Home பாலியல் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும் உணவுகள்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும் உணவுகள்

125

girls periods time:பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரப் போக்கு காரணமாக உடலில் ஏற்படும் வலியை குறைக்க உதவும் உணவுகளை பற்றி பார்க்கலாம்.

வாழைப்பழம்:

மாதவிடாயின் போது வலியால் தூக்கமில்லாமல் தவிக்கும் பெண்கள் இரவில் வாழைப்பழம் உண்பதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதில் உள்ள மெலடோனின் உடலின் தூக்க சுழற்சியை சீர் செய்து நல்ல தூக்கத்தை வரவைக்குமாம். மேலும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உடலின் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரித்து உடலுக்கு பலம் சேர்க்குமாம்.

கீரைகள் :

ரத்தப்போக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கும் பட்சத்தில் உடலில் இரும்புச் சத்து குறைந்து ரத்த சோகை ஏற்படும். இதனால் இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது. உதிரப்போக்கினால் ஏற்படும் களைப்பை போக்க கீரை சிறந்த உணவாக கருதப்படுகிறது.

மீன் :

மாதவிடாயில் ஏற்படும் வயிற்று வலிக்கு நிரந்தர தீர்வு இல்லை எனிலும், ஓரளவிற்கு சமாளிக்க சூறை மற்றும் சால்மன் போன்ற மீன் வகைகளை சப்பிடலாம். இதில் உள்ள கொழுப்பு ஆசிட் மற்றும் ஒமேகா 3 உடல் தசைகளை வலுப்படுத்துவதுடன் வயிற்று வலியை கட்டுப்படுத்தும்.

கசகசா :

கசகசாவை மாதவிடாய் காலத்துக்கு ஒருவாரத்துக்கு முன்பிலிருந்தே பாலில் அரைத்துக் கலந்து குடித்துவர, கை, கால், இடுப்பு, உடல் சோர்வு ஆகிய அனைத்தும் நீங்கிவிடும்.

தண்ணீர் :

மாதவிடாய் காலத்தில் உடலில் உள்ள நீர் சத்து முழுவதுமாக குறைந்துவிடும் என்பதால், குறைந்தது 8-10 டம்பளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்துக் குடித்தால் மேலும் தெம்பு கிடைக்கும்.

சாக்லேட் :

ஊட்டச்சத்து குறையும் மாதவிடாய் காலத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ள டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள செரோடொனின் மனநிலையை சீராக்கி வயிற்று வலியை குறைக்கும்.

Previous articleகள்ளக்காதல் சரியா? பிழையா? இதுக்கு என்ன காரணம்?
Next articleபெண்களே உங்களுக்கு இலகுவாக கர்ப்பம் தரிக்க ஆசையா? கவணுடன் இப்படி சேருங்கள்