Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்பு வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது காரணம்...

பெண்ணுறுப்பு வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது காரணம் என்ன ?

50

இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது.
சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவதுபோல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர்போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் காரணமும் குணமும் மாறுபட அதன் நிறமும், தன்மையும் மாறுபடும்.
இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருப்பையின் ஒருபகுதியையோ அல்லது பலபகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும்.
இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் போவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு, சிறுநீர் போகும்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
உடல் மெலிந்து வரும். இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிகவலியை உண்டாக்கும்.உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப்பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஏற்படுவதோடு, பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஆகியவையும் ஏற்படும்.
தவறான உணவுப்பழக்கங்கள், சுகாதாரமற்ற உள்ளாடைகள், ரத்தசோகை உள்ளவர்களுக்கு, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் அதிக மனஉளைச்சல் மனபயம், போன்றவற்றால் இந்த நோய் வர வாய்ப்புண்டு.
இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல்விட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு கரணமாக வந்துவிடும் மேற்குறிப்பிட்ட இவ்வறிகுறிகளும் இணைந்து ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் பின்விளைவுகளிலிருந்து தவிர்த்துகொள்ளலாம்.