Home சூடான செய்திகள் சமூக வலைத்தளங்கள் இணையதளங்களால் முறிவடையும் உறவுகள்

சமூக வலைத்தளங்கள் இணையதளங்களால் முறிவடையும் உறவுகள்

33

சூடான செய்திகள்:தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் தகவல்கள் அனைத்தும் போன், இமெயில், வாட்ஸ் அப், பேஸ்புக் தான். இவற்றினால் கடிதம் எழுதும் முறையே வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால் இணையமும், சமூக வலைதளங்களும் தற்போது உறவுகளுக்கு இடையே சிக்கலை தான் ஏற்படுகின்றன. அவை எவ்வாறு உறவுகளை சிதைக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்!

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
கடிதம் எழுதும் போது அந்த வார்த்தைகளில் இருக்கும் உணர்வு, தற்போது எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசேஜ்களில் இருப்பதில்லை. அதனாலே பெரும் இடைவெளி ஏற்படுகின்றது.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
சண்டை போடும் போது அனுப்பும் வார்த்தைகள் சேமித்து வைக்கப்பட்டு மீண்டும் நினைவுப்படுத்தப்படுகின்றன. இதனாலே இன்னும் பிரச்னை பெரிதாகிறது.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கே இருக்கும் ஒருவருடன் பேஸ்புக்கில் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. இதுவே உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகின்றன.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் செய்திகள் சரியாக புரிந்து கொள்ளப்படுவதுமில்லை. தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு பெரும்பாலும் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
பேஸ்புக்கில் ஏமாற்று வேலை அதிகரித்து வருவதும் உறவுகள் சிதைய முக்கிய காரணமாகும்.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
பதிவுகளில் மட்டும்தான் பாசமும், காதலும் இருக்கிறதே தவிர நேரில் பேசும் போது, பழகும் போது அக்கறையோ, காதலோ இருப்பதில்லை.

இணையம், சமூக வலைதளங்கள் தற்போது உறவுகளை அதிகம் சிதைக்கின்றன!
பயன் என்று பார்க்கும் போது வெளியூரில் இருப்பவர்களுடன் வீடியோ கால் மூலம் பேசலாம்.