Home ஆண்கள் ஆண்கள் ஆண்மை குறைவில் இருந்து உங்களை காத்துக்கொள்வது?

ஆண்கள் ஆண்மை குறைவில் இருந்து உங்களை காத்துக்கொள்வது?

480

ஆண்மை தகவல்;தற்போதைய வாழ்க்கைமுறையில் குழந்தையின்மை பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பிரச்னைக்குள்ளாகிறார்கள். ஆண்களுக்கு இயற்கையாக விந்தணு குறைபாடு ஏற்படுவதை விட அவர்களின் பழக்கவழக்கங்களால் அதிகமாக ஆண்மை குறைவு ஏற்படுகிறது.

முக்கிய கரணங்கள்:
பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் போது ஒரு கரிம செயற்கை கலவை சேர்க்கப்படுகிறது. இந்த கலவை ஆண்களின் விந்தணுக்களை குறைக்கிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

செல்போன்களால் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் பொதுவாக அவர்களது மொபைல்களை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதே அதிகம். ஆண்கள் தங்கள் பின்புறம் செல்ல்போனை வைக்கும் போது அதில் இருந்து வெளிவரும் வினைகள், கதிரியக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைக்கின்றது.

வெப்பம் அதிகமான இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படலாம். 4 டிகிரி குறைந்த வெப்பநிலையில் இருக்கும் போது சரியான அளவில் விந்தணு உற்பத்தியாகும். அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படலாம். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கும்போது அது இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்கள் எண்ணிக்கையையும் குறைக்கும். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படலாம்.

அதிக அளவில் மன அழுத்தம் உள்ள ஆண்கள் மீது ஆண்மைக்குறைவு ஏற்படும். எனவே மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்து வாழ வேண்டும்.

நீண்டநேரம் ஒரே இடத்தில அமர்வதாலும், தொடர்ச்சியாக வாகனங்கள் ஓட்டுவதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. நல்ல உடற்பயிற்சியும், இயற்கையான உணவுகளும், பழங்கள் மற்றும் கீரை வகைகள் சாப்பிட்டாலே போதும் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும்.

Previous articleஇரண்டாவது குழந்தை பெற கால இடைவெளி எவ்வளவு ?
Next articleவிந்து வெளியேறிய பின்..! உடற் சோர்வு அடைவது ஏன் தெரியுமா..?!