Home இரகசியகேள்வி-பதில் கேள்வி பதில்

கேள்வி பதில்

56

download (16)வணக்கம். நான் நடுத்தரக் குடும்ப த்தைச் சேர்ந்தவன்; தந்தையின் குல த்தொழிலையும் மீறி, என் முயற்சி யால், தாய்மாமன்கள் உதவியுடன் படித்து, அரசு இடைநிலை ஆசிரியரா க பணிபுரிபவன். தற்போது, என் கல் வித் தகுதியை பல படிகள் உயர்த்திக் கொண்டாலும், மேலும் பணம், பதவி , புகழ், அந்தஸ்து என, வாழ்வில் முன்னேற துடிப்பவன்.
தந்தையை விட தாய் மீது அதிக பற்றும், பாசமும் இருப்பதால்,
தந் தையால் கட்ட முடியாத சொந்த வீட்டை, என் தாய்க்காக லோன் போட்டு கட்டினேன். தற்போது, எனக்காகவும் ஒரு வீடு கட்ட வேண் டும் என்று நினைப்பவன். 23 வயதில் அரசு வேலைக்கு சென்ற நான், மூத்த தங்கை பிரசவம், அண்ணன் திருமணம், தம்பி படிப்பு என, குடும்பத்திற்காக பாடுபட்டு, 36 வயதில் என் சொந்த செலவிலே திருமணம் செய்து கொண்டேன்.  தற்போது, என் வயது 39
பக்கவாத தந்தை, வயதான தாய், உதவிட இயலாத அண்ணன் ஒரு புறமிருக்க, நிரந்தரமில்லாத நகை மதிப்பீடு வேலை செய்யும் தம்பி க்கும், சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவனும் கூட.
எனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தாயை எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு மனைவியையும் பிடிக்கும்.
திருமணமான பின், என் தாயின் ஆசிர்வாதத்துடன் தனி வீடு பிடித்து, மகிழ்ச்சியாக குடித்தனம் நடத்தி வந்தோம்.
என் மனைவி எம்.ஏ.,எம்.பில்., படித்தவர் என்பதால், அவள் விரும்பி க்கேட்ட வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களை (இந்த வச தி அவள் வீட்டில் கிடையாது) வாங்கிக் கொடுக்காமல், அவளு க்கு பி.எட்., சீட் வாங்கிக் கொடுத்து, நானே செலவு செய்து படிக்க வைத் தேன். அவள் பங்கிற்கு, தன் நகைகளை அடமானம் வைக்க கொடுத் திருந்தாள்.
மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில் என் அண்ணிமூலம், பிரச்னை வெடித்தது. என் அண்ணிக்கு, என்தங்கை மற்றும் என் அண்ணன் மீதிருந்த கோபத்தால், அவர்களை ஒதுக்க, என் மனைவியை கூட்டு சேர்த்துக் கொண்டார். அது வரை என் மீது பிரியமாக இருந்து, குடும்பத்தை நன்கு அனுசரித்துச் சென்ற என் மனைவி, என் அண்ணியின் போதனைக்கு பின், ‘தாமரை இலை தண்ணீர் போல’ நடந்து கொண்டாள். ஆனால், எப்போதும், அவள் குடும்பத்துடன் மட்டும் நகமும் சதையும் போல இணைந்திருப்பாள்.
மூன்று வயதில் தந்தையை இழந்த என் மனைவியின் வயது, 30; என்னை விட அவளுக்கு அவள் அம்மா மீது தான் பற்றும், பாசமும் அதிகம். என் மனைவிக்கு ஒரு அக்காவும் ஒரு அண்ணனும் உண்டு; மாமியார் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியை. அவர் பென்ஷன் மட்டுமே குடும்பத்தின் பிரதான வருமானம்; சிறிய வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
பி.எட்., முடித்த நிலையில், பிரசவத்திற்காக தாய்வீடு சென்றாள் என் மனைவி. நான் தனியார் மருத்துவமனையில், நிறைய செலவு செய்து, ஒன்பது மாதம்வரை கவனித்துக்கொண்டேன். ஆனால் பிர சவத்தை தனியார் மருத்துவமனையில் பாருங்கள் என்று வற்புறுத் தியும் கூட அவளோ, தன் வீட்டு குடும்ப பொருளாதார நிலையை எண்ணி, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தாள். சிசேரியன் மூலம், பெண் குழந்தை பிறந்தது.
ஆறு மாதம் கழித்து வருவதாக சொன்னவள் முதுகு வலி, கழுத்து வலி என்று சிரமப்பட்டு, ஒன்பது மாதம் கழித்து வந்தாள். குழந்தை க்கு பெயர் வைத்தபோது பிரச்னை; குழந்தையை அழைத்து வரப் போனபோது பிரச்னை என இருந்தாலும், குழந்தை வந்தபின், ஓரளவு சந்தோஷமாய் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை.
அவள் முதுகு வலியால் கஷ்டப்பட்டதால், வீட்டிலிருக்கும் தருணங் களில் என்னால் முடிந்த அளவு, குழந்தையை கவனிப்பதில், சிறு உதவிகள் செய்துகொண்டு தான் இருந்தேன். ஆனால், என் பெற்றோ ருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டியிருந்த தால், வருமானம் போதவில்லை. அதனால், ரியல் எஸ்டேட், வழக்க றிஞர் ஆலோசனை போன்ற சிறு சிறு சைடு பிசினஸ் செய்து வந் தேன். இதனால், வீட்டில் அதிக நேரம் இருக்க முடியாத நிலை.
அவளது முதுகு வலிக்காக, சிறப்பு மருத்துவர்களிடம் மருத்துவம் செய்து கொண்டிருந்த நிலையில், அவள் அம்மா வீட்டுக்கு போவ தாக கூறிய போது, ‘உன் அம்மாவுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் ….’ என்று நான் சொன்னதையும் மீறி, மறுநாள் காலை, என்னிடம் சொல்லாமல் அவளது தாய் வீட்டிற்கு சென்று விட்டாள்.
கோபமும், வேதனையும் அடைந்த நாங்கள் பேசாமல் இருந்து விட் டோம். மறுநாள், எஸ்.எம்.எஸ்.,தான் அனுப்பினாளே ஒழிய, போன் கூட செய்யவில்லை; என் சொல்லை மீறி போனதற்காக வருத்தமு ம் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு தடவை, என் குடும்பத் தார் நலம் விசாரிக்க சென்றபோது, அதுபற்றி மட்டும் தெரிவித்து விட்டு, ‘கொஞ்ச நாள் கழித்து கொண்டு வந்துவிடுகிறேன்; இவ் விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம்…’ என்று கூறியுள்ளார் என் மாமியார்.
பின், ஒரு நாள் என் மனைவியையும், குழந்தையையும், மருத்துவ மனையில் சேர்த்து இருப்பதாக கூறி, என் மாமியார் எனக்கு போன் செய்யவே, வருத்தத்தில் இருந்த நான் போய்ப் பார்க்கவில்லை.
பின் ஒன்றரை மாதம் கழித்து, என் தாயார் மட்டும் சென்று அவளை ப் பார்த்தபோது, அவள் அம்மா, ‘உங்கள் மகன் ஒழுங்காக மருத்து வம் பார்க்கவில்லை; வேலை வேலை என்று அலைந்து, என் மகள் உயிருக்கு உலை வைத்து விட்டார்…’ என்று, என் மீது குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.
அவளது அண்ணனுக்கும், தாய்மாமனுக்கும் போன்செய்து, ‘என் மீது எந்த தவறும் இல்லை.’ என்று சொன்னபோது, ‘உங்கள்மீது தான் தவறு; நீங்கள் சரியாக கவனிக்கவில்லை. எங்க வீட்டு பிள் ளை அங்கு வர மாட்டாள்…’ என்று சொல்லி விட்டனர்.
அதன் பின், இரண்டு மாதம் வரை எந்த தொடர்புமில்லாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், என் மகளின் பிறந்த நாள் வந்தது. அதை வைத்து, என் தாயார் அவரது குடும்பத்தாரிடம் சென்று, ‘போனது போகட்டும்; பிறந்த நாள் வருகிறது. மாத்திரை, மருந்துகளை எடுத் துட்டு வீட்டுக்கு வரச் சொல்லுங்க நாங்க பாத்துக்கிறோம்…’ என்று சொல்லியுள்ளார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல், எங்களை மரியாதைக்குகூட அழைக்காமல், அவர்களே பிறந்த நாள் கொண்டாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன் பின், அவளது தோழிகள் மூலம், அறிவுரை சொல்லச் சொல் லியும், என் குடும்ப நண்பர் மற்றும் வக்கீல் மூலம் ஆலோசனையும் கொடுத்த பின்பும், அவள் வரவில்லை.
அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று எனக்கு தெரிய வில்லை.
எனக்கு மனைவியும், என் குழந்தையும் வேண்டும்; இனி, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் அம்மா.
பதில்
உன் கடிதம் முழுவதும் ஈகோவும், சுயதம்பட்டமுமே நிரம்பி வழிகி றது. ஒரு தலைமுறைக்கு முந்திய ஆண்களின் மனோபாவத்தில் இருக்கிறாய்; முதலில் உன் எண்ணத்தை மாற்றிக் கொள்.
தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தா ய்; சகோதர, சகோதரிகள் நல் வாழ்விற்கு பாடுபடுகிறாய் எல் லாம் சரிதான்; ஆனால், உன்னை நம்பி வந்த மனைவிக்கு என்ன செய்தாய்? அவள் ஆசைப்பட்டு வீட்டு உபயோகப் பொருள் கேட் டால், அதை அவளின் ஏழ்மையை சுட்டி காட் டி மறுத்திருக்கிறாய். நீ அவளை பி.எட்., படிக்க வைத்தது நல்ல காரியம் தான் என்றா லும், அதை பாராட்ட முடியாத அளவுக்கு, உன் சுயநலம்தான் அதில் அதிகம் தெரிகிறது. அறுசுவை உணவை வரி சையாய் வைத்து, ஓர த்தில் கொஞ்சூண்டு நரகலை வைக்கும் குணம் உனக்கு இருக்கி றது; அதை மாற்றிக் கொள்.
கட்டிய மனைவிக்கு மருத்துவம் பார்த்ததை எல்லாம் பெரிய விஷய மாக நினைக்கிறாய். உனக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால், அவள் என்ன உன்னை தூக்கி குப்பையிலா போட்டு விடுவாள்… இல் லை தானே! கணவன், மனைவி உறவு என்பது கொடுக்கல், வாங் கல் வியாபாரமில்லை தம்பி. உனக்கு இதைச் செய்தேன்; எனக்கு அதை செய் என, வரவு – செலவு கணக்கு பார்க்க!
வெவ்வேறான விருப்பு, வெறுப்புகளை கொண்ட இரு மனித ஜீவன் கள் திருமண பந்தத்தில் இணைந்து ஒரு கூட்டுப் பறவையாய் வசிக் க வேண்டுமென்றால், அங்கே விட்டுக் கொடுத்தலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பெருந்தன்மையும் வேண்டும். உனக்கு இவை இரண்டுமே இல்லை; ஆனால், தலைநிறைய ஆண் என்கிற, ‘ஈகோ’வை மட்டும் கூடை கூடையாய் சுமந்து கொண்டிருக்கிறாய். அந்த ஈகோவை கொஞ்சம் தூக்கி எறி; உன் வாழ்வு சுகப்படும்.
பணம் வாழ்க்கைக்கு தேவைதான்; ஆனால் பணமே வாழ்க்கையா கி விடாது. ‘என்னம்மா… இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு; நீ கொஞ்ச ம்நேரம் ஓய்வெடு; நான் இந்த வேலையைச் செய்றேன்…’ எ ன்ற ஆறுதல் வார்த்தையை அ வள் உன்னிடமிருந்து எதிர்பார் த்திருக்க லாம். ஆனால் நீயோ, உன் பணத் தேடலில், மனைவி க்கு எது தேவை என்பதை மறந்து விட்டாய். உன் தாயின் மேல் காட்டும் அக் கறையில், அன்பில் ஒரு சிறு துளியாவது உன் மனைவி மீது காட்டி யிருந்தால், அவள் தன் உடல் நோவுக்கு, மனதிற்கு வைத்தியம் தேடி தாய் வீடு சென்றிருக்க மாட்டாள். உன் மனைவி மீது உனக்கு உண் மையிலேயே பிரியம் இருந்திருந்தால், அவள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடனேயே உன் கால்கள் உன்னையும் மீறி அங்கே சென்றிருக்கும். ஆனால், அப்போதும், ‘நம் மிடம் சொல்லாமல் போனவளை நாம் ஏன் போய் பார்க்க வேண்டு ம்’ என்ற, ‘ஈகோ’ தான் உனக்கு பெரிதாக தெரிந்திருக்கிறது. இது மனைவியை நேசிக்கிற, மதிக்கிற மனிதன் செய்ற காரியமா? சரி… மனைவியை பார்க்கத்தான், ‘ஈகோ’ இடிக்கிறது. நீ பெற்ற குழந்தை என்ன பாவம் செய்தது… பிள்ளை பாசத்தை விட, ‘தான்’ என்கிற அகங்காரம் தான் உன்னை ஆட்டி வைக்கிறது.
உன் தாயாருக்கோ… உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மரும களையும், பேத்தியையும் பார்க்க ஒன்றரை மாதம் தேவைப்பட்டி ருக்கிறது. மகனே… உங்களு டைய பிரச்னைக்கு உங்கள் இரு வருடைய ஈகோ மட்டும் காரண மல்ல; உன் அம்மாவும், மாமியா ரும் தான் காரணம். வீட்டுக்குள் பெண்கள் நடத்தும் பாலிடிக்ஸ் இருக்கிறதே.. அது, அரசியல்வாதிகளின் பாலி டிக்சை விட மோசமானது. சின்ன பிரச்னையை இத்தனை மாதங்க ளுக்கு நீட்டி முழக்கியதில், உங்கள் இருவருடைய குடும்பத்தாருக் கும் பங்கு உண்டு.
நீ, உன் தாய்க்கு தரும் முக்கியத்துவத்தை தனக்கு தருவதில்லை என்று உன் மனைவி நினைத்திருக்கலாம். தன்னைப் பற்றி, குழந் தையை பற்றி கவலைப்படாமல், தன் குடும்பத்தையே பார்க்கும் இவரை, இப்படி பிரிந்திருந்தால்தான் வழிக்கு கொண்டு வர முடியும் என்றும், குழந்தையைத் தேடி கணவர் வந்தால், தன் தாய்வீட்டிலோ அல்லது அருகிலோ குடும்பம் நடத்த வைத்து விடுவோம் என்று கூட திட்டமிட்டிருக்கலாம்.
இனி, நீ செய்ய வேண்டியது என்ன தெரியுமா மகனே?
அவளாகத் தானே போனாள் அவளாகவே வரட்டும் என, வீம்பாக காத்திருக்காமல், நீயே நேரில்சென்று உன் மனைவியை பார்; மனம் விட்டு பேசு. அவள் உடல்நலம் குறித்து கனிவாக விசாரி. உண்மை யான காதல், உங்கள் இருவருக்குள் இருந்தால், அவரவர் பிடிவாதத் தை தலைமுழுகி விட்டு, குழந்தைக்காக இருவரும் ஒன்று சேரப் பாருங்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்!

Previous articleதலைவலி
Next articleபெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு?