Home சூடான செய்திகள் பெண்களுக்கு இந்த மாதிரி ஆண்களைத் தான் ரொம்பப் பிடிக்கும்…

பெண்களுக்கு இந்த மாதிரி ஆண்களைத் தான் ரொம்பப் பிடிக்கும்…

30

ஆணோ பெண்ணோ வயது வித்தியாசம் பார்க்காமல் சைட் அடிப்பதுதானே இயற்கை. சைட் அடிப்பது என்றால், பசியோடு இருக்கும் நாய்க்குட்டி எலும்புத்துண்டை பார்த்ததும் ஓடுவது போல அல்ல. உண்மையிலேயே ‘சைட்‘என்பது மனதுக்கும் கண்ணுக்குமே தெரிந்து, ரகசியமாகப் பார்ப்பது தான்.

அப்படியே எடுத்து விழுங்குவது போல பார்ப்பதற்கும் சைட் அடிப்பதற்கும் சிறு நூழிலை தான் வித்தியாசம். ஆண்கள் பொதுவாகவே, எடுத்து விழுங்குகிற ரகம் தான். ஆனால், சைட் அடிப்பதில் உண்மையாகவே பெண்கள்தான் கைதேர்ந்தவர்கள். எப்படின்னு தெரிஞசிக்கணுமா?

பெண்களுக்கு மத்தியில், உயரமான ஆண்களே அதிகம் விரும்பப்படுவார்கள். அதிலும் இப்போதெல்லாம் ராணா ஃபீவரில் லிட்டில் கேர்ள்ஸ் சுற்றித் திரிகிறார்கள். பெண்களின் அகராதியைப் பொருத்தவரையில், உயரமான ஆண்கள் தான் ஹேண்ட்சம்.

கிளீன்ஷேவ் ஆண்களைவிட அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடைய ஆண்களே பெண்களுக்கு கனவு நாயகர்கள். குறுந்தாடி ஆண்கள் மேல் பெண்களுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

பெண்களுக்கு மீசை வைத்த ஆண்களை மிகப்பிடிக்கும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலருக்கும் மீசையே சரியாக முளைப்பதில்லை. அதனால் கிளீன் ஷேவ் செய்து கொள்கிறார்கள் பலர். அதனால், பெண்கள் அதில் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.

சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் ஆண்களைப் பெண்கள் ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பதுண்டு. அதேபோல், கலைஞ்ச முடி,ஸ்பைக் வைத்த பசங்க கூட ஊகே தான். ஆனா, ஹேர்ஸ்டைல்-ங்கிற பேருல அங்கங்கே கீறிட்டு சுத்தற பாய்ஸ்-லாம் பெண்களைப் பொரத்தவரை காமெடி பீஸ்கள் தான்.

பைக்கில் வந்து சீன் போடும் ஆண்களைப் பார்த்தால், கல்லை விட்டு எறியும் அளவுக்கு பெண்கள் மனதுக்குள் ஆத்திரம் அடைவார்கள். சத்தியமா இம்ப்ரஸ் ஆக மாட்டார்கள்.

இம்ப்ரஸ் செய்கிறேன் என்ற பெயரில் காமெடி செய்பவர்களை விட பெண்களைப் பார்த்தால், இயல்பாகக் கடந்து போகும் ஆண்களைத்தான் பெண்கள் கவுக்க நினைப்பார்கள்.