Home குழந்தை நலம் பிறக்கப்போகும் குழந்தை கொழுகொழுவென இருக்க என்ன காரணம் தெரியுமா?

பிறக்கப்போகும் குழந்தை கொழுகொழுவென இருக்க என்ன காரணம் தெரியுமா?

27

captureவயதிற்கு மீறிய அளவில் குழந்தைகள் உடல் எடை கூடுதல், பருமனைடைதல் தொடர்பாக ஒரு ஆய்வை அமெரிக்காவில் உள்ள மாயே குழந்தைகள் மருத்துவ மையம் நடத்தியது.

அந்த ஆய்வில் வளரும் குழந்தைகளின் உடலில் சுரக்கும் ஸ்பெக்ஸுன் என்ற ஹார்மோன் சுரப்பு அளவை ஆய்வு செய்தது. முதன் முறையாக இது போன்ற ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஸ்பெக்ஸுன் ஹார்மோன் உடலில் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த அழுத்தம்,உப்பு, நீர்சத்து ஆகியவற்றின் சமநிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன் ஆகும்.

இந்த ஸ்பெக்ஸுன் ஹார்மோனுக்கும், உடல் எடைக்கும் தொடர்புள்ளது. குழந்தைகள் அல்லாத வயதிற்கு வந்தவர்களிடையே ஆய்வு மேற்கொண்ட போது, இவர்களுக்கு ஸ்பெக்ஸுன் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

இக்குழுவினர் தற்போது நடத்திய ஆய்வில் குழந்தைகள் இளம் வயதிலே ஸ்பெக்ஸுன் ஹார்மோன் சுரப்பு குறைவாக உள்ளவர்கள் வளர வளர உடல் பருமனுக்கு ஆளவதாக தெரியவந்துள்ளது.

மாயே நடத்திய ஆய்வில் 12 முதல் 18 வயது வளர் இளம் பருவத்தினர் ஆய்விற்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதில் அதிகமான ஸ்பெக்ஸுன் சுரப்பு உள்ள குழந்தைகளை விட குறைவான சுரப்பு உடைய குழந்தைகள் 5 மடங்கு வரையும் உடல் எடை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே உடல் பருமனுக்கு ஸ்பெக்ஸுன் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருப்பது ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் இதை மேலும் உறுதிபடுத்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சீமா குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்பெக்ஸுன் சுரப்பு ஹார்மோன்களை கட்டுப்படுத்தி குழந்தைகளின் உடல்பருமனை தடுக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் கூறினார்