுறவில் ஈடுபடும் ஆசையே போய்விடும்.

எனவே உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏன் ஏற்படுகிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான காரணம் தெரிந்துவிட்டால், மீண்டும் உறவில் ஈடுபடும் போது அந்தரங்க உறுப்பில் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

பெண்களுக்கு உடலுறவின் போது வலியை உணர்வதற்கு, போதிய அளவில் பெண்களின் உணர்ச்சி தூண்டப்படாமல், பிறப்புறுப்பில் ஈரப்பசை இல்லாமல் இருப்பது தான் காரணம். ஆகவே உடலுறவின் போது வலி ஏற்படாமல் இருக்க, எடுத்த எடுப்பிலேயே பாய்ந்துவிடாமல் சற்று முன் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

பலமுறை உடல் வறட்சி அல்லது தொற்றுக்களினால், பெண்களின் பிறப்புறுப்பு வறட்சியடையும். இந்த நிலையின் போது உடலுறவில் ஈடுபட்டால், தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.

ஒருவேளை உங்கள் துணைக்கு பாலியல் நோய்களான மேக வெட்டை, ஈரல் அழற்சி, இனப்பெருக்க உறுப்பு மருக்கள் போன்றவை இருப்பின், அதனால் இருவருமே உடலுறவின் போது வலியை அனுபவிக்க நேரிடும்.

பெண்களுக்கு இடமகல் கருப்பை என்பது தீவிரமான நிலையாகும். இந்த நிலையில் கருப்பையின் வெளியே ஒரு திசு வளர்ச்சி அடையும். இந்த நிலையுடன் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டால், பயங்கரமான வலியை சந்திக்கக்கூடும்.

ஆய்வுகள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கும், உடலுறவின் போது வலி ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக கூறுகின்றன. எரிச்சல் கொண்ட குடல் நோயில் வயிற்று பிடிப்புக்கள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை அடங்கும்.

முக்கியமாக உடலுறவில் ஈடுபடும் போது மன அழுத்ததுடன் இருந்தால், அதனால் தசைகள் இறுக்கமடைந்து, உடலுறவின் போது கடுமையான வலியை உணரக்கூடும். எனவே ரிலாக்ஸாக இருங்கள்