Home காமசூத்ரா காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?

காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?

37

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகையாகாது.
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும்.

காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்.

நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம்.

கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, “சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்’ என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.

அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள்.

காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது.

எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே.

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன.

அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.

அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.

அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.