Home பெண்கள் பெண்குறி இன்றைய இளம் பெண்களின் பெண்உறுப்பும் கன்னித்திரையும்!

இன்றைய இளம் பெண்களின் பெண்உறுப்பும் கன்னித்திரையும்!

367

ஒரு பெண்ணுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வெளியை தாண்டும் உரிமை உள்ளவன் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன.

திருமணத்துக்கு முன் பெண்கள் உடலுறவில் ஈடுப்படக்கூடாது, கணவனுடன் இணைந்துதான் அவள் முதலில் உடலுறவை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்புறுப்பின் கவசமான கன்னித்திரை கிழிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரத்த கசிவு ஏற்படுவது தான் முதலிரவில் நிகழ வேண்டிய முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இதை வைத்து ஒரு பெண்ணை சந்தேகப்படுவது தேவையற்றது என்கிறது மருத்துவம்.

இந்த கன்னித்திரை கிழிபடாமல் இருந்தால் தான் அந்தப்பெண் “செக்ஸ்” அனுபவம் பெறாத கன்னி பெண் என்று நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவம். மருத்துவ ரீதியாக வெறும் 42 சதவீகித பெண்களுக்கு தான், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது கன்னித்திரை கிழிகிறது. 47 சதவீகித பெண்களுக்கு இது எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி மூடிக்கொள்ளும். இவர்களுக்கு முதல் உறவின் போது கிழியாது. ரத்த கசிவு, வலி எதுவும் இருக்காது. இந்த உண்மையை தடையவியல் நிபுணர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

கன்னித்திரை எலாஸ்டிக் தன்மை உள்ளது. இரண்டு வகை பெண்களை தவிர இன்னொரு வகை பெண்களும் உண்டு. 11 சதவீதம் உள்ள இவர்களது கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் சின்ன வயதிலேயே, உடற்பயிற்சி செய்யும் போது, சைக்களில் காலை தூக்கி போட்டு ஓட்டும் போதோ திரை கிழிந்துவிடும். சில பெண்கள் கன்னித்திரை இல்லாமலேயே பிறக்கிறார்கள். என்னதான் விஞ்ஞான வளர்ச்சி உச்சம் தொட்டாலும் சில அடிப்படையான விஷயங்களுக்கு இன்னமும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் கன்னித்தன்மை.

கீழைநாடுகளில் மட்டும் அல்லாது மேலை நாடுகளிலும் இதற்கு மதிப்பு இருக்கிறது. கல்லூரி படிப்பிற்காக கன்னித்தன்மையை விற்க முற்படும் பெண்களின் அறிவிப்பு அவ்வப்போது இணையதளங்களை ஆக்கிரமிக்கிறது. அதன் ஏலத்தொகையும் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.

கன்னித்தன்மை இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கேயும் அவர்களை கட்டுபடுத்தவும், அவர்களின் செயல்களை வழிமுறை படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் புனித தன்மை கன்னித்தன்மையை காப்பதில் தான் உள்ளது என்றே உலகின் எல்லா கலாச்சாரங்களும் வலியுறித்தி வந்துள்ளன. மாறிவரும் பொருளாதார அமைப்புகள், தொழில்மயமாதல், உலக மயமாதல் போன்றவற்றால் நகர்புறத்து ஆண்களிடம், பெண்களைத் தேர்ந்தெடுக்கும் முறை கன்னித்தன்மை குறித்த எண்ணங்கள் மாறியுள்ளதாக சொல்லப்பட்டாலும் இன்னமும் பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள்தான் அதிகமாக நடக்கின்றன.

உலகம் முழுவதும் பரிசுத்தமான கன்னிப் பெண்ணுக்கு மிக மரியாதை உண்டு. ஒரு பெண் கன்னிதானா என்று தெரிந்து கொள்வதற்கு பண்டையக்காலம் தொட்டு நிறைய சோதனைகள் வைத்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் செவ்விந்திய இனத்தை சேர்ந்த “அகோமாவி பழங்குடிகள்” ஒரு சம்பிரதாயத்தை மேற்கொள்கிறார்கள். ஊரில் திருவிழா நடக்கும் போது, கல்யாண வயதில் உள்ள கன்னிப்பெண்கள் அனைவரையும் வரவழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் மணிக்கணக்கில் நீண்டுக்கொண்டே போகும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான், அந்தப்பெண் திருமணத்துக்கே முன்பே திருட்டுத்தனமாக கன்னித்தன்மையை பறிகொடுத்துவிட்டாள் என்று முடிவு செய்துவிடுவார்கள். இந்தப் பழிச்சொல்லுக்கு பயந்து பெண்கள் உயிரைக் கொடுத்து நடனமாடுவார்கள். நடனத்தின் போது உயிரை விட்டப் பெண்களும் உண்டு.

ஆனால் எகிப்தில் கன்னிப் பெண்களுக்கு வேறுவிதமான சோதனை. அங்கு மனைவியாக வரும் பெண்ணின் கன்னித்திரையை கிழிப்பதற்கு என சில மருத்துவச்சிகள் உண்டு. கிராமத்தில் பிரசவம் பார்க்கும் வயதான பெண்ணிற்குத்தான் கன்னித்திரையை கிழிக்கும் உரிமை உண்டு. முதலிரவுக்கு முன் புதுப்பெண் இருக்கும் அறைக்கு அந்தப் பெண் நுழைவாள். ஒரு மென்மையான, வெண்மையான பட்டுத் துணியை விரலில் சுற்றிக்கொள்வாள். அதன் மூலம் கன்னித்திரையை கிழிப்பாள். அப்போது படியும் ரத்தக்கறை துணியை அவள் வெளியில் கொண்டு வந்து கூட்டத்தில் காண்பிப்பாள். ரத்தக்கறை இருந்தால் தான் முதலிரவு. கறை இல்லாவிட்டால் அந்தப் பெண் கற்பிழந்தவள் என்று கூறப்பட்டு முதலிரவு, திருமணம் போன்றவை ரத்துச் செய்யப்படும். இன்றும் இப்பழக்கங்கள் எகிப்திய கிராமங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தை வைத்துபல மருத்துவச்சிப் பெண்கள் ஆயிரம், ஆயிரமாக சம்பாதிக்கிறார்கள்.

பெண் ஏற்கனவே உறவு கொண்டிருந்தல் மட்டுமின்றி இயற்கையிலேயே சிலப் பெண்களுக்கு கன்னித்திரை இருக்காது. இதை மருத்துவம் இப்போதுதான் தெளிவு படுத்தியுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பெண்களுக்காகவே ரகசிய பேரம் நடத்தப்படுகிறது. “பணமோ,பொருளோ” பரிசாக வாங்கிக்கொண்டு, ரத்தக்கறையை மருத்துவச்சிகள் வரவழிக்கிறார்கள். மருத்துவச்சி இடுப்பில் ஒரு சுருக்குப்பையை வைத்திருப்பாள். அதில் கண்ணாடித் துகில்கள் இருக்கும். அதை விரலில் சுற்றி இருக்கும் துணியில் தூவி பெண்ணிடம் காயத்தை ஏற்படுத்துகிறாள். அதன் பின் அந்த ரத்தத்தை துணியில் சேர்த்து ரத்தக்கறையை ஏற்படுத்தி வெளியே செல்வாள். இதன் மூலம் அந்தப் பெண் கன்னித்தன்மை உள்ளவளாக நிருபிப்பாள்.

கிரீஸ் நாட்டில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காக கட்டிலை அலங்கரிக்கும் போது தூய்மையான வெள்ளைப் படுக்கையை விரிப்பார்கள். மறுநாள் காலை பெண்ணின் தாயும், மணமகனின் தாயும் ஒன்றாக சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். ரத்தக்கறை படிந்த அந்தப்படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை வீட்டு முன்புறம் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்கவிடுவார்கள். ரோட்டில் போகிறவர்கள், வருகிறவர்கள் கண்ணில் அது படும். “நாங்கள் எங்கள் பெண்ணை ஒழுக்கமாக வளர்த்திருக்கிறோம்” என பெருமைப் பட்டுக்கொள்ள செய்யப்படும் செயலாகும். இந்த படுக்கை விரிப்பை பார்க்கவரும் உறவினர்களுக்கு விருந்து சாப்பாடு உண்டு. எல்லோரும் பார்த்தபிறகு அந்த படுக்கைவிரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக்கப்படும். அவர் அதை பத்திரமாக பாதுகாத்து வருவார். பின்னால் எப்போதாவது சண்டை வந்தால், பஞ்சாயத்து செய்ய அந்தப் படுக்கைவிரிப்பு ஒரு ஆவணமாக அமையும்.

ஒரு பரிசுத்தமான பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டவர் அவ்வளவு சாமான்யமாக அவளை விவாகரத்து செய்து விட முடியாது. சந்தேகம் நிருபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் முறித்துக்கொள்ளும் உரிமை மணமகன் வீட்டார்க்கு உண்டு. அதுமட்டுமில்லை அந்த பெண்ணின் குடும்பத்தாரை ஊரைவிட்டே ஒதுக்கி வைப்பார்கள். இந்தப் பழக்கம் கிரீஸில் மட்டுமல்ல ரஷ்யா, எகிப்து, ஆப்ரிக்கா, அரபு நாடுகள் என்று பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் புதிது புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டன. அல்ஜீரியாவில் முதலிரவின் போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால் தந்தையும், சகோதரர்களும் சேர்ந்து அப்பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்பது வழக்கம்.

ஆனால் மருத்துவத்தை பொறுத்தவரை உடலில் சில உறுப்புகள் தேவை இல்லாமல் இருக்கின்றன. உதாரணத்துக்கு குடல்வால். அதனால் உடலுக்கு எந்த ஒரு செயலும் இல்லை. கன்னித்திரையும் அப்படிதான். அது ஏதோ ஒரு அலங்காரப் பொருள் போல் பெண்ணின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். இதனால் தேவையில்லாத சங்கடங்கள் எல்லாம் பெண்ணுக்கே. ஆனால் ஒரு பெண்ணுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் கன்னித்திரை என கருதுகிறான் மனிதன். அது ஒருவகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வெளியை தாண்டும் உரிமை உள்ளவன் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன. திருமணத்துக்கு முன் பெண்கள் உடலுறவில் ஈடுப்படக்கூடாது, கணவனுடன் இணைந்துதான் அவள் முதலில் உடலுறவை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்புறுப்பின் கவசமான கன்னித்திரை கிழிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரத்த கசிவு ஏற்படுவது தான் முதலிரவில் நிகழ வேண்டிய முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

பழங்குடிகள் முதல் நாகரீகம் அடைந்தவர்கள் வரை என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கில்லை. உண்மையில் பெண் நிறைய கொடுமைகளை கடந்தே வந்திருக்கிறாள். ஆணாதிக்கவாதிகளின் மூட நம்பிக்கைகளால் ஆனா துரதிஷ்டம், பெண்ணும் அதற்கு உடந்தை ஆனதுதான் வருந்த வேண்டிய விஷயம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த கால கட்டத்தில் எதோ கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்துவது போன்று, கன்னித்திரையை புதிதாக பொருத்தி கொள்ளுகிறார்கள். இந்த ஆப்ரேஷனின் போது பிறப்புறுப்பின் உட்புற சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறர்கள். மீண்டும் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் வீட்டு பெண்கள், தங்களின் 25-வது திருமண நாளுக்கு முன்பு இந்த ஆபரேஷனை செய்துக்கொள்ளுகிறார்கள். விலைமாதர்களில் நிறைய பேர் தங்களை கன்னியராக காட்டிக்கொள்ள இது போன்ற ஆபரேஷன் செய்து கொள்வது மேலைநாடுகளில் அதிகரித்து விட்டது. இதனால் “கன்னித்திரை” என்பது பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி படுத்தும் ஒரு விஷயம் இல்லை என்றாகிவிட்டது. இதை வைத்து ஒரு பெண்ணை சந்தேகப்படுவது தேவையற்றது என்கிறது மருத்துவம்.