Home பெண்கள் தாய்மை நலம் பெண் கர்ப்பகாலத்தில் உறவுகொள்ளும்போது ஆண்கள் கவத்தில் கொள்ளவேண்டியது

பெண் கர்ப்பகாலத்தில் உறவுகொள்ளும்போது ஆண்கள் கவத்தில் கொள்ளவேண்டியது

156

பெண்கள் நலம்:கர்ப்ப காலத்தில் உடல் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் இருவரும் மனம் ஒத்த நேரத்தில் உறவில் ஈடுபட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உறவிற்காக மனைவியை கர்ப்ப பாலத்தில் வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளனர்.கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.

அவர்கள் விரும்பும் நெருக்கம் செக்ஸாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆழமான முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக அணைப்பு இவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என்று அர்த்தமில்லை. கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பு உள்ளது. இதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரு மாதங்களிலும் செக்ஸ் உறவு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் உறவில் ஈடுபட்டால் பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.

அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கையாக நிகழகூடியது. இதனால் அந்த சமயத்தில் தங்களது பெண் துணை மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு.

ஆனால் இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பாசத்தை பொழிய வேண்டிய தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் செக்ஸ் உறவை மேற்கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் நன்றாக உறவில் திளைக்க முடியும் என்பதே உண்மை

Previous articleகட்டிலில் உறவில் பெண் முதல்ல அமைதியா இருக்க காரணம் தெரியுமா?
Next articleஅதிகாலையில் கணவனும் மனைவியும் ஒன்று கூடினால்.. என்ன நடக்கும் தெரியுமா.?