Home பெண்கள் தாய்மை நலம் இரண்டாவது குழந்தை பெற கால இடைவெளி எவ்வளவு ?

இரண்டாவது குழந்தை பெற கால இடைவெளி எவ்வளவு ?

102

பெண்கள் நலம்:முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க தயாராக வேண்டியது அவசியம்.

முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு கால அளவு இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும்.

2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது.

3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.

6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக – உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

Previous articleஆணுறை பற்றி சில உண்மை தகவல்கள் காணுங்கள்
Next articleஆண்கள் ஆண்மை குறைவில் இருந்து உங்களை காத்துக்கொள்வது?