Home இரகசியகேள்வி-பதில் உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால்?

உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால்?

69

உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால் ?
அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 35; என் கணவர் வயது, 45. எங்களுக்கு பள்ளி செல்லும் இரு குழந்தைகள் உள்ளனர். நான், தனி யார் பள்ளி ஆசிரியை. என் கணவர் ஒரு அலுவலகத்தில் பணியாற்று கிறார். அம்மா, என் பிரச்ச‌னையே, சில ஆண்டுகளாக,
என் கணவரிடமிருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காதது தான். என் கணவர், அதில் சிறிதும் நாட்ட மில்லாமல் இருக்கி றார். அவர் விரும்பும் போது மட்டும், ஏனோ தானோவென்று என் னை அழைக்கிறார். அதில், எனக்கு எந்த திருப்தியும் கிடைப்பதில்லை. பல முறை நல்ல விதத்தில், என் ஆசையை எடுத்து கூறியும், பலன் இல்லை. இதனால், எப்போதும் மன வேதனையுடன் இருப்பேன்.
என் பள்ளி நண்பர், நான்கு ஆண் டிற்கு முன், வேலை மாறுதலாகி, எங்கள் ஊருக்கு வந்தார். அவர் மிகவும் நல்லவர்; கவுரவமான குடும்பம். அவர் அப்பா – அம்மா, மனைவி மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர். அப்படிப்பட் டவர் நட்புக்காக, ஒரு பெரிய தவறை செய்து விட்டார்.
அவர் எங்கள் ஊருக்கு வந்த புதிதில், நான் அவரை சந்திக்கவும், பேசவும் நேர்ந்தது. அப்போது, அவர், ‘ஏன் உற்சாகம் இல்லாமல், ஒருவித சோர்வுடன் இருக்கி றாய்… திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லை யா?’ எனக் கேட்டார். அப் போதுதான், நான், என்னு டைய சுக துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொண் டேன். அதற்கு அவர், ‘உன் கணவரை நல்ல மருத்து வரிடம் அழைத்து செல்; அடிக்கடி பாசமுடன் நெரு ங்கு ; உன் தேவைகளை நல்ல முறையில் எடுத்துக் கூறு…’ என, பல யோசனைகளை கூறினார்.
நானும், அப்படியே நடந்தேன். ஆனால், அதில் எந்த ப யனும் இல்லை. இதையும் அவரிடம் கூறினேன். அத ற்கு அவர், மிகுந்த தயக்கத்துடன், ‘நீ விருப்பப் பட்டால் நான் உன்னை திருப்திபடுத்துகிறேன்; நீ விரும்பும் சமயத்தில் உனக்காக மட்டும்தான்…’ என்றார். நானும் நிறைய யோசித்து, பின் சம்மதித்து விட்டேன்.
எங்களை தவறாக நினைக்க வேண்டாம். நானும், ஒரு பெண்தான்; எனக்கும் ஆசை உண்டு. இருந்தாலும், நான், என் கணவருக்கும், அவர் மனைவிக்கும் செய்வ து துரோகம் என்று தெரிந்தே, அவர் தங்கி இருக்கும் அறைக்கு, வாரம் இருமுறை என, கடந்த நான்கு ஆண் டுகளாக சென்று வந்தேன். அம்மா எனக்கோ, அவரு க்கோ வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர், அந்த விஷயத்தில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினார்.
ஆனால் அம்மா, அவர் இப்போது மாற்றலாகி, அவரின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். என்னிடம் போனில் மட்டும் பேசுவார். ‘தொடர்ந்து உனக்கு சந்தோஷம் தர முடியவில்லை; என்னை மன்னித்துக் கொள். ஆனால், அதற்காக வருந்தாதே… இதுதான் உன் விதி! இனி, நீ, உன் குழந்தைகளை கவனி; அவர்களை நன்றாக படி க்க வைத்து, பெரிய அளவில் அவர்களை முன் னேற்று. நாம் இவ்வளவு நாள் செய்த தவறுக்கு ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கேள். உன் கணவர் மனது நோகாமல் பார்த்து கொள்; ஏழை முதியோருக்கு உதவு…’ என்று அறிவுரை கூறினார்.
ஆனால், என்னால் தான் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. எப்போதும், ஒரே டென்ஷன்… மாலையில் தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்ச‌னைகள் வருகி றது; பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியவில்லை.
அம்மா… இதற்கு தீர்வுதான் என்ன?
பின் குறிப்பு: என் அப்பா குடும்பமும், ஊரில் மிகவும் கவுரவமான குடும்பம். இந்த மாதிரி தவறு செய்யும் நிறைய பேருக்கு உங்கள் திட்டும், அறிவுரையையும் படித்திருந்தும், என் மனம் அமைதி அடையவில்லை.
இப்ப‍டிக்கு
உங்கள் அன்பு மகள்
அன்பு மகளுக்கு,
கட்டிய கணவருடன் கிடைக்காத தாம்பத்ய சுகத்தை, பள்ளி தோழனிடம் திருட்டுத்தனமாக பெற்றிருக்கிறா ய். பள்ளித்தோழன் இடமாற்றலாகி போனவுடன், உன க்கு கிடைத்த திருமண பந்தம் மீறிய சுகம் கிடைக்கா மல் போனது. அதனால், உனக்குள் மன அழுத்தம் ஏற் பட்டு, அந்த மன அழுத்தம், மூன்று விதமான விளை வுகளை ஏற்படுத்தி உள்ளது.
முதல் விளைவு, உணர்ச்சி கடலில் மூழ்கிப் போதல். இரண்டாவது விளைவு, அதீதமாய் உணர்ச்சிவசப்பட ல். மூன்றாவது விளைவு, உடல் மற்றும் மனதின் சோ ர்வு.
மகளே… திருமணமான சில ஆண்டுகளில், கணவன் மூலம் தாம்பத்யம் கிடைக்காமல், மன அழுத்தத்திற்கு உள்ளான பெண்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர் கள் அனைவருமே திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட முயற்சிப்பதில்லை. இது, நம் தலைவிதி என நொந்தபடி, வாழ்க்கையை தொடரும் பெண்கள், 30 சதவீதத்தினரும், இழந்த தாம்பத்ய சுகத்தை கணவனி டமிருந்து மீண்டும் அடைய, சாம, தான, பேத, தண்ட முறையில் ஈடுபடும் பெண்கள், 30 சதவீதத்தினர் உள்ளனர்.
கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று, மறுமணம் மூலம் முறையாய் தாம்பத்ய சுகம் அடைய முயற்சி க்கும் பெண்கள், 15 சதவீதத்தினர் உள்ளனர். பத்து பெண்களே திருமண பந்தம் மீறிய உறவு மூலம், தாம்பத்ய சுகம் கண்டு திருப்தி அடைகின்றனர்.
உன் கணவனின் இயலாமைக்கு, மித மிஞ்சிய குடிப் பழக்கம், ஒரு காரணமாக இருக்கலாம். உன் கணவ னுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழவு நோய் இருந்து, அதனால், ஆண்மை குறைவு ஏற்பட்டிருக்கலாம். அலு வலக பிரச்ச‌னைகளால், ‘மேல் மெனோபாஸ் பீரியடு’ வந்திருக்கலாம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா…
நான்கு ஆண்டுகள் திருட்டு தாம்பத்ய சுகம் அனுபவித் திருக்கிறாய். அதனால், ஏற்படும் குற்ற உணர்ச்சியை கை கழுவு. நீ செய்த தவறில், உன் பள்ளித்தோழனு க்கும் சம பங்கு உள்ளது. குற்ற உணர்ச்சி அவனுக்கு இல்லாதபோது உனக்கெதற்கு? ஏதோ சேவை செய்தது போல் நடித்திருக்கிறான் அந்த திருடன். கண்களை விழித்துக் கொண்டே கெட்ட கனவு கண்டதாய் நினை த்து நடந்ததை புறம் தள்ளு.
இனி, இதே காரணத்தை வைத்து, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடாதே. கணவரை மருத்துவ ரிடம் அழைத்துச் சென்று, நீரிழிவு நோயோ, உயர் ரத்த அழுத்தமோ இருந்தால், அதை கட்டுப்படுத்த தகுந்த மருத்துவம் பார். உன் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தால், அதை படிப்படியாக குறைக்க உன் கணவனோடு சேர்ந்து முயற்சி.
அனைத்தும் முயற்சித்தும், உன் கணவர் மூலம், உன க்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால், உன் நான்கு ஆண்டு கள்ள உறவுக்கு கிடைத்த தண்டனை என அமைதிபடு.
உன் இரு குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்து.
மனம் நிதானமடைந்தால் கழுத்து வலி, தலைவலி காணாமல் போகும்.